ராமதுரை
சுப்பிரமணியம் ராமதுரை (பிறப்பு: 6 அக்டோபர் 1944)[2] என்பவர் இந்திய அரசின் திறன் மேம்பாட்டுக்கான தேசியக் குழுவில் இந்தியப் பிரதமரின் ஆலோசகராக இருந்தார்.[3] இவர் இந்திய ஒன்றிய அமைச்சருக்கு இணையான பதவியை வகித்தார். மேலும் தேசிய திறன் மேம்பாட்டு முகமை (என்.எஸ்.டி.ஏ) மற்றும் தேசிய திறன் மேம்பாட்டு கழகம் (என்.எஸ்.டி.சி) ஆகியவற்றின் தலைவராக இருந்தார்.[4][5] தற்போது, இவர் மிசன் 'கர்மயோகி பாரத்' தலைவராக உள்ளார். அது இந்திய அதிகாரததுவத்தை மாற்றுவதையும் எதிர்கால அரசு ஊழியர்களை தயார்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட குடிமைப் பணிகள் திறன் மேம்பாட்டுக்கான தேசியத் திட்டமாகும்.[6] [7][8]
சு. இராமதுரை | |
---|---|
காலநிலை நெருக்கடி 2.0 மாநாடு 2022 | |
பிறப்பு | 6 அக்டோபர் 1944[1] நாக்பூர், பிரித்தானிய இந்தியா |
தேசியம் | இந்தியன் |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஹன்ஸ்ராஜ் கல்லூரி, தில்லி பல்கலைக்கழகம் இந்திய அறிவியல் நிறுவனம் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்) எம்ஐடி ஸ்லோன் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் |
பணி | தலைவர், கர்மயோகி பாரத் கெளரவ தூதர், இந்தியாவுக்கான உருகுவே தூதரகம் தலைவர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் தலைவர் கலாசேத்திரா |
அறியப்படுவது | முன்னாள் சி.இ.ஓ. மற்றும் தலைமை செயல் அதிகாரி- டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், முன்னாள் தலைவர்- என்.எஸ்.டி.சி மற்றும் என்.எஸ்.டி.ஏ |
வாழ்க்கைத் துணை | மகாலட்சுமி இராமதுரை |
பிள்ளைகள் | 1 |
விருதுகள் | பத்ம பூசண் CBE |
இவர் டாடா குழுமத்தின் கூட்டாண்மை சமூக பொறுப்புத் திறன் மேம்பாட்டு முன்முயற்சியான டாட்டா ஸ்டிரைவின் ஆலோசனைக் குழுவின் தலைவராக உள்ளார்,[9] இது இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, தொழில்முனைவு மற்றும் சமூக நிறுவனங்களுக்கான திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.[10][11]
இவர் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ் ) நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாகயாகவும் (சி.இ.ஓ), தலைமை செயல் அதிகாரியாகவும் 1996 முதல் 2009 வரை இருந்தார்.[12] இவரது முயற்சியின் காரணமாக டி.சி.எஸ் நிறுவனம் உலகிலுள்ள மிகப்பெரிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களுள் ஒன்றாக முன்னேற்றமடைந்துள்ளது. மேலும் இந்நிறுவனம் 116, 000 பேர் பணிபுரியும் நிறுவனமாகவும், 53 நாடுகளில் 151 கிளைகளைக் கொண்டதாகவும் வளர்ச்சியடைந்துள்ளது. அதன் நிகர வருமானம் US$ 5.7 பில்லியன் ஆக உயர்ந்துள்ளது.
இவர் தற்போது கலாசேத்திரா அறக்கட்டளை தலைவர்,[13][14] Chairperson – நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்டடீசின் தலைவர்,[15] பி ஆர் எஸ் சட்ட ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர்,[16]ரோம் கிளப்பிற்கான இந்திய தேசிய சங்கத்தின் தலைவர்,[17][18] இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் தலைவர்,[19] இந்திய குவஹாத்தி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர்,[20] ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் குழுவின் அறங்காவலர்,[21] ஊனமுற்ற குழந்தைகளுக்கான மறுவாழ்வு சங்கத்தின் தலைவர்,[22] இந்திய இயற்கை பாதுகாப்பு அமைப்பின் துணைத் தலைவர்.[23] போன்ற பொறுப்புகளை வகித்து வருகிறார்.
துவக்க வாழ்கையும் கல்வியும்
தொகுராமதுரையின் தந்தை சுப்பிரமணியம் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டம் சேங்காலிபுரத்தை பூர்வீகமாக கொண்டவர்.[24] தாயாருக்கு கும்பகோணம் அருகே உள்ள ஒரு சிற்றூராகும். திருமணத்திற்குப் பிறகு மனைவியில் உறவினர்கள் நாக்பூரில் இருந்ததால் இருவரும் அங்கு இடம்பெயர்ந்தனர்.[24] ராமதுரை 6 அக்டோபர் 1944 அன்று நாக்பூரில் பிறந்தார். சுப்பிரமணியத்தின் ஐந்து குழந்தைகளில் இராமதுரை நான்காவது பிள்ளையாவார். சுப்பிரமணியத்துக்கு தில்லியில் உள்ள மதராசி அசோசியேசன் பள்ளியில் கணித ஆசிரியர் வேலை கிடைத்ததால் குடும்பம் தில்லிக்கு இடம்பெயர்ந்தது.[24] இராமதுரை அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார்.[25] அப்பள்ளியில் தமிழ், ஆங்கிலம் சமசுகிருதம், இந்தி ஆகியவற்றைப் பயின்றார். வீட்டில் இருந்த தமிழ் இதழ்களை படித்ததால் தமிழில் வாசிக்கும் பழக்கம் இருந்தது. உயர்நிலைக் கல்வியை தில்லியில் உள்ள சர்தானா படேல் வித்யாலயாவில் முடித்தார். தில்லி பல்கலைக்கழகத்தின் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் இயற்பியலில் இளம் அறிவியல் படித்து அதிக மதிப்பெண் பெற்று பட்டம் பெற்றார்.[26] அதனால் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்விக் கழகத்தில் மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்புத் துறையில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றார். பின்னர் லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணினியியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றார்.[27][28] அமெரிகாவில் படிப்பை முடித்த பிறகு 12 ஆயிடம் அமெகிக்க டாலர் சம்பளத்தில் வேலை கிடைத்தது. அச்சமயத்தில் ணி.டி.எஸ் நிறுவனத்தில் பணியாற்ற அழைப்பு வந்ததால் அந்த வேலையை விட்டு விலகி 1972 இல் டி.சி.எஸ்சில் இணைந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "The TCS Story . . . And Beyond". பார்க்கப்பட்ட நாள் September 17, 2011.
- ↑ "S. Ramadorai Profile - Forbes.com". 2009-07-31. Archived from the original on 31 July 2009. பார்க்கப்பட்ட நாள் 2023-09-19.
- ↑ "Ramadorai made PM's skill council advisor". The Economic Times. 2011-02-01. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/ramadorai-made-pms-skill-council-advisor/articleshow/7401475.cms?from=mdr.
- ↑ "S.Ramadorai on the skilling challenges India faces". Business Today (in ஆங்கிலம்). 2013-03-18. பார்க்கப்பட்ட நாள் 2023-09-19.
- ↑ "The nuts and bolts of skill development". Skills and Employability Network (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-19.
- ↑ "Karmayogi Bharat". karmayogibharat.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-09-19.
- ↑ "Union Minister Dr Jitendra Singh says, "Mission Karmayogi", launched by Prime Minister Shri Narendra Modi, had institutionalised the process of capacity building, particularly for the benefit of civil servants". pib.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-09-19.
- ↑ "Karmyogi Bharat Announces Non-Executive Directors To Its Board". BW people (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-19.
- ↑ "Tata STRIVE – Bridging the Skill Development Divide". www.tatastrive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-09-19.
- ↑ Tara, S. Nayana; Sanath Kumar, N. S. (2016-12-01). "Skill development in India:: In conversation with S. Ramadorai, Chairman, National Skill Development Agency & National Skill Development Corporation; former CEO, MD and Vice Chairman, Tata Consultancy Services". IIMB Management Review 28 (4): 235–243. doi:10.1016/j.iimb.2016.10.003. பன்னாட்டுத் தர தொடர் எண்:0970-3896. https://www.sciencedirect.com/science/article/pii/S0970389616300891.
- ↑ "Corporations of the future will require a huge pool of sustainability leaders: S Ramadorai". Open The Magazine (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2023-01-04. பார்க்கப்பட்ட நாள் 2023-09-19.
- ↑ "Board of Directors appoint S Ramadorai as Vice Chairman; Confirms N Chandrasekaran as new CEO & MD". www.tcs.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-19.
- ↑ "Chairman – Kalakshetra Foundation" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-19.
- ↑ Nath, Damini (2020-02-24). "Ramadorai to head Kalakshetra Foundation" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/chennai/ramadorai-to-head-kalakshetra-foundation/article30907756.ece.
- ↑ "NIAS". www.nias.res.in. பார்க்கப்பட்ட நாள் 2023-09-26.
- ↑ "Board of Directors". PRS Legislative Research (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-19.
- ↑ "Leadership| Club of Rome". clubofrome.in. பார்க்கப்பட்ட நாள் 2023-09-26.
- ↑ Shri S Ramadorai, Chairman, Club of Rome – India (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2023-09-26
- ↑ "Governance - Public Health Foundation of India". phfi.org (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-02-28. பார்க்கப்பட்ட நாள் 2023-09-26.
- ↑ "IIIT-GUWAHATI". www.iiitg.ac.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-26.
- ↑ "Member of the Board of Trustees". Council on Energy, Environment and Water.
- ↑ "About - SRCC team Child development centre - SRCC" (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-02-16. பார்க்கப்பட்ட நாள் 2023-09-26.
- ↑ "Mr Subramaniam Ramadorai". The Nature Conservancy India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-09-26.
- ↑ 24.0 24.1 24.2 "இந்திய இளைஞர்கள் தோல்விக்கு அஞ்சாதவர்கள்: டிசிஎஸ் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ எஸ்.ராமதுரை சிறப்பு பேட்டி". இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 4, செப்டம்பர், 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "DTEA alumni concert". The Times of India. 2003-11-14. https://timesofindia.indiatimes.com/city/delhi/dtea-alumni-concert/articleshow/282187.cms.
- ↑ "Hansraj Internship Cell". www.placementhansraj.com. பார்க்கப்பட்ட நாள் 2023-09-19.
- ↑ Ramadorai, Ram (2009-05-16). "A Cross-Cultural Life" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2009/05/17/jobs/17boss.html.
- ↑ "Itihaasa". itihaasa.com. பார்க்கப்பட்ட நாள் 2023-09-19.