ம. திலகராஜா

மயில்வாகனம் திலகராஜா (பிறப்பு: 29 செப்டம்பர் 1973) இலங்கை, மலையகத் தமிழ்க் கவிஞரும், அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். மல்லியப்பு சந்தி திலகர் என்ற பெயரில் கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.

மயில்வாகனம் திலகராஜ்
Mailvaganam Thilakarajah
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஆகத்து 2015
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 செப்டம்பர் 1973 (1973-09-29) (அகவை 51)
தேசியம்இலங்கையர்
அரசியல் கட்சிதொழிலாளர் தேசிய சங்கம்
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ் முற்போக்குக் கூட்டணி
சமயம்இந்து
இனம்மலையகத் தமிழர்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

திலகராஜா நுவரெலியா மாவட்டம், மடகொம்பரை எனும் இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அட்டன் ஐலன்ட்சு கல்லூரியில் கல்வி பயின்றவர். கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வணிகத்துறையில் 2000ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார். பட்டதாரி ஆசிரியரான இவர் வணிக நிறுவனங்களின் ஆலோசகராகவும் பணியாற்றுகிறார். 'பாக்யா பதிப்பகம்' எனும் பதிப்பகத்தினை நடத்தி வருகின்றார்.

அரசியலில்

தொகு

திலகராஜ் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தின் அரசியல் பிரிவான தொழிலாளர் தேசிய முன்னணியில் பொதுச் செயலாளர் ஆவார்.

2015 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக நுவரெலியா மாவட்டத்தில் நிறுத்தப்பட்டு 67,761 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு முதன்முறையாகத் தெரிவானார்.[1][2][3][4][5]

வெளியிட்ட நூல்கள்

தொகு
  • மல்லியப்பு சந்தி, கவிதைத் தொகுப்பு, 2007)

மேற்கோள்கள்

தொகு
தளத்தில்
ம. திலகராஜா எழுதிய
நூல்கள் உள்ளன.
  1. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PARLIAMENTARY ELECTIONS ACT, No. 1 OF 1981". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1928/03. 19 August 2015. http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Aug/1928_03/1928_03%20E.pdf. பார்த்த நாள்: 31 ஆகஸ்ட் 2015. 
  2. "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. 
  3. "Preferential Votes". டெய்லிநியூஸ். 19 ஆகத்து 2015 இம் மூலத்தில் இருந்து 2015-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2. 
  4. "PM Ranil receives highest Preferential votes with 500,566". hirunews.lk. 18 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 19 August 2015.
  5. "Preferential votes- General Election 2015". adaderana.lk. 18 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._திலகராஜா&oldid=3252814" இலிருந்து மீள்விக்கப்பட்டது