மாளிகைமேடு என்பது அரியலூர் மாவட்டத்தில், கங்கைகொண்டசோழபுரத்திற்கு அருகில் உள்ள சிற்றூர். இவ்வூரின் கிழக்கே முதலாம் இராசேந்திரனால் எழுப்பப்பட்ட செங்கற்களால் ஆன மாளிகை தமிழகத் தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சியால் கண்டுபிடிக்கப்பட்டது.

அரண்மனை பற்றிய குறிப்பு

சிறப்புகள்

தொகு

1981 ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர், இவ்விடத்தில் பெரிய விழா எடுத்து இம்மாளிகையின் சிறப்பை வெளிப்படுத்தினார். இங்குள்ள அகழ் வைப்பகத்தில் மாளிகைமேட்டைச் சுற்றியுள்ள ஊர்களில் அகழ்வாய்வு மேற்கொண்ட போது கிடைத்த சோழர்கால கற்சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இவை சுற்றுலா பயணிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

உசாத்துணை

தொகு

டாக்டர்.மா.இராசமாணிக்கனார், சோழர் வரலாறு ,பூம்புகார் பதிப்பகம்.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாளிகைமேடு&oldid=4041664" இலிருந்து மீள்விக்கப்பட்டது