மலேசிய மொழி

மலாய் மொழியில் உள்ள பேச்சுவழக்கு, மலேசியாவின் அதிகாரப்பூர்வ மொழி, மலேசிய அரசியலமைப்பின் 152 வது

பகாசா மலேசியா (Bahasa Malaysia) அல்லது மலேசிய மொழி (மலாய்) என்பது மலேசியாவின் அதிகாரப்பூர்வமான தேசிய மொழி ஆகும். மலேசிய மொழி, இந்தோனேசிய மொழியின் சொற்களில் 80 விழுக்காட்டு இணைச் சொற்களாகக் கொண்டது. இந்த மொழியை மலேசியா, சிங்கப்பூர், புருணை, தென் தாய்லாந்து, போன்ற நாடுகளில் உள்ள மக்களில் ஏறக்குறைய இரண்டு கோடி பேர் பயன்படுத்துகின்றனர்.

மலேசிய மொழி
Malaysian Malay
Bahasa Melayu Malaysia
Standard Malay
Bahasa Melayu Piawai
بهاس ملايو ڤياواي
நாடு(கள்) மலேசியா  புரூணை  சிங்கப்பூர்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
பூர்வீகம்: குறைவு  (2022)e25
L2: பெரும்பான்மை மலேசியா
ஆஸ்திரோனீசிய
ஆரம்ப வடிவம்
பழைய மலாய் மொழி
  • மரபார்ந்த மலாய் (ஜொகூர்-ரியாவ் மலாய்)[1][2]
    • மலேசிய மொழி
      Malaysian Malay
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-3zsm
மொழிக் குறிப்புstan1306[3]
{{{mapalt}}}
பேசப்படும் நாடுகள்

வரலாறு

தொகு

1957ஆம் ஆண்டு, மலேசிய அரசியலமைப்பின் 152ஆம் பிரிவின்படி, மலாய் மொழி அதிகாரப்பூர்வமான மொழியாகப் பிரகடனம் செய்யப்பட்டது. 1986 லிருந்து 2007 வரை ’பகாசா மலேசியா’ எனும் சொல் வழக்கு ’பகாசா மலாயு’ என்று மாற்றம் செய்யப்பட்டது. இப்போது மறுபடியும் ’பகாசா மலேசியா’ என்று பழைய நிலைக்கு கொண��டு செல்லப்பட்டது. [4] பகாசா மலேசியா மொழியைச் சாதாரண நடைமுறையில் பகாசா அல்லது BM என்று அழைக்கிறார்கள்.[5]

பயன்பாடு

தொகு

மேற்கு மலேசியாவில் 1968ஆம் ஆண்டும் கிழக்கு மலேசியாவில் 1974ஆம் ஆண்டு மலேசிய மொழி, ஒரே அதிகாரப்பூர்வ மொழியானது. இருப்பினும், வர்த்தகத்துறை, உயர்நீதிமன்றங்களில் ஆங்கில மொழி தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீன, தமிழ் மொழிகளை மற்ற சமூகத்தவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

மேற்கோள்

தொகு
  1. Adelaar, K. Alexander (2000). "Malay: A Short History". Oriente Moderno 19 (2): 234. 
  2. Mukhlis Abu Bakar (2019). "Sebutan Johor-Riau dan Sebutan Baku dalam Konteks Identiti Masyarakat Melayu Singapura" (in ms). Issues in Language Studies 8 (2): 61–78. doi:10.33736/ils.1521.2019. http://publisher.unimas.my/ojs/index.php/ILS/article/view/1521. 
  3. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Standard Malay". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  4. Bahasa Malaysia will again be the official term to be used to refer to the national language.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. Penggunaan Istilah Bahasa Malaysia Dan Bukan Bahasa Melayu Muktamad, Kata Zainuddin

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_மொழி&oldid=4085458" இலிருந்து மீள்விக்கப்பட்டது