பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம்
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள இருபது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]வேலூர் வட்டத்தின், பேரணாம்பட்டு வட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் 51 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பேரணாம்பட்டில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,84,843 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 69,360 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,494 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
தொகுபேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 51 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- அயித்தம்பட்டி
- அழிஞ்சிகுப்பம்
- அரங்கல்துருகம்
- அரவட்லா
- பாலூர்
- பாப்பனபல்லி
- பத்தலபல்லி
- செண்டத்தூர்
- சின்னதாமல்செருவு
- சின்னபள்ளிகுப்பம்
- சின்னவரிகம்
- சொக்காரிஷிகுப்பம்
- தேவலாபுரம்
- எரிகுத்தி
- எருக்கம்பட்டு
- கொல்லகுப்பம்
- குண்டலப்பள்ளி
- கைலாசகிரி
- கார்கூர்
- கரும்பூர்
- கதவாளம்
- கொத்தப்பல்லி
- கொத்தூர்
- குமாரமங்கலம்
- மாச்சம்பட்டு
- மேல்பட்டி
- மலையம்பட்டு
- மசிகம்
- மேல்சாணங்குப்பம்
- மேல்வைத்திணாங்குப்பம்
- மிட்டாளம்
- மோதகப்பல்லி
- மொரசப்பல்லி
- மோர்தானா
- நரியம்பட்டு
- பல்லாலகுப்பம்
- பார்சனாப்பல்லி
- பரவக்கல்
- பெரியகொமேஸ்வரம்
- பெரியவரிகம்
- பொகலூர்
- ராஜக்கல்
- சாத்தம்பாக்கம்
- சாத்கர்
- டி. டி. மோட்டூர்
- தென்னம்பட்டு
- துத்திப்பட்டு
- வடசேரி
- வடகரை
- வீராங்குப்பம்
- வெங்கடசமுத்திரம்
வெளி இணைப்புகள்
தொகு- வேலூர் ��ாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2016-03-12 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ வேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/05-Vellore.pdf
- ↑ பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்