பேச்சு:தமிழ்
இக்கட்டுரை, விக்கிபீடியா:சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கப்படக் கோரி நியமிக்கப்பட்டிருக்கிறது. இக்கட்டுரை பற்றிய உங்கள் கருத்துக்களை இதன் நியமனத் துணைப்பக்கத்தில் பதியுங்கள். ஒரு சிறப்புக் கட்டுரை விக்கிபீடியாவின் சிறப்பிற்கு சான்றாய் அமைந்திருக்க வேண்டும். சிறப்புக் கட்டுரைக்கான தகுதிகளைப் பார்க்கவும். |
ழகரம்
தொகுழகரம் திராவிட மொழிக்குடும்பத்தில் மட்டும் பயன்படும் ஒன்று என்பது தவறாகும். இந்த ஒலி மாணடரின் சீன மொழியிலும் மற்றும் சில மங்கோலிய மொழி இனத்தை சேர்ந்த மொழிகளிலும் காணப்படுகிறது. இந்த ஒலியை மொழி வல்லுனர்கள் Retriflex Approximant என்று வகைப்படுத்துகின்றனர். Vinodh.vinodh 11:23, 16 நவம்பர் 2007 (UTC)
Tamil versatility
தொகு- In the beginning of this article, it is written that " Tamil had not suffered many a change. So, it is not that difficult to understand the ancient literary works". But, i disagree with this point. Most of the ancient literary works need a lot of literary knowledge: not everyone can easily understand them. Laymen have to get explanations from Tamil scholars to understand them.
- So, could the author please justify the claim?-- User talk:Farooq nit 12:00, 4 Jan 2007 (IST)
- ஓரளவு தமிழறிவுடன் ஆத்திசூடி, திருக்குறள் போன்றவறை புரிந்து கொள்ளலாம். பிற பழம் மொழிகளிகளுடன் ஒப்பிடுகையில் பழந்தமிழ் தற்காலத் தமிழுடன் இணங்கியே போகின்றது. இது தொடர்ச்சியை குறித்து நிற்கின்றது. எல்லா இலக்கிய படைப்புகளுக்குமோ அல்லது எல்லா காலகட்ட படைப்புகளுக்குமோ இந்தக் கூற்று பொருந்தாது.
- இருப்பினும், உங்கள் கூற்றும் சரியே. சராசரி தமிழருக்கு பெரும்பாலனா பழைய இலக்கியங்கள் அவ்வளவு எளிமையாக எட்டாமலே இருக்கின்றது. --Natkeeran 08:28, 6 ஜனவரி 2007 (UTC)
- Thanks for the reply. I agree with u too. -- User talk:Farooq nit 17:18, 10 Jan 2007 (IST)
Tamil flag
தொகுIs the tamil flag offcial ? i don't think so???--ரவி (பேச்சு) 12:16, 20 ஏப் 2005 (UTC)
- If you see this, User:vadakkan has added the flag with an edit summary "உலகத் தமிழர் பேரமைப்பு படைத்த தமிழ் கொடி". -- Sundar 10:00, 13 மே 2005 (UTC)
I think many such flags can be created by any forum (however authentic it may be) or even a government. But tamil doesn't need such a flag and it wouldn't be proper to tag tamil with a flag.So,I prefer not having any such images atleast in this article.--ரவி (பேச்சு) 10:13, 13 மே 2005 (UTC)
- I think that was used to fulfill the requirements of the template for languages in en wikipedia. Yeah, it can be either removed or a mention can be made in an appropriate section as to it is just adopted by a particular forum. -- Sundar 11:54, 13 மே 2005 (UTC)
I have already removed the link to that image from the article.If needed, we may include that picture when an article on உலகத் தமிழர் பேரமைப்பு is written .--ரவி (பேச்சு) 14:00, 13 மே 2005 (UTC)
is tamil the first indian language to get classical language status?
தொகுIt is mentioned in the article that tamil is the first indian language to be declared as classical language. I think tamil sanskrit is already declared as classical language ???--ரவி (பேச்சு) 19:02, 11 மே 2005 (UTC)
- Tamil is the first Indian language to be declared formally by the Indian Government. Sanskrit is under consideration. -- Sundar 05:48, 12 மே 2005 (UTC)
- I think Sanskrit is internationaly recognized as a classical language, even though it was not formally declared by Indian Government. I realy don't know whether the classical language status bring in any constitutional responsibility for the government towards the protection and development of concerned languages. Mayooranathan 13:45, 12 மே 2005 (UTC)
மெய்யெழுத்து
தொகுI have not exactly translated this section. This involved usage of "consonant clusters", "stops" etc. Sundar, since you were one of the lead authors of this article (in English), you are the better person to judge if the current write up (in Tamizh) is sufficient here. -- Harikishore 11:35, 16 மே 2005 (UTC)
- I think the section as it is now is fine. Good work, Kishore. For the "ஒலிப்பியல்" section, we might need to approach User:Vadakkan. He seems to be very knowledgable about this and also wrote many important parts of the article. I'll also try and translate as much as I can. -- Sundar 05:26, 24 மே 2005 (UTC)
- For this purpose, the approach taken in the English wikipedia may not be suitable. Rather than trying to translate English grammatical ideas like consonant clusters into Tamil, it may be best to explain Tamil grammatical concepts like மொழியிடையெழுத்து, ஊமையெழுத்து, உடனிலைமெய்ம்மயக்கம் etc., and supplement that by referring to principles like கனைத்தல் in samskirutam as explained by Tamil grammarians to explain how Tamil is different. We may need to come up with words for ideas like "sound shift" (ஒலிப்புமாற்றம்?) - I don't know if there is an established Tamil phrase for it. What do others feel? -- அரவிந்தன் 14:23, 25 மே 2005 (UTC)
- I agree with Arvind on the use of Tamil grammatical concepts. And, I think wiki is the best place to come up with new Tamil equivalents for such words because it is mirrored across the web and ranked higher in search results. In fact, I've a dream where Ta wiki gains a critical mass of editors, who have genuine interest in Tamil and Wiki philosophy. Then this can even have a side goal of achieving consensus on standards. For example parts of விக்கிப்பீடியா:நடைக் கையேடு can be an online reference for the web, Ta wiktionary can serve as an online dictionary reference, Ta wikibooks as a book source etc. -- Sundar 14:54, 25 மே 2005 (UTC)
- I am sure santhosh, mayooranathan, harikishore all share your dream..and ofcourse me too :) Getting more editors depends on popularising wikipedia and searching using Tamil keywords in google or yahoo. Many people still don't know that they can search , type in tamil in the web. There is a need for awareness in this aspect. Even though I was using the net since 1999 I came to know about english wikipedia itself only few months back and realised that I can type in Tamil only after coming to tamil wikipedia.But we can hope for best in the coming days, seeing the buzz in tamil blogging.--ரவி (பேச்சு) 06:26, 26 மே 2005 (UTC)
அன்றாடம் பயன்படுத்தும் சில சொற்றொடர்களின் தமிழாக்கம்
தொகுI feel the section === அன்றாடம் பயன்படுத்தும் சில சொற்றொடர்களின் தமிழாக்கம் === should be reincluded which might be useful for new learners of tamil.--ரவி (பேச்சு) 12:10, 16 மே 2005 (UTC)
- I'm afraid, I do not subscribe to this logic. This article is about Tamizh language in Tamizh language. How would it help having translation of a few "English" sentences here. A new learner of such basic words like 'hello,yes,no etc' would not come "here". That section was appropriate in "English" wikipedia, since we are writing about some other language. Similarly we would have === அன்றாடம் பயன்படுத்தும் சில சொற்றொடர்களின் ஆங்கில மொழியாக்கம் === if we write an article about English Language. Please correct me if I'm wrong. -- Harikishore 03:31, 17 மே 2005 (UTC)
Ok objection accepted :) --ரவி (பேச்சு) 04:05, 17 மே 2005 (UTC)
நா சுழற்றி
தொகுஎன்னால் ஒலிப் படிமத்தைக் கேட்கமுடியவில்லை. Windows-ல் எவரேனும் கேட்டு தற்போது ஆங்கிலத்தில் உள்ள மொழியாக்கத்திற்கு பதில் சேர்க்க வேண்டும். -- Sundar 06:56, 27 மே 2005 (UTC)
- Tongue twisterக்கு தமிழில் என்ன என்று ரொம்ப யோசித்துக் கொண்டிருந்தேன். நல்ல பெயராக சொல்லியுள்ளீர்கள். இது தமிழ் விக்கிப்பீடியா என்பதால் அந்த நா சுழற்றியை மொழிபெயர்க்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்.--ரவி (பேச்சு) 07:05, 27 மே 2005 (UTC)
மொழிபெயர்க்க வேண்டியதில்லை. ஆனால் ஒலி வடிவத்திலுள்ளதை தொழில்நுட்பக் காரணங்களுக்காகவோ, காது கேளாமையாலோ கேட்கமுடியாதவர்களுக்காக எழுத்தில் தரலாம் என்று எண்ணினேன். -- Sundar 07:10, 27 மே 2005 (UTC)
- சரி, சுந்தர்.தற்பொழுது நான் பயன்படுத்தும் கணிணியில் இந்த கோப்பைக் கேட்க முடியவில்லை. வேறு கணிணியில் முயன்று பார்த்து, எழுத்து வடிவத்தை சேர்க்கிறேன்.--ரவி (பேச்சு) 08:52, 27 மே 2005 (UTC)
நன்றி, ரவி. -- Sundar 09:06, 27 மே 2005 (UTC)
- "ஏழை கிழவன் வாழைப்பழத்தோல்மேல் சருசருக்கி வழுவழுக்கி கீழே விழுந்தான்."
- ஆங்கில விக்கிப்பீடியாவில் ஒலிப்படிமம் உள்ளவேண்டும் என்றொரு நிபந்தனை உண்டு, அதை நிறைவேற்றுவதுக்காக நான் இந்த நாசுழற்றியை பதிவுசெய்தேன். இன்னமும் தமிழ் அறியாதவர்களுக்கு தமிழ் உச்சரிப்பு காட்டுகிரது. தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழை பற்றி எழுதும்போது இது ஒன்றும் தேவை படாது, ஆகவே என்னை பொறுத்த வரை இந்த கட்டுரையில் ஒலிப்படிமம் உள்ளிடுவது தேவை இல்லை.
- -- அரவிந்தன் 19:55, 30 மே 2005 (UTC)
- No harm in having the tongue twister file in tamil as still many people can learn the pronunciation from it. also, it adds a bit of fun element to the article--ரவி (பேச்சு) 09:57, 31 மே 2005 (UTC)
- Ya, I agree with Ravi. -- Sundar 10:11, 31 மே 2005 (UTC)
இன்னும் பல நா சுழற்றிகளுண்டு : 'வழைமரத்தில் ஒருவாழைப்பழம் பழுத்து அழுகி கீழே விழுந்து குழுகுழுத்தது' 'ஓடும் நரிகளில் ஒரு நரி கிழநரி, கிழநரி முதுகில் ஒரு மயிர் நரை மயிர்' அவற்றுள் சில. --Jambolik 16:23, 5 திசம்பர் 2011 (UTC)
வேற்று மொழி அறிஞர்கள் பார்வையில் தமிழ்
தொகுபிற மொழி அறிஞர்கள், மொழியியலாளர்கள் தமிழ் பற்றி கூறிய கருத்துக்களை இந்தக் கட்டுரையில் இடம் பெறச் செய்தால் நன்றாக இருக்கும்--ரவி (பேச்சு) 07:02, 30 மே 2005 (UTC)
நிறம்
தொகுதிராவிட மொழிகளுக்கு விக்கியில் "mediumspringgreen" தான் பாவிக்கப்பட்டுகிறது. தகவல் சட்ட நிறத்தை மாற்றினேன்.--டெரன்ஸ் 11:11, 16 ஆகஸ்ட் 2006 (UTC)
மொழிபெயர்க்கலாம்
தொகுமூன்று பத்திகள் மொழிபெயர்க்கப்படாமல் உள்ளன. அவற்றுக்கு முன்னுரை கொடுத்து மொழிபெயர்க்கலாம் அல்லது அவற்றை பேச்சுப்பக்கத்திற்கு நகர்த்தலாம் எனப்பரிந்துரைக்கிறேன். விக்கிப்பீடியாவில் முதற்பக்கத்திற்கு அடுத்து இதுவே அதிகம் பார்க்கப்படுவதால் இது ஆங்கிலம் அற்ற கட்டுரையாக இருப்பின் நன்றாக இருக்கும். --Sivakumar \பேச்சு 11:10, 7 செப்டெம்பர் 2006 (UTC)
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலி துணையுடன் ஓரளவு மொழிபெயர்த்துள்ளேன். விடுபட்டப் பத்திகளை வேறு யாரேனும் மொழிபெயர்த்திடுங்கள். -- Sundar \பேச்சு 14:07, 7 செப்டெம்பர் 2006 (UTC)
கட்டுரை ஒழுங்கு
தொகுஇக்கட்டுரையின் ஒழுங்கமைப்பு சீரற்று இருக்கின்றது. கீழே ஒழுங்கமைக்கு ஒரு முயற்சி.
- தமிழ் மொழி வரலாறு
- தமிழ் மொழி பயன்பாடு
- தமிழ் மொழியை மொழியியல் வகைப்படுத்தல்
- தமிழ் மொழி இலக்கணம்
- எழுத்து...
- ஒலிப்பியல்
- தமிழ் இலக்கியம்
- தமிழ்க் கல்வி
சொல் வளம் - மொழிபெயர்ப்பில்
தொகுசொல் வளம்
தொகு- பார்க்கவும்: விக்சனரியில் உள்ள தமிழ் சொற்களின் பட்டியல் மற்றும் தமிழ் மொழியிலிருந்து உருவான சொற்களின் பட்டியல்
தமிழ் நிறைந்த சொல் வளம் கொண்ட மொழி. நவீன தமிழ்மொழி பழந்தமிழ் மொழியில் பயன்படுத்தப்பட்ட அனேக சொற்களை இன்னும் பயன்படுத்துகின்றது. இதனால் சற்று பயற்சியுடன் பழந்தமிழ் இலக்கியங்களை ஒரு தமிழர் வாசித்து அறிய முடியும். திருக்குறள் போன்ற சிறந்த்த பழந்தமிழ் படைப்புக்கள் தமிழர் மத்தியில் சிறப்புற்று கற்கப்படுவதற்கு இத்தொடர்ச்சியான சொற் பயன்பாடு உதவுகின்றது.
சமஸ்கிரத சொற்கள் தொல்காப்பியர் காலம் முதலே தமிழ் மொழியில் உள்வாங்கப்பட்டு தகுந்த பல தளங்களில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன். சமயம் சார்பான சமஸ்கிரத சொற் பயன்பாடுகள் தமிழில் அதிகம் காணப்படுகின்றன. சமஸ்கிரத உச்சரிப்புக்களை தமிழில் உள்வாங்குவதற்கு கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன்.
தமிழின் நீண்ட வரலாற்றில் பிற மொழிச்சொற்கள் தமிழில் கலந்து, தமிழ்படுத்தப்பட்டு தமிழை வளமாக்கியுள்ளன. பாரசிக, அரபு போன்ற செம்மொழிகளில் இருந்தும், பிற திராவிட மொழிகளில் இருந்தும், போர்த்துகீச, டச்சு, பிரேஞ்சு போன்ற காலனித்துவ மொழிகளில் இருந்த்தும், இந்தி, சிங்களம், மலாய் போன்ற தமிழருடன் தொடர்புடைய பிற இனங்களின் மொழிகளில் இருந்த்தும், ஆங்கில மொழியில் இருந்தும் தமிழ் மொழிக்கு பல சொற்கள் வந்தடைந்துள்ளன.
பிறமொழிச் சொற்கள் மட்டுப்படுத்தப்பட்டில் இருப்பது தமிழ் மொழியின் தொடர்ச்சிக்கும் தனித்துவத்துக்கும் அவசியம் ஆகும். ஆகையால் பிற மொழிச்சொற்களுக்கு இணையான தமிழ் மொழி அடிச்சொற்களி இருந்த்து உருவாக்கப்படும் சொற்கள் தமிழில் என்பது பல எளிய தமிழ் ஆதரவாளர்களின் கருத்தாக அமைகின்றது. இக்காலத்தில் குறிப்பாக ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் அடிச்சொற்களில் இருந்து உருவாக்கப்பட்ட சொற்கள் பயன்படுத்தப்படவேண்டும் என்பது பல தமிழ் ஆர்வலர்களின் வேண்டுகோளாக அமைகின்றது.
கலைச்சொற்கள்
தொகுதமிழ் மொழியில் அறிவியலை படைக்க கலைச்சொல்லாக்கம் முக்கியம். இது தமிழ் மொழியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஒரு செயல்பாடுதான். இக்காலத்தில் தமிழக அரசும் இலங்கை அரசும் அவற்றின் பல்கலைக்கழகங்கள் ஊடாகவும் தமிழ் தன்னாவலர்களாளும் இப்பணி தொடர்கின்றது.
Modern Tamil vocabulary still retains most of the words from classical Tamil. Due to this and because of the emphasis on learning classical works like Tirukkural, classical Tamil is comprehensible in various degrees to most native speakers of today. However, a number of Sanskrit loan words have been adapted and used commonly in modern Tamil. But, unlike some other Dravidian languages, these words are restricted mainly to spiritual terminology and abstract nouns. Besides Sanskrit, there are a few loan words from Persian and Arabic implying trade ties in ancient times. Since around the 20th century, English words have also begun to be used freely in colloquial Tamil. Some modern technical terminology is borrowed from English, though attempts are being made to have a pure Tamil technical terminology. Many individuals, and some institutions like the Government of Sri Lanka and தமிழ் இணையக் கல்விக்கழகம் have generated technical dictionaries for Tamil.
There are also many instances of Tamil loan words in other languages. Popular examples are cheroot (churuttu meaning "rolled up"), mango and catamaran (from kattu maram meaning "bundled logs"). For more such words, see here.
தரமும் பொருட் செறிவும்
தொகுஇக்கட்டுரையின் தரமும் பொருட் செறிவும் பல மடங்கு மேம்படுத்தப்படலாம். இக்கட்டுரை தமிழ் பற்றி நுணுக்கிய தகவல்களுக்கான நல்ல அறிமுக கட்டுரையாக வளர வேண்டும். --Natkeeran 16:42, 8 செப்டெம்பர் 2006 (UTC)
சிறப்பு எழுத்து - மொழி (பொருள்) பெயர்ப்பில்
தொகுசிறப்பு எழுத்து
தொகுThe special character 'ஃ' (pronounced 'akh') is called āytham in the Tolkāppiyam (see Tolkāppiyam 1:1:2). The āytham is rarely used by itself: it normally serves a purely grammatical function as an independent vowel form, the equivalent of the overdot diacritic of plain consonants. The rules of pronunciation given in the Tolkāppiyam suggest that the āytham could have glottalised the sounds it was combined with. Although the character was common in classical Tamil, it fell out of use in the early modern period and is now very rare in written Tamil. It is occasionally used with a 'p' (as ஃப) to represent the phoneme [f].
The āytham is also called ahenam (literally, 'the "ah" sound'). Its resemblance to the three dots that were found on shields in mediaeval times, and the similarity of the name āytham to the word āyutham meaning 'weapon' or 'tool' has resulted in it often being called āyutha ezhuthu (literally, 'the war-weapon letter').
ஃ - ஆய்தம், தமிழில் உள்ள ஒரு சிறப்பு எழுத்து ஆகும். ஆய்த எழுத்தை தனியே பயன்படுத்துவது அரிது. பழந்தமிழில் பரவலாக ஆய்த எழுத்து பயன்படுத்தப்பட்டாலும், தற்காலத்தில் ஆய்த எழுத்தின் பயன்பாடு அரிதே. சில சமயங்களில் பகரத்துடன் சேர்த்து (ஃப) ஆங்கில எழுத்தான f-ஐக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.
ஆய்த எழுத்தை அகேனம் என்றும் அழைப்பர். ஆய்த எழுத்தில் உள்ள மூன்று புள்ளிகளும் இடைக்காலத்தில் போரில் பயன்படுத்தப்பட்ட கேடயத்தில் காணப்பட்ட குறியீடுகளுடன் ஒப்பிடத்தக்கவை ஆகையால் ஆய்த எழுத்து என்று கூறப்பட்டிருக்கலாம்.
தமிழுக்கு மலேசியாவில் எதாவது அரச அங்கீகாரம் உள்ளதா?
தொகுChange Tamil Font
தொகுWhat font you are using? Isn't there any good Tamil font in this world? V4vijayakumar 04:27, 10 நவம்பர் 2006 (UTC)
- Vijayakumar, if u have problem with rendering the tamil fonts, see wikipedia:font help. we use unicode tamil font. there are lot of unicode tamil fonts like latha, sooritandocom, TscuParanar which are available on the net. you can use one of them according to your convenience by changing the browser setting. If you still have a problem, please post a screenshot of tamil wikipedia in your system, so we can understand what the problem is--Ravidreams 07:21, 10 நவம்பர் 2006 (UTC)
விசமத்தனம்
தொகுஇருபது நிமிடம் முன்னர் அடையாளம் காட்டாத ஒருவர் இக்கட்டுரை முழுதையும் அழித்து பெண் உடல் உறுப்புப் படம் போட்டு விட்டார். நல்லவேளையாக நான் உடன் கவனித்து மாற்ற முடிந்தது. அந்த ip முகவரியை நிரந்தரமாகத் தடை செய்திருக்கிறேன். நம்ம பயனர்களை, அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் அடையாளம் காட்டாத பயனர்களின் தொகுப்புகளை கவனித்து வருமாறு கேட்டுக் கொள்கிறேன். இது போன்ற முக்கியக் கட்டுரைகளில் இது போன்ற தவறு நடந்தால் அது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு பெரும் சறுக்கலைத் தரும்.--Ravidreams 23:17, 11 டிசம்பர் 2006 (UTC)
- நன்றி ரவி, தங்களைப் போன்றவர்களால் நிச்சயாமாக விக்கிப்பீடியா வீறு நடைபோடும். தமிழ் மிகவும் முக்கியமான கட்டுரை என்பதால் அடையாளம் காணப்பாடாதவர்கள் கட்டுரைகளில் மாற்றங்களை உண்டுபண்ணாவண்ணம் கட்டுரையைப் பூட்டியுள்ளேன். ரவி அல்லது ஏனைய நிர்வாகிகள் இது முறையற்றது என்று நினைத்தால் இதை எடுத்து விடவும் --Umapathy 01:07, 12 டிசம்பர் 2006 (UTC)
அடையாளம் காணாதவர்களை தடுக்க பூட்டியது சரியா என்று உடனே சொல்லத் தோன்றவில்லை. மாற்றங்களை கண்காணிக்கும் நிர்வாகிகள் குறைவாக இருக்கும் வரை, சில முக்கியமான பக்கங்களுக்கு இந்த நடவடிக்கை சரியாக இருக்கலாம் (இலங்கை, இந்தியா, தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற அதிகம் பார்க்கப்பபடும் பக்கங்கள்). ஆனால், காலப்போக்கில் அனைவரும் தொகுப்பது போல் இருப்பதே நலம்--Ravidreams 08:50, 12 டிசம்பர் 2006 (UTC)
ஒலிப்பதிவுச் சோதனை
தொகுஒரு சோதனைக்காக இக்கட்டுரையின் முதல் இரு பத்திகளை ஒலிப்பதிவு செய்து பார்த்தேன். ரொம்ப மெனக்கடவோ திட்டமிடவோ இல்லை. ஒலிப்பதிவில் உள்ள நுட்பக் குறை, பலுக்கல் குறை, குரல் ஏற்றத் தாழ்வு குறை ஆகியவற்றை சுட்டிக் காட்டினால், இம்முறை ஊருக்குப் போகும்போது, என் தமிழம்மாவிடம் ஆலோசனை கேட்டு மேம்படுத்த முயல்வேன் (ஐயோ, பாவம் அவங்க :)). பயனர்களின் பின்னூட்டு வேண்டப்படுகிறது. என் குரல் கொஞ்சம் சரிப்பட்டு வருமானால், தமிழ் விக்கிப்பீடியாவின் முக்கியமான சில கட்டுரைகளுக்கு சோதனை ஒலிப்பதிவு செய்து பார்க்கலாம்--Ravidreams 23:23, 22 டிசம்பர் 2006 (UTC)
கோப்புக்கள் எங்கே? --Natkeeran 02:04, 25 டிசம்பர் 2006 (UTC)
கோப்பை பதிவேற்றியதோடு இங்கு இணைப்பு கொடுக்க மறந்து விட்டேன். இதோ கோப்பு - ஊடகம்:Ta-தமிழ்.oga--Ravidreams 09:07, 25 டிசம்பர் 2006 (UTC)
வெளி ணைப்புத் தொடர்பாக
தொகு- http://search.yahoo.com/search?p=tamil&fr=yscpb&vs=worldcatlibraries.org என்ற வெளியிணைப்பு ஒன்று தரப்பட்டுள்ளது. யாகூத் தேடலைப் பயன்படுத்தி worldcatlibraries.org என்ற தளத்தில் tamil என்று தேடும் அற்புதமான இணைப்பு. வேறேதாவது மொழியில் இப்படியான வெளி இணைப்பொன்று இருத்தல் கூடுமா? அல்லது அந்த இணைப்பின் மகிமை எனக்கு விளங்கவில்லையா? --கோபி 16:13, 19 பெப்ரவரி 2007 (UTC)
- இது கண்டிப்பாகக் கவலையளிக்கும் ஒரு வெளியிணைப்பே. நீக்கப்பட வேண்டும் -- Sundar \பேச்சு 16:15, 19 பெப்ரவரி 2007 (UTC)
சுந்தர், நான் சுட்டிக் காட்டியது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே. இவ்வாறான பெருமளவு வெளியிணைப்புக்கள் த.வி எங்கும் உள்ளது. நாம் என்ன செய்கிறோம் என்றால் ஆங்கிலத்திலிருந்து அப்படியே கொண்டுவந்து ஒட்டுகிறோம். ஆங்கிலத்தில் உள்ளதென்பதால் அத்தனை நம்பிக்கை. தமிழ்ச்சூழலுக்குத் தேவையா என்றெல்லாம் எண்ணிப் பார்ப்பதில்லை. ஏனென்றால் நாம் எடுப்பது ஆங்கிலத்திலிருந்தல்லவா? த.வியில் தமிழ் பற்றிய கட்டுரை தமிழாக்கப்பட வேண்டிய்ருப்பதைவிட முரண்நகை வேறேதும் இருக்க முடியுமா? --கோபி 16:20, 19 பெப்ரவரி 2007 (UTC)
மொழியைப் பற்றி எழுதுதல்
தொகு- மொழி வரலாறு
- மொழிக் குடும்பம்
- பேசுபவர்களின் எண்ணிக்கை, பின்புலம்
- பேசப் படும் இடங்கள்
- மொழியின் தத்துவ அல்லது மெய்யியல் பின்புலம் - சூழமைவு
- எழுத்து முறைமை, எழுத்துக்கள் (அரிச்சுவடி), எழுத்துக்கூட்டல்
- சொல்லதிகாரம், பொருளதிகாரம்
- ஒலி முறைமை, ஒலிகள், உச்சரிப்பு
- இலக்கணம்
- இலக்கியம்
- மொழிக் கல்வி
- மொழி அமைப்புகள்
- மொழி ஊடகங்கள்
துல்லியமாக மேற்கோள்கள் சேர்க்கப்பட வேண்டும்
தொகுதுல்லியமாக மேற்கோள்கள் தரப்பட வேண்டும். --Natkeeran 06:12, 20 பெப்ரவரி 2007 (UTC)
தமிழ் இலக்கியம் கால வகைப்படுத்தல்
தொகு- பண்டைக்காலம்
- இடைக்காலம்
- தற்காலம்
- பழங்காலம்
- சங்க இலக்கியம் (கி.மு. 500 - கி.பி. 100)
- நீதி இலக்கியம் (100 - 500)
- இடைக்காலம்
- பக்தி இலக்கியம் (600 - 900)
- காப்பிய இலக்கியம் (900 - 1200)
- உரைநூல்கள் (1200 - 1500)
- புராண இலக்கியம் (1500 - 1800)
- இக்காலம் (1800 - 2006)
தமிழ் இலக்கியம் தொடர்பான கட்டுரையும் மேம்படுத்தல் வேண்டும்--கலாநிதி 17:13, 20 பெப்ரவரி 2007 (UTC)
ஆய்த எழுத்து
தொகுஞானவெட்டியான், ஆய்த எழுத்தை ஆயுத எழுத்து என மாற்றியுள்ளார். இது சரியில்லை. தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரத்தில் இரண்டாவது நூற்பாவே, "அவைதாம், குற்றியலிகாரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன" என்று உள்ளது. ��ய்தம் என்பதை ஆயுதம் என்று எழுதினால் அடிப்படைப்பொருளே மாறுகின்றது. ஆய்தம் வேறு அயுதம் வேறு. மீண்டும் ஆய்தம் என்றே மாற்றுமாறு வேண்டுகிறேன் --செல்வா 12:55, 12 மார்ச் 2007 (UTC)
செல்வா, இந்த தமிழ் கட்டுரை, அதிகம் பார்க்கப்படும் கட்டுரைகளில் ஒன்று. எனவே, எப்பொழுதும் இது போன்று உறுதியாக பிழை தான் என்று நிறுவத்தக்க பிழைகளை கண்டால் உடனடியாக மாற்றலாம். காத்திருக்க அவசியம் இல்லை.--Ravidreams 15:39, 12 மார்ச் 2007 (UTC)
- ரவி, இக்கட்டுரை, என் கணிப்பில் பல இடங்களில் சரியாக எழுதப்படவில்லை. பின்னர் இக்கட்டுரையை பார்க்கின்றேன். இப்போதைக்கு, கீழ்க்கண்ட வரியை நீக்கியுள்ளேன்.
- "ஆய்த எழுத்தில் உள்ள மூன்று புள்ளிகளும் இடைக்காலத்தில் போரில் பயன்படுத்தப்பட்ட கேடயத்தில் காணப்படும் குறியீடுகளுடன் ஒத்திருப்பதைக் காணலாம். ஆகையால் ஆய்த எழுத்து என்று கூறப்பட்டிருக்கலாம்."
- ஆய்த எழுத்து என்பது நுட்பமாய் ஆய்ந்தறிந்து நிறுவப்பட்ட எழுத்து. இதனை விளக்க இப்பொழுது என்னால் இயலாது. இதன் நுட்பம், மெய்யியலிலும் உணரப்பட்ட ஒன்று (இதனையும் இப்பொழுது என்னால் விரிவாக எழுத இயலாது). ஆய்த எழுத்திற்கும் ஆயுதத்திற்கு எந்தவித தொடர்புமில்லை (ஆயுதமும் எண்ணி ஆய்ந்து ஆக்கப்பட்ட ஒன்று என்பதைத்தவிர).
--செல்வா 16:15, 12 மார்ச் 2007 (UTC)
இப்பக்கத்திலுள்ள கேடய படிமம் பொருத்தமற்றது. மேலும் ,'ஆயுதம்' என்ற வடமொழிக்கும் , இதற்கும் தொடர்பு எண்ணத்தை உருவாக்கிவிடும். 'ஆய்' என்றால் தாய் என்ற பொருளுண்டு. முதன்முதலில் எழுதத் துவங்கும் குழந்தை, முதலில் ஒன்று மற்றும் வட்டவடிவையே எழுத முற்படுகிறது. நன்றி. வணக்கம்.தகவலுழவன் 15:42, 13 நவம்பர் 2008 (UTC)
நால்வகைச் சொற்கள்
தொகு- செந்தமிழ் -> இயற்சொற்கள்
- கொடுந்தமிழ் -> திசைச் சொற்கள்
- வட சொற்கள் (சமஸ்கிருததில் இருந்து வந்த சொற்கள்)
- திரிசொற்கள்
http://noolaham.net/library/books/04/343/343.pdf
--Natkeeran 23:13, 17 மார்ச் 2007 (UTC)
ஒலியும் எழுத்தும்
தொகுதமிழ் எழுத்துக்களுக்கு ஒலியே அடிப்படை. [1] --Natkeeran 00:00, 18 மார்ச் 2007 (UTC)
தமிழ் - ஒலியனியல்
எனக்குத் தெரிந்த தமிழை எடுத்தியம்ப முற்பட்ட ஒரு சிறு முயற்சி. விக்கி நடைக்கு ஒத்து வருகிறதா? இல்லையெனில் அடுத்த தலைப்புக்கு முயலுவேன்.--ஞானவெட்டியான் 06:13, 18 மார்ச் 2007 (UTC)
பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
தொகுதானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
தொகுதானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
- http://www.uni-koeln.de/phil-fak/indologie/index.e.html
- In ஜெர்மன் தமிழியல் on 2007-05-06 10:47:39, 404 Not Found
- In தமிழ் on 2007-05-06 11:48:21, 404 Not Found
- In ஜெர்மன் தமிழியல் on 2007-05-14 01:29:28, 404 Not Found
தமிழ் கற்றல்
தொகுவெளி இணைப்புகள்
தொகுஇக்கட்டுரை நன்கு வளர்ச்சி பெற்ற கட்டுரை. எனவே வெளி இணைப்புகள் தெரிவு முக்கியத்துவம் பெறுகின்றது. மேலும், தமிழ் பற்றி பலவேறு தளங்கள் உள்ளன. ஒரே தளத்துக்கு இரு இணைப்புகள் போன்றவை தவர்க்கப்படவேண்டும். --Natkeeran 22:28, 23 செப்டெம்பர் 2007 (UTC)
- இக்கட்டுரை இன்னும் பல கோணங்களில் திருத்தி செப்பம் செய்யவேண்டிய கட்டுரை. --செல்வா 22:34, 23 செப்டெம்பர் 2007 (UTC)
நேரடியாக பொருத்த மற்ற இணைப்புகள்
தொகுகட்டுரையில் இருந்து மேல் இரண்டும் நீக்கப்பட்டது. இணைத்த பயனர் தயந்து விளக்கம் தரலாம். நன்றி. --Natkeeran 02:03, 27 செப்டெம்பர் 2007 (UTC)
இச் செய்தியைப் பார்க்கவும். நண்பர் நா. கணேசன் சுட்டிக்காட்டினார்.
--செல்வா 13:40, 6 டிசம்பர் 2007 (UTC)
Moved: மிகப்பழங்காலத்தில் ஒரு மொழி பேசப்பட்டு
தொகு"இந்திய நாடு முழுதும் மிகப்பழங்காலத்தில் ஒரு மொழி பேசப்பட்டு வந்தது. தமிழ்தான் அந்த மொழி. தமிழிலிருந்தே மற்றைய திராவிட மொழிகள் திரிபடைந்தன என்பதாகும். இது பலராலும் ஒருமுகமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்து. (இதை வரதராசனும் தெரிவித்திருக்கிறார்.) பரத கண்டம் முழுதும் ஆதி நாளில் தமிழ் மொழியே பேசப்பட்டு வந்திருக்கிறது. இதுவரை தெரிந்த சரித்திரங்களை (முடிந்த அளவு) நோக்கும் பொழுது வட மொழியாகிய சமஸ்கிருதத்தை தாய்மொழியாக பேசிய மக்கள் எங்கேனும் எப்போதேனும் வாழ்ந்ததாக வரலாறு எதுவும் இல்லையென்றே தோன்றுகிறது. அவ்வாறான மக்கள் என்று சொல்லப்படக்கூடியோர் பற்றிய விவரங்கள் - அவர்களது கலைகலாச்சாரங்கள் என்ன, பழக்கவழக்கங்கள் என்ன என்பது பற்றிய இன்னோரன்ன தகவல்கள், எதுவுமே திருப்திகரமானதாக இல்லை. இன்னும் சமஸ்கிருதமானது ஓர் அவைமொழியாகவே இருந்து வந்திருக்கிறது, வீட்டுமொழியாக ஒருபோதும் நிலவியதில்லை என்ற வலுவூன்றி நிற்கும் கருத்தும் இங்கு எடுத்து நோக்கற்பாலது. ஆகவே சமஸ்கிருதமானது ஓர் உருவாக்கப்பட்ட மொழியேயன்றி இயற்கையாக மனிதரின் இயல்பு வாழ்வில் தோ���்றியதன்று என முடிவு செய்வதை வெறுமனே பிழையென்று ஒதுக்கிவிட முடியாது. தமிழர்களே சமஸ்கிருதத்தை உருவாக்கியிருக்க வேண்டும். ஆதித்தமிழ் மொழி பேசிய மக்களில் கற்றறிந்தோர் எனப்பட்டோர் தான் சமஸ்கிருதத்தை உருவாக்கியிருக்க வேண்டும். மனித நாகரிக வளர்ச்சியில் வெவ்வேறு அறிவுத்துறைகள் எதுவும் தோன்றுமுன், தத்துவமும் பிறக்குமுன், கல்வி என்று சொல்லப்பட்டது மொழிக்கல்வியாகவே இருந்து வந்தது; மொழியைக்கற்றோரே அன்று இருந்திருக்கக்கூடிய ஒருசில அறிவுத்துறைகளையும் கற்றனர். இவ்வாறான கல்வியியலாளர்களாக பரத கண்டத்தில் அந்நாளில் வாழ்ந்த தமிழ்க்கற்றறிந்தோர், ஒரு கூட்டம் மக்களிடை குழூக்குறி வழங்குதல் போல் தம்மிடையும் ஒரு வழக்கு இருக்க வேண்டுமென விருப்புற்றிருப்பதில் வியப்பொன்றுமில்லை. இந்த உந்துதலின் நிமித்தம் சமஸ்கிருதத்தை அவர்கள் உருவாக்கியிருக்க வேண்டும். அவர்கள் வெகு நிச்சயமாக தமக்குத்தெரிந்த தமிழிலிருந்து தான் புதிய மொழியை உருவாக்கியிருக்க முடியும். எனவே, தமிழில் இருந்தே சமஸ்கிருதம் பிறந்தது. ஏற்கனவேயிருந்த தமிழ்ச்சொற்களைத்தான் அவர்கள் எடுத்துக்கையாண்டிருப்பார்கள்; அந்தச்சொற்களை எழுந்தமாற்றாக இல்லாமல் காரண காரிய தொடர்புகளோடு ஒலி மாற்றம் செய்து சமஸ்கிருதச்சொற்களை அவர்கள் உருவாக்கியிருக்க வேண்டும். எனவே, எல்லா சமஸ்கிருதச்சொற்களும் தமிழ்ச்சொற்களே. ஆரியர் என்று இந்நாளில் பொதுவாக கருதப்படுவோர் இந்தியாவுக்குள் புகுந்த பொழுது அவர்கள் இனத்துக்கென ஒரு பெயர் இருக்கவில்லை, அவர்களுக்கென்று ஓர் ஒழுங்கமைப்பான மொழியும் இருக்கவில்லை. அவர்கள் வெறும் நாடோடிக்கூட்டத்தினர் மாத்திரமே. அவர்கள் எங்கோ தொலைவிருந்து வந்து வட இந்தியாவில் வாழ்ந்த தமிழ் மட்டும் பேசிய ஒன்றாக வாழ்ந்தனர். நயத்தினாலும் பயத்தினாலும், கூடவே சிறப்பாக தமிழர்க்கேயுரிய விருந்தோம்பல் பண்பினாலும், இது சாத்தியமாகியிருக்க வேண்டும். கலப்புத்திருமணங்களும் நடைபெற்றிருக்கக்கூடும். பிற்பாடு, ஆனால் வெகு விரைவில், பல்வேறு காரணங்கட்காக அத்தமிழர்கள் செழிப்பு மிக்க பூமத்திய ரேகை நோக்கி நகர்ந்து தெற்கே வாழ்ந்த தமிழர்களோடு தமிழர்களாக வாழத்தலைப்பட, வந்தோர் ஆரியராக வடக்கே நிலைகொண்டனர். காலப்போக்கில் முகலாயப்படையெடுப்புக்களோடு அவர்கள் இனத்தின் நிறமே மாறிப்போனது
இணைப்புகள் சரிவர இயங்கவில்லை
தொகுதமிழ் மொழி கற்றுக்கொள்ள உதவும் ஆதாரங்கள்
தொகுஇந்தப் பகுதியில் இருக்கின்ற பல இணைப்புகள் சரிவர இயங்கவில்லை. பல இப்படியொரு இணைப்பே இல்லையென சொல்லுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் சரிசெய்திடவும்,..
- சகோதரன் ஜெகதீஸ்வரன். http://sagotharan.wordpress.com
ஆய்த எழுத்தும் கேடயமும்
தொகுஇந்த கேடயத்தின் காணப்படும் மூன்று புள்ளிகள் அல்லது சிறிய வட்டங்கள் போன்றவை கலைநயமிக்க கலைத்திறன் செயல்பாடுகள் போலவே உள்ளன. அவற்றை எப்படி ஆயுத எழுத்து என்று கூறமுடியும், ஏதேனும் சான்றுக���் உள்ளனவா?
- படத்தை நீக்கியுள்ளேன். நேரடியாக ஆயுத எழுத்துடன் எத்தொடர்பும் இருப்பது போலத் தெரியவில்லை--சோடாபாட்டில்உரையாடுக 06:04, 9 மே 2011 (UTC)
- ஆம், முதலில் ஆங்கில விக்கியில் இதைச் சிறப்புக் கட்டுரையாக்க முனைந்தபோது, கட்டாயம் படங்கள் இருக்க வேண்டும் என்றார்கள். அந்த அவசரத்தில் சேர்த்தது என நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 06:11, 9 மே 2011 (UTC)
தமிழில் எழுத (Ctrl+M)
எழுத்துப்பிழைகளை திருத்தலாமா?
தொகுவிக்கிபீடியா தமிழ் இடுக்கைகளில் எழுத்துப்பிழைகளைக் கண்டால் எவரேனும் அவற்றை மாற்றலாமா ? இதற்காக ஏதாவது நெறிமுறைகள் உள்ளனவா? சொற்களோ, சொற்தொடர்களோ அல்லது கருத்துகளோ மாற்றப்படாது. --Jambolik 16:45, 5 திசம்பர் 2011 (UTC)
- கட்டுரைகளில் உள்ள எழுத்துப்பிழைகளை எவர் வேண்டுமேனாலும் எப்போது வேண்டுமானாலும் திருத்தலாம். யாரிடமும் கேட்கத்ட் தேவையில்லை. உரையாடல் பக்கங்களிலும் பயனர் பக்கங்களிலும் உள்ளவற்றை எழுதியவரிடம் சொல்லி விட்டுத் திருத்தலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 16:50, 5 திசம்பர் 2011 (UTC)
- மேலும் யாதேனும் கருத்துக்களில் சந்தேகம் எழுந்தால் பேச்சுப் பக்கத்தில் இணக்கம் கேட்டுத்திருத்தலாம்.--சஞ்சீவி சிவகுமார் 17:00, 5 திசம்பர் 2011 (UTC)
மலையாளம் தமிழின் கிளை மொழி அல்லவே !
தொகுமலையாளம் தற்போது ஒரு தனியான இலக்கண இலக்கியங்களைக் கொண்ட சுதந்திரமான மொழி. அப்படியிருக்கையில் அது 'தமிழ்' இடுக்கையில் வலதுபுறத்தில் காண்பிக்கப்பட்டிருக்கும் தமிழின் கிளைமொழிகளின் அட்டவணையில் இடம் பெற்றிருப்பதின் நோக்கம் யாதோ? பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழின் கிளைமொழியாகயிருந்து பின்னர் தனிமொழியாகியிருக்கலாம். அது வேறு நிலை ! --Jambolik 20:56, 5 திசம்பர் 2011 (UTC)
தமிழின் இடம்...?
தொகுதற்போது (2012 இயர்புக்) தாய்மொழியாக பேசப்படும் மொழிகளுள் தமிழ் 19ஆவது இடத்தில் உள்ளது. எதனலாக்கில் 18வது என்றுள. எதனலாக் எப்போது கடைசியாக திருத்தப்பட்டது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:10, 10 மார்ச் 2012 (UTC)
- எத்தனோலாகில் 2009 இன் தரவுப்படி தமிழ் 18 ஆவது இடத்தில் உள்ளது (http://www.ethnologue.com/ethno_docs/distribution.asp?by=size). மலையாள மனோரமாவின் இயர்புக்கு ஏன் 19 என்று காட்டுகின்றது என்று விளங்கவில்லை.--செல்வா (பேச்சு) 14:35, 10 மார்ச் 2012 (UTC)
நான் பார்த்த இயர்புக்கில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளது. அப்படி இருக்கையில் மலையாள மனோரமா இயர்புக் மற்றும் மற்ற நான் பார்த்த சுரா இயர்புக்கில் உள்ளது தான் சரி என நினைக்கிறேன். மேலும் கொரியன் மொழியர்களின் எண்ணிக்கை 75மில்லியன் என்றுள்ளது. அதனால் இயர்புக்களில் உள்ளதே சரி என நினைக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:10, 10 மார்ச் 2012 (UTC)
ஆங்கில விக்கியில் 19ஆம் இடமே உள்ளது. en:List of languages by number of native speakers--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:17, 10 மார்ச் 2012 (UTC)
- எந்தக் கணக்கெடுப்பு என்று கூறுங்கள். தமிழர்கள் இலங்கையிலும், மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் கனடாவிலும் என்று 17-18 நாடுகளில் வாழ்கிறார்கள். இந்திய நடுவணரசுக் கணக்கெடுப்பு மட்டும் போதாது. மலையாள மனோரமா இயர்புக்கு தரும் தரவுக்கு ஆதாரம் தந்திருந்தால், அதனைச் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன். --செல்வா (பேச்சு) 17:19, 10 மார்ச் 2012 (UTC)
- ஆங்கில விக்கியும் எத்தனோலாகைத்தான் அடிப்படை ஆதாரமாகச் சுட்டுகின்றது. ஆங்கில விக்கியில் கொரிய மொழியும் தமிழும் ஒரே எண்ணிக்கையில் "Native" மொழியாளர்களாகக் காட்டுகின்றது. ஆங்கில விக்கியில் "verify" என்னும் அறிவிப்பு இந்திய அரசின் கணக்கெடுப்பைப் பற்றியது. 18 ஆவதோ 19 ஆவதோ பெரிய மாற்றம் இல்லை, ஆனால் மலையாள மனோரமா இயர்புக்கை மட்டும் வைத்துக்கொண்டு, அதன் தரவுகளின் ஆதாரம் இல்லாமல் மாற்ற வேண்டாம். --செல்வா (பேச்சு) 17:29, 10 மார்ச் 2012 (UTC)
- எந்தக் கணக்கெடுப்பு என்று கூறுங்கள். தமிழர்கள் இலங்கையிலும், மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் கனடாவிலும் என்று 17-18 நாடுகளில் வாழ்கிறார்கள். இந்திய நடுவணரசுக் கணக்கெடுப்பு மட்டும் போதாது. மலையாள மனோரமா இயர்புக்கு தரும் தரவுக்கு ஆதாரம் தந்திருந்தால், அதனைச் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன். --செல்வா (பேச்சு) 17:19, 10 மார்ச் 2012 (UTC)
அந்த இயர்புக்கில் அனைத்து உலக மொழிகளுக்கும் கொடுத்துளனர். அதனால் இது நடுவனரசுடையது அல்ல. மேலும் தமிழை தாய்மொழியாக கொண்டுள்ள மற்றும் அவை இருக்கும் நாடுகள் என்றே உள்ளது. அதில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகியவை கொடுக்கப்பட்டுளன. 2011 கணக்கெடுப்பை நான் கூறியதன் காரணம் அது தற்போது அச்சிட்டது என்பதை கூறுவதற்காகவே. அதே நேரம் இவ்விணைப்பில் வேறு மாதிரி உள்ளது. http://www.vistawide.com/languages/top_30_languages.htm. இது உறுதிப்படுத்தும் வரை எதையும் மாற்றுவதாக இல்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:44, 10 மார்ச் 2012 (UTC)
பகுப்பு:தமிழர் அளவியல் என்பதில் அடங்கும் கட்டுரைகள் மேம்படுத்த வேண்டும். இங்குள்ள பல குறிப்புகள் அவற்றுள் மாற்றப்பட வேண்டியன. இதற்கு முன் , அங்குள்ள கட்டுரைகள் சில ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அது குறித்த பிறர் எண்ணம் அறிய ஆவல்.--≈ த♥உழவன் (கூறுக) 08:03, 3 ஏப்ரல் 2013 (UTC)
மலேசியாவில் தமி்ழ் ஆட்சிமொழியா??
தொகுமலேசியாவில் தமிழ் ஆட்சிமொழி இல்லையே! தமிழும் பயன்பாட்டு மொழிதான்! ஆதாரத்தை சேர்க்கவும். அல்லது கருத்தை நீக்கவும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:17, 24 சூலை 2013 (UTC)
தமிழ் என்ற பெயரின் மூலம்
தொகுதமிழ் என்ற சொல்லுக்கு மூலம் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் "த்ராவிட->தமிழ்/தமிழ்->த்ராவிட", "தம்+இழ்" என்ற இரு கருத்துகள் மட்டுமே இங்கே தரப்பட்டுள்ளது. மேலும், சில கருத்துகளை படித்தேன். மலையாளத்தில் எழுதப்பட்ட "தமிழகவும் த்ராவிடமாஹாத்யமும்" என்ற நூலில் இருந்து...
- திரு + இடம் = திருயிடம் = திருவிடம் = திராவிடம் = த்ராவிடம்; (ஐஸ்வர்யமுள்ள, அழகுள்ள பகுதி என்று அர்த்தம்)
- தம் + மொழி = தம்மொழி என்ற பதம் தமிழ் என்றாகியதாக வேறொரு அறிஞர் கருதுகிறார்.
- தேன் + மொழி = தெம்மொழி => தமிழ் என்று மாறியிருக்கலாம்.
- முந்தைய தமிழில் இருந்து கரிந்தமிழ், செந்தமிழ் என்றவையும், கரிந்தமிழில் இருந்து மலையாளமும் உண்டாகின என்று அறிஞர் கருதுகிறார்.
- மலையாளத்தில் (கேரளத்தில்) ஆதிவாசிகள் தமிழர். அவருடைய மொழி தமிழாக இருந்தது.
- எழுத்து வழக்கிற்கு செந்தமிழென்றும், பேச்சுவழக்கிற்கு கரிந்தமிழென்றும் தமிழ் அறிஞர்கள் பெயரிட்டிருக்கின்றனர் என்று "கேரளபாணினி" சொல்கிறது.
- தமிழகத்தில் கொடுந்தமிழ் மொழியில், தெற்கில் திருவிதாங்கூர், வடக்கில் மலையாளம் என்ற பகுதிகளிலே உள்ள வட்டார பேச்சு மொழிகளுக்கு அதிகளவில் வித்தியாசமில்லை.
- திருவல்லையில் உள்ள செம்பு பட்டயத்தில் எழுதப்பட்டவற்றைப் பற்றி, திருவிதாங்கூர் தொல்பொருளாய்வு அறிஞர் மி. கோபிநாதராவு சொல்லும் கருத்து "பட்டயத்தில் உள்ள பதங்கள் முழுவதும் தமிழாயிருக்கிறது. இலக்கணம் புரியவில்லை. பழந்தமிழ் இலக்கியமான, தொல்காப்பியத்தில், தமிழ் பேசிய பகுதியைப் பற்றி அதில் எழுதப்பட்டிருக்கிறது. வடக்கு - திருப்பதிமலை, தெற்கு கன்னியாகுமாரி, கிழக்கும் மேற்கும் கடல். எனவே, மலையாளநாடும் தமிழகம் என்ற பகுதிக்குள் உட்பட்டிருக்கிறது. இங்குள்ள மக்களின் பழக்கவழக்கம், சுபாவம் உள்ளிட்டவை பழந்தமிழ்நாட்டில் இருப்பதைப் போன்றே இருக்கிறது.
- மலையாளத்தின் மூலம் பற்றிய கருத்துகள் விவாதத்திற்கு உட்பட்டவை.
- மலையாளத்தின் மொழி =மலையாளி மொழி, மலையாளம்=மலைநாடு (கேரளம்)
இவற்றை படித்து பார்த்து, கட்டுரையில் சேர்க்க வேண்டுகிறேன். மேலும், தமிழகம், கேரளம் பற்றிய ஆய்வாளர்களின் கருத்தும், சொல்லாராய்ச்சிகளும் உள்ளன. :)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:48, 9 சனவரி 2014 (UTC)
//எனவே தொல்காப்பியர் பாணினியின் காலமாகச் சொல்லப்படும் கி.மு. நாலாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் என்பது தெளிவு.//
தமிழ் என்ற சொல�� தொல்காப்பியத்திலேயே உள்ளது. மற்றது எல்லாம் கட்டுக்கதை. வாய்க்கு வந்த மாதிரி திரிப்பது. வேதம் பாடியது அதுக்கு முன்னர்னு சொன்னாலும் அது எந்த மொழியில் பாடப்பட்டது என்பதில் தெளிவில்லை. அதனால் திருவிடம்-->திராவிடம் ஆனது என்பதெல்லாம் நகைச்சுவை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:36, 9 சனவரி 2014 (UTC)
தமிழ் (சொல்)
தொகுதமிழ் என்ற சொல்லைப் பற்றி பொதுவன் ஐயா இக்கட்டுரையில் எழுதிவரும் தகவல்கள் நீண்டதாக உள்ளது. இதனை தமிழ் (சொல்) அல்லது உகந்த தலைப்பில் தனிக்கட்டுரையாக்கலாம். இக்கட்டுரையில் சுருக்கத்தை மட்டும் தந்து இணைப்புத் தரலாம். பயனர்:Sengai Podhuvan கவனிக்க.--Kanags \உரையாடுக 11:25, 16 அக்டோபர் 2014 (UTC)
தமிழ்
தொகு//தமிழ், இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. // இலங்கை ஏன் இதில் சேற்கபட வில்லை...? சிஞங்கபூர்?(இந்தியா இந்து மதம்... ஆனால் தமிழர் சைவசமயம்..) மதம் இங்கு தேவை இல்லை என நினைக்குறேன்.. உன்மையில் தெற்காசியாவில் பேசப்படும் மொழிகளில் அல்லது இந்தியா/ இலங்கை / சிங்கப்பூர்/ மொரிஷியல் நாடுகளிள் பேசப்படும் மொழிகளில் ஒண்று, மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது etc.. இந்தியாவில் மட்டும் தமிழ் இல்லை...--−முன்நிற்கும் கருத்து முகுந்தன்78 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
ஆங்கில பெயர் எதற்கு
தொகுமுதற்வரியில் Tamil language என்று அடைப்புக்குறியில் எழுதப்பட்டுள்ளது. ஏன் இப்படி? ஆங்கில மொழியைப் பற்றி எழுதும்பொது ஆங்கிலத்தில் அதன் பெயரை எழுதுவதில் பொருள் உள்ளது, ஆனால் இங்கு நாம் ஏன் ஆங்கிலத்தில் எழுத்தவேண்டும்? Jaiganesh.Kumaran (பேச்சு) 15:41, 28 அக்டோபர் 2023 (UTC)
- வணக்கம் @Jaiganesh.kumaran:. பன்மொழிக் கட்டுரைகளை ஒன்றிணைக்க அடைப்புக்குறியில் ஆங்கிலத்தில் எழுதுவது வழக்கமாக உள்ளது.-- சா. அருணாசலம் (பேச்சு) 16:23, 28 அக்டோபர் 2023 (UTC)