பேச்சு:ஓசனிச்சிட்டு
Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by Sundar in topic தொடர்புடைய உரையாடல்
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூன் 13, 2012 அன்று வெளியானது. |
தேன்சிட்டு என்பதும் இதைத்தான் குறிக்குமா ? వినోద్ வினோத் 15:45, 14 மார்ச் 2008 (UTC)
- அல்ல. தேன்சிட்டு என்பதும் சிறிய பறவை இனம்தான், ஆனால் அவை வேறானவை. தேன்சிட்டுப் பறவைகளைத் தமிழ்நாட்டிலும் காணலாம், ஆனால் ஓசனிச்சிட்டு அல்லது சுரும்புச்சிட்டுகள் வட , தென் அமெரிக்கக்கண்டகளில் மட்டுமே காணமுடியும் (வளர்ப்பாக வேறு இடங்களில் இப்பொழுது இருக்கலாம்). பெரும்பாலும் நடு அமெரிக்கா, தென் அமெரிக்காவின் ஆண்டீய மலைத்தொடர்ப் பகுதிகளில் காணலாம். நான் பெரு நாட்டிற்குச் சென்று அங்கு ஆண்டீய மலைப்பகுதிகளில் ஏறிச்சென்று அங்குள்ள காடுகளில் கண்டபொழுதுதான் இவற்றுக்கு ஏன் humming bird என்று பெயர் ஏற்பட்டது என்று மெய்யுற உணர்ந்தேன். பறவைகள் அருகில் இருப்பதை அது சிறகடித்து (ஓசனித்து) எழுப்பும் உசுஉசுஉசு என்னும் ஒலியில் இருந்தே கண்டுவிடலாம். அங்குள்ள ஓசனிச்சிட்டு (சுரும்புச்சிட்டு)கள் சற்று பெரியனவாக இருந்தன. கனடாவில் எங்கள் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் கோடைக்காலங்களில் இப்பறவைகளைக்காணலாம். வண்டு அளவே இருப்பது போன்ற மிகச்சிறிய ஓசனிச்சிட்டுப் பறவை ஒன்றை பெரு நாட்டில் கண்டபொழுது "பெரு" வியப்பாக இருந்தது ! ஆனால் போதிய அளவு உன்னிப்புடன் காண வாய்ப்பு கிட்டவில்லை.--செல்வா 15:59, 14 மார்ச் 2008 (UTC)
தொடர்புடைய உரையாடல்
தொகுகேள்வி: http://twitter.com/mayooresan/status/1713942170 விடை: http://twitter.com/oligoglot/status/1714017727 சரிதானே? -- சுந்தர் \பேச்சு 05:11, 6 மே 2009 (UTC)
- அது இலங்கையில் எடுக்கப்பட்ட படம் எனப்பின்னர்தான் அறிந்தேன். அதனால் அது ஓசனிச்சிட்டாக இருக்க முடியாது, தேன்சிட்டுதான் என்று திருத்திக் கொண்டேன். -- சுந்தர் \பேச்சு 05:33, 6 மே 2009 (UTC)
மயில் நிற ஓசினிச்சிட்டு
தொகு- இப்படத்தை மயில்நிற ஓசினச்சிட்டெனக் கருதலாமா?
தங்களைப்போலவே, ஓசன்-->ஓசனித்தல்-->ஓசனி மற்றும் சிட்டு என்பனவற்றின் பொருளாழத்தினை உணர்ந்து வியந்தேன். தமிழ்ச் சுவையுணரந்தேன். நன்றி. த* உழவன்