பூரிசிரவஸ்
பூரிசிரவஸ் (Bhurishravas),பாக்லீக நாட்டு மன்னராவர். சாந்தனுவின் சகோதரன் [[|பாக்லிகனின் பேரனும், சோமதத்தனின் மகனும் ஆவன். இவனுக்கு கிருட்டிணன் மற்றும் சாத்தியகியின் பிறவிப் பகைவர்கள் ஆவர். குருச்சேத்திரப் போரில், கௌரவர் அணியில் சேர்ந்து, பாண்டவர் அணிக்கு எதிராக போரிட்டவன். 5ஆம் போரில் சாத்தியகியின் பத்து மகன்களை கொன்றான். 14ஆம் போரில் அபிமன்யுவின் மரணத்திற்கு காரணமான ஜெயத்திரதனை பழி வாங்க வந்த அருச்சுனனை சக்கர வியுகத்தை உடைக்க இயலாதபடி தடுத்து நிறுத்தினான். பின்னர் சாத்தியகியை கொல்ல வந்த பூரிசிரவசின் ஒரு கையை அருச்சுனன் வெட்டி எறிந்தான். உடன் சாத்தியகி பூரிசிரவசின் தலையை தன் வாளால் கொய்தான்.[1][2]
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Mahabharata translated by C Rajagopalachari பரணிடப்பட்டது 2008-05-09 at the வந்தவழி இயந்திரம்
- தமிழில் முழு மஹாபாரதம்
- கதைநாயகனனான வெண்முரசு நாவல் பகுதிகள்