புலையர்

சாதி

புலையர் (Pulayar) (புலையா, புலையாசு, சேரமான், சேரமார் உட்பட) எனப்படுவோர் தமிழ்நாட்டில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வாழும் ஒரு பட்டியல் இன மக்கள் ஆவர்.[1] இவர்கள் கேரளா மற்றும் கருநாடக மாநிலங்களிலும் வாழுகின்றனர். இவர்கள் வேட்டையில் கிடைக்கும் இறைச்சி, மற்றும் காய், கனி, கிழங்கு வகைகளை உண்பர். புலையரது தலைவனுக்கு கணியன் என்று பெயர்.[சான்று தேவை] சித்திரை மாத முழுநிலவு நாளில் விழா கொண்டாடுகின்றனர். திருமண விழாவில் கற்பூரவல்லி என்று வாசமுள்ள செடிக்கொத்தொன்று மணமகள் கழுத்தில் அணிவிக்கப்படுகிறது. பெண்களிடம் பித்தளை மோதிரமும், கண்ணாடி வளையல்களும் அணியும் வழக்கம் பரவலாக உள்ளது.

புலையர்
மொத்த மக்கள்தொகை
1,041,540 (2001)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
மொழி(கள்)
தமிழ் மலையாளம்
சமயங்கள்
இந்து

மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி

தொகு

கேரளா மாநிலத்தில் 2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கட் தொகை கணக்கீட்டின் படி இவர்கள் 1,041,540 பேர் உள்ளனர். அதாவது 3.27 சதவீதம் பேர் அங்கு வசிக்கின்றனர்.[2]

போராட்டம்

தொகு

1976 ஆம் ஆண்டு மத்திய அரசு பட்டியல் இனத்தவர்களை மறு சீரமைப்பு செய்தபோது இவர்களை, பழங்குடிகளின் பட்டியலிருந்து பட்டியல் இனத்தவர்களாக மாற்றிவிட்டார்கள். தங்களை பழங்குடிகளாக மாற்றும்படி கடந்த 40 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். கேரளா மாநிலத்தில் வாழும் சேரமார் புலயர் என்ற இனத்தவர்களைக் கணக்கில் கொண்டு தமிழக மலைப்பகுதியில் வாழும் இவர்களையும் பட்டியல் இனத்தவர்களோடு சேர்த்துவிட்டார்கள்.[3]

குறிப்பிடத்தகுந்த நபர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "புலயருக்கு எ���்போது விடுதலை?". இந்து தமிழ் திசை (04 பிப்ரவரி 2019)
  2. http://censusindia.gov.in/Tables_Published/SCST/dh_sc_kerala.pdf
  3. "புலயருக்கு எப்போது விடுதலை?". இந்து தமிழ் திசை (04 பிப்ரவரி 2019)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலையர்&oldid=3456105" இலிருந்து மீள்விக்கப்பட்டது