பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்

ஆங்கில மொழி பொது அறிவுக் கலைக்களஞ்சியம்

பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (Encyclopædia Britannica) உலகிலேயே மிகப் பழையதும், பெரு மதிப்புடையதுமான ஆங்கில மொழிப் பொதுக் கலைக்களஞ்சியம் ஆகும். இதனுடைய கட்டுரைகள், பொதுவாகச் சரியானவையும், நம்பிக்கைக்குரியவையும், நன்றாக எழுதப்பட்டவையுமாகும் கருதப்படுகின்றன. இது சுகாட்லாந்து அறிவொளியின் (Scottish enlightenment) விளைவாக உருவாக்கப்பட்டது.

பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்
Britannica's logo of a blue thistle
Britannica's thistle logo
நூலாசிரியர்As of 2008, 4,411 named contributors
பட வரைஞர்பல; அண்ட்ருவ் பெல் ஆரம்ப படங்கள்
நாடு
மொழிபிரித்தானிய ஆங்கிலம்
பொருண்மைபொது
வெளியிடப்பட்டது
வெளியீட்டாளர்Encyclopædia Britannica, Inc.
வெளியிடப்பட்ட நாள்
1768–2010 (அச்சுப் பதிப்பு)
ஊடக வகை32 தொகுதிகள், கணத்த அட்டை (15வது பதிப்பு, 2010); அச்சுப் பதிப்பு 2012-ல் நிறுத்தபப்ட்டது
பக்கங்கள்32,640 (15வது பதிப்பு, 2010)
ISBN978-1-59339-292-5
031
LC வகைAE5 .E363 2007
உரைபிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் விக்கிமூலத்தில்
1913 விளம்பரம்

வரலாறு

தொகு

பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் முதலில் எடின்பரோவில் அடம் மற்றும் சார்லசு பிளாக் என்பவர்களினால் 18ம் நூற்றாண்டு தொடக்கத்தில் பதிப்பிக்கப்பட்டது. பிரெஞ்சு Encyclopédie போலன்றி, பிரித்தானிக்கா பழமைவாதப் பதிப்பாகும். பிந்திய பதிப்புக்கள் வழமையாக ஆட்சியிலிருந்த சக்கரவர்த்திகளுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டன. 1870களில், இதன் 19ம், 20ம் பதிப்புக்களின் போது இவ்வெளியீடு சுகாட்லாந்திலிருந்து இலண்டனுக்கு மாற்றப்பட்டு த டைம்சு என்னும் செய்திப் பத்திரிகையுடன் இணைக்கப்பட்டது. 11ஆவது பதிப்புக்காக, இவ்வெளியீடு, இங்கிலாந்திலேயே, கேம்பிறிச்சு பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டது. 11ம் பதிப்புக்குப் பின்னர், இதனுடைய வியாபாரச் சின்னமும், பதிப்புரிமையும் சியர்சு உரோபக் (Sears Roebuck) நிறுவனத்திற்கு விற்கப்பட்டதுடன், சிகாகோ, இலினொய், ஐக்கிய அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டு அங்கேயே நிலைகொள்ளலாயிற்று. தற்போதைய பதிப்பாளர்கள் "என்சைக்கிளோபீடியா பிரித்தானிக்கா நிறுவனம்" (Encyclopædia Britannica Inc.) ஆகும். இந்நிறுவனம் தற்போது "Britannica" (பிரித்தானிக்கா) என்னும் சொல்லுக்கு வியாபாரச்சின்ன உரிமை பெற்றுள்ளது.

2004 நிலையின் படி, மிக முழுமையான நிலையிலுள்ள, "பிரித்தானிக்கா கலைக்களஞ்சிய" பதிப்பு, 4.4 கோடி சொற்களைக் கொண்ட 120,000 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. இது புத்தக வடிவிலும் (32 பாகங்கள், குறிக்கப்பட்டுள்ள விலை 1400 அமெரிக்க டாலர்கள், 65,000 கட்டுரைகள்), இணையத்திலும் (120,000 கட்டுரைகள், கட்டுரைகளின் சுரக்கத்தை இலவசமாகப் பார்க்க முடியும், முழுமையான கட்டுரைகளைப் பார்க்கத் தனிப்பட்டவ���்களுக்கு, மாதமொன்றுக்கு 10 அமெ.டாலர்கள் அல்லது ஆண்டுக்கு 60 அமெ.டாலர்கள் செலுத்தவேண்டும்.), குறுவட்டு மற்றும் இறுவட்டிலும் (100,000க்கு மேற்பட்ட கட்டுரைகள், 50 அமெ. டாலர்கள்), பதிப்பித்து வெளியிடப்படுகின்றன.

பிரித்தானிக்காவின் தற்போதைய பதிப்பு 4000 க்கு மேற்பட்டவர்களால் எழுதப்பட்டுள்ளது. இவர்களுள் பிரபல அறிஞர்களான மில்ட்டன் ஃப்ரீட்மன், கார்ல் சேகன் மற்றும் மைக்கேல் டிபேக்கே (Michael DeBakey) என்பவர்களும் அடங்குவர். 35 வீதமான கலைக்களஞ்சியத்தின் உள்ளடக்கங்கள் கடந்த இரண்டு வருடங்களுக்குள் திருத்தி எழுதப்பட்டுள்ளன.

பதிப்பு வரலாறு

தொகு
பதிப்பு வெளியீடு அளவு
1வது 17681771 3 பாக.
2வது 17771784 10 பாக.
3வது 17881797, 1801 sup. 18 பாக. + 2 இணை.
4வது 18011809 20 பாக.
5வது 1815 20 பாகங்கள்
6வது 18201823, 18151824 sup. 20 பாக. + 2 இணை.
7வது 18301842 21 பாக.
8வது 18521860 21 பாக. + சொல்லகராதி
9வது 18701890 24 பாக. + சொல்லகராதி.¹
10வது 19021903 9வது பதிப்பு + 9 இணை.²
11வது 19101911 29 பாகங்கள்³
12வது 19211922 11வது பதிப்பு + 3 இணை.
13வது 1926 11வது பதி.+ 6 இணை.
14வது 19291973 24 பாக.
15வது 19741984 28 பாக.
16வது 1985 32 பாகங்கள்

பாக. = பாகங்கள், இணை. = இணைப்பு, பதி. = பதிப்பு

(1)  9வது பதிப்பு, அக்காலத்தில் பிரபலமான சேம்சு கிளாக் மக்சுவெல் என்பவரால் எழுதப்பட்ட மின்னியல் மற்றும் காந்தவியல் தொடர்பான கட்டுரைகளையும், வில்லியம் தொம்சன் என்பவரால் எழுதப்பட்ட வெப்பவியல் தொடர்பான கட்டுரைகளையும் கொண்டிருந்தது.
(2) 10வது பதிப்பில் ஒரு தேசப்படப் பாகமும், சொல்லகராதி (index) கொண்ட பாகமும் சேர்க்கப்பட்டிருந்தன.
(3) 11வது பதிப்பு, பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் classic பதிப்பாகக் கருதப்பட்டது. இப்பதிப்பு பொதுக்கள ஆவணமாகக் கிடைக்கும்

முதலாவது இறுவட்டுப் பதிப்பு 1994ல் வெளியிடப்பட்டது.

தமிழ்ப் பதிப்பு

தொகு

பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் என்ற பெயரில் 'பிரிட்டானிக்கா கன்சைசு என்சைக்கிளோபீடியா' வின் தமிழ் மொழிபெயர்ப்பு மூன்று தொகுதிகளாக 3120 பக்கங்களுடன் 28,000 கட்டுரைகளுடனும் 2400 புகைப்படங்கள், ஓவியங்கள், அட்டவணைகள், வரைபடங்களுடனும் விகடன் நிறுவனம் சென்னையில் வெளியிட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Encyclopaedia in Tamil (தமிழில் கலைக்களஞ்சியம்)". நூல் திறனாய்வு (த இந்து நாளிதழ்) இம் மூலத்தில் இருந்து 2007-08-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070827234856/http://www.hindu.com/br/2007/07/17/stories/2007071750151400.htm. பார்த்த நாள்: 2007-07-17.  (ஆங்கில மொழியில்)

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Encyclopædia Britannica
என்பதில் ஊடகங்கள் உள்ளன.