பிட்காயின் வரலாறு

குறியாக்க நாணயம்

பிட்காயின் (bitcoin) என்பது ஒரு குறியாக்க நாணயம் (cryptocurrency). இது பொதுவில் வழங்கும் டாலர், ரூபாய், யூரோ போன்று காகிதத்தால் செய்யப் பட்டது அல்ல; மாறாக இது கணினியில் இயங்கும் ஒரு மென்பொருள்(software). ஆயினும், வாங்குவது, விற்பது, சேமிப்பது போன்ற அனைத்து செயல்களையும், டாலர், ரூபாய் போன்றவற்றால் செய்வது போலவே, பிட்காயினை வைத்துச் செய்ய இயலும். பொதுவில் வழங்கும் பணம் ஒரு நடுவண் வங்கியால் (central bank) கட்டுப்படுத்தப் பட்டு மேலாண்மை செய்யப் படுகிறது. பிட்காயினுக்கு அது போன்ற மைய அதிகாரி (central authority) என்று ஒன்றும் கிடையாது. பிட்காயின் ஒரு கணினி வலையத்தில் (computer network) செயலாக்கப் பட்டு, அந்த வலையத்தில் உள்ளவர்களே பிட்காயினை மேலாண்மை செய்து கொள்கிறார்கள்.[1] பிட்காயினைத் தோற்றுவித்ததாகக் கூறப் படும் சத்தோசி நகமோட்டோ (Satoshi Nakamoto), சைபர்பங்க் (Cypherpunk) சமூகத்தில் நிலவியிருந்த கருத்துக்களைப் பயன் படுத்தித் தான் இந்த நாணயத்தை உருவாக்கினார் என்று கூறப் படுகின்றது. நாளடைவில் பிட்காயின் விலை பல முறை ஏறியும் இறங்கியும், இப்போது (2019) குறியாக்க நாணயங்களில் மிக இன்றியமையாத ஒன்றாகி, ஒரு சில வணிகக் கடைகளில் இதை மற்ற நாணயங்களைப் போலவே பரிமாற்றத்திற்கு ஏற்றுக்கொள்கின்றனர்.[2]

பிட்காயின் பரிமாற்றங்கள்

தொடக்கம்

தொகு

பிட்காயின் தோன்றுவதற்கு முன்பு பல மின்காசு தொழில் நுட்பங்கள் ஏற்கனவே இருந்தன:

பிட்காயின் தோற்றம்

தொகு

18 ஆகத்து 2008-இல் "bitcoin.org" என்ற இணையதளம் பதிவு செய்யப் பட்டது.[7] பின் 31 அக்டோபர் 2008-இல் சத்தோசி நாகமோட்டோ எழுதிய பிட்காயின்:இணையர்-இணையர் மின்காசு அமைப்பு (Bitcoin: A Peer-to-Peer Electronic Cash System) என்ற கட்டுரைக்கான இணையத்தள இணைப்பு வெளியிடப் பட்டது.[8][9] இந்த கட்டுரையில், ஒருவர் மீது எந்த நம்பிக்கையும் வைக்க வேண்டிய தேவை இல்லாமல், பணப் பரிமாற்றம் செய்வது எப்படி என்ற வழி முறை விளக்கப் பட்டிருந்தது.[10][11][12] 3 சனவரி 2009-இல் சத்தோசி நாகமோட்டோ, பிட்காயின் கட்டச்சங்கிலியில் பிட்காயின் முதல் கட்டம் (genesis block of bitcoin) என்றழைக்கப்படும் பிட்காயின் முதல் கட்டத்தை இணைத்தார். அந்தக் கட்டத்திற்கு 50 பிட்காயின்கள் பரிசு அளிக்கப் பட்டது.[10][13] இந்த பரிசு காசுதளம் (coinbase) என்ற பரிமாற்றத்தில் கீழ்க் கண்டவாறு குறிக்கப் பட்டுள்ளது:

"தி டைம்ஸ் 03/சனவரி/2009 வங்கிகளுக்கான இரண்டாவது பிணை விடுதலையை நிதி அமைச்சர் எந்நேரமும் வெளியிடலாம்," ("The Times 03/Jan/2009 Chancellor on brink of second bailout for banks.")[14]

இந்தக் குறிப்பு தி டைம்ஸ் (The Times) என்ற நாளிதழில் 3 சனவரி 2009-இல் வந்த தலைப்புச் செய்தி ஆகும்.[15] இதற்கு இரண்டு அர்த்தங்கள் கற்பிக்கப் படுகின்றன: ஒன்று, பிட்காயின் கட்டச்சங்கிலியில் முதல் கட்டம் தோன்றியதற்கான காலமுத்திரை (timestamp) என்பது. மற்றொன்று, இன்றைய வங்கி முறைகளின் தரம் குறைந்த நிலைமையைப் பற்றிய ஏளனமான விமர்சனம் என்பது.[16]

பிட்காயினின் முதல் திறந்த மூல மென்பொருள் (open-source software) 9 சனவரி 2009-இல் சோர்சுஃபோர்ச் (SourceForge) என்ற இணையதளத்தில் வெளியிடப் பட்டது.[17][18] இதன் முதல் ஆதரவாளர்களில் ஆல் பின்னி (Hal Finney) என்ற பிட்காயின் ஆர்வலரும் ஒருவர். இந்த மென்பொருள் வெளியிடப்பட்ட அன்றே, செய்நிரலரான (programmer) அவர் அதைப் பதிவிறக்கம் செய்து, நாகமோட்டோவிடம் இருந்து 10 பிட்காயின்களை 12 சனவரி 2009 அன்று பரிசாகப் பெற்றார். இதுதான் உலகில் முதன்முதலில் நடந்த பிட்காயின் பணப் பரிமாற்றம்.[19][20] வெய் டாய் (Wei Dai), நிக் சாபோ (Nick Szabo) ஆகியோரும் பிட்காயினின் முதல் ஆதரவாளர்கள் ஆவர்.[10]

தொடக்க காலத்தில், நகமோட்டோ ஏறத்தாழ 1 மில்லியன் பிட்காயின்களை அகழ்ந்து (mine) எடுத்தார் என்று கூறப்படுகின்றது.[21] பின், நகமோட்டோ, கேவின் ஆண்டர்சன் (Gavin Andresen) என்பவரிடம் எல்லா பொறுப்புக்களையும் ஒப்படைத்துவிட்டு, பிட்காயினிலிருந்து விலகி (காணாமல் போய்) விட்டார். இதன் பிறகு, மென்பொருள் உருவாக்குனரான (developer) கேவின் ஆண்டர்சன் பிட்காயின் நிறுவனம் (Bitcoin Foundation) என்ற ஒன்றை உருவாக்கி அதன் மேம்பாட்டில் கவனம் செலுத்தினார்.[22] அதன் பின், 2010-இல், லாஸ்லோ அன்யீஸ் (Laszlo Hanyecz) என்னும் நிரலர் 10,000 பிட்காயின்கள் கொடுத்து பப்பா ஜான்ஸ் பிட்சா (Papa John's Pizza) என்ற உணவகத்திலிருந்து இரண்டு பிட்சா (pizza) வாங்கினார்; இதுவே பிட்காயினைப் பயன்படுத்திய முதல் வணிகப் பரிமாற்றம் ஆகும்.[10]

6 ஆகத்து 2010-இல் பிட்காயின் கட்டச்சங்கிலியில் ஒரு பெரிய குறை கண்டுபிடிக்கப் பட்டது. அதாவது, பரிமாற்றங்களைச் சரி பார்க்கும் மென்பொருளில் தவறுகள் இருந்திருக்கின்றன. கட்டங்களைச் சரியாக சரிபார்க்காமலேயே அவை சங்கிலியில் இணைக்கப் பட்டிருந்தன. அதனால், எல்லையில்லாமல் என்று சொல்லுமளவுக்குச் சங்கிலியில் பிட்காயின்கள் சேர்ந்துவிட்டிருந்தன,[23][24] 15 ஆகத்து 2010-இல் 184 மில்லியன் பிட்காயின்கள் உருவாக்கப் பட்டு, இரண்டு முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டிருந்தன. உடனேயே (ஒரு சில மணி நேரங்களில்) இந்த குறைகள் நீக்கப்பட்டு, கட்டச்சங்கிலி பழைய நிலைக்குக் கொண்டுவரப் பட்டது.[25] பிட்காயின் வரலாற்றிலேயே நிகழ்ந்த ஒரு மிகப் பெரிய குறைபாடு இது ஒன்றுதான் எனலாம்.[23][24]

"சத்தோசி நகமோட்டோ" என்ற பெயர் உள்ள ஒருவர் பிட்காயின் என்ற ஒரு நாணயத்தைக் கண்டுபிடித்து, 2008-இல் அதற்கான உரைமுறைகள் (protocols) வகுத்து, 2009-இல் அதைக் கணினி வலையத்தில் செயல்படுத்தி வெளியிட்டார் ��ன்று கூறப் படுகின்றது. அதற்குப் பிறகும் கூட, அவ்வப்போது மாற்றங்கள் செய்து பிட்காயினை மேம்படுத்தியும் வந்திருக்கின்றார்.[10] ஆனால், "சத்தோசி நகமோட்டோ" என்றால் யார் என்று யாரும் அறியாத புதிராகவே இன்று வரை இருந்து கொண்டு இருக்கின்றது. ஒருவேளை ஆல் பின்னி (Hal Finney), வெய் டாய் (Wei Dai), நிக் சாபோ (Nick Szabo) ஆகியோரில் யாரேனும் இருக்கக் கூடுமோ என்று ஊகங்கள் இருந்தபோது, அவற்றை இவர்கள் ஆணித்தரமாக மறுத்திருக்கின்றார்கள்.[26][27] "சத்தோசி நகமோட்டோ" என்பது ஒருவேளை ஐரோப்பிய நிதி நிறுவனங்களில் நடத்தப் படும் கணினிக் கூட்டு இயக்கமோ என்ற ஐயமும் உள்ளது.[28]

தி நியூயார்க்கர் என்ற இதழ் (The New Yorker - வார இதழ், 47 இதழ்கள் ஆண்டொன்றுக்கு), தன் ஆய்வின் முடிவில், மைக்கேல் க்ளீயர் (Michael Clear), விலி லேடன்விர்த்தா (Vili Lehdonvirta) என்ற இருவரையும் "சத்தோசி நகமோட்டோ" என்று முன் நிறுத்தியது. பாஸ்ட் கம்பெனி (Fast Company) என்ற மாத இதழ் 15 ஆகத்து 2008-இல் நீல் கிங் (Neal King), விளாடிமிர் ஒக்ஸ்மன் (Vladimir Oksman), சார்ல்ஸ் ப்ரை (Charles Bry) ஆகிய மூன்று பேர்களை "சத்தோசி நகமோட்டோ" என்று கூறியது. இதற்கு இந்த இதழ் கூறிய காரணமாவது, கணினி வலையம், குறியாக்க முறை இவற்றை வைத்துப் பார்க்கும் போது, இவர்கள் "நகமோட்டோ" போன்று இருக்கிறார்கள் என்பதாகும். மேலும், "... computationally impractical to reverse" என்று இவர்கள் பயன்படுத்திய சொல் வரிசை, "நகமோட்டோ" பயன்படுத்தியதைப் போல் இருக்கின்றது என்று இந்த இதழ் கூறியது.[8] இது உண்மை இல்லையென இம் மூவரும் மறுத்து விட்டனர்.[29]

2010-உக்குப் பிறகு நகமோட்டோ பிட்காயினில் எதுவும் செய்யவில்லை எனத் தெரிகிறது. ஒரு பிட்காயின் ஆர்வலரிடத்தில், "வேறு பணிகளுக்குப் போய்விட்டேன்" ("moved on to other things") என்று "நகமோட்டோ" கூறி இருக்கிறார்.[14]

இதற்குப் பிறகு இன்னும் பலர் "நகமோட்டோ" -ஆக முன் நிறுத்தப் பட்டு, இறுதியில், இன்றுவரை அவர் யார் எனத் தெரியாமலேயே இருக்கின்றது.

பிட்காயின் வளர்ச்சி

தொகு
  • 2011-இல் பல குறியாக்க நாணயங்கள் தோன்றின.[30]
  • கணினி நாணயங்களை ஆதரிக்கும் நிறுவனமான EFF (Electronic Frontier Foundation) முதலில் பிகாயினை ஏற்று, பின் மறுத்து, பின் ஏற்றது. மறுத்ததற்குக் காரணம் சட்ட முறையில் பிட்காயினுக்கு ஆதரவு இல்லை என்பதனால் ஆகும்.
  • விக்கிலீக்ஸ் பிட்காயினை ஏற்றுக்கொண்டது.
  • இந்த ஆண்டு சிபிஎஸ் (CBS) போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிட்காயினைப் பற்றி காட்சிகள் காட்டப் பட்டன.[31]
  • கேவின் ஆண்டர்சன் (Gavin Andresen) , ஜோன் மட்டோனிஸ் (Jon Matonis), பேட்ரிக் மர்க் (Patrick Murck), சார்லி ஷ்ரம் (Charlie Shrem) பீட்டர் வெஸ்ஸீன் (Peter Vessene) ஆகிய ஆர்வலர்கள் சேர்ந்து பிட்காயின் நிறுவனம் (Bitcoin Foundation) என்று ஒன்றை எழுப்பினர். இது அந் நாணயத்தின் வளர்ச்சி, வரையறை செய்தல், காப்பு, மேம்படுத்துதல் ஆகியனவற்றில் கவனம் செலுத்தியது.[32]
  • பிட்காயின் பரிமாற்றச் சேவையான பிட்பே ( BitPay), தன்னிடம் பதிவு செய்துள்ள 1000 வணிகர்கள் பிட்காயினை ஏற்றுக் கொண்டு இருப்பதாகக் கூறியது.[33]
  • வேர்ட்பிரசு ( WordPress) பிட்காயினை ஏற்பதாக அறிவித்தது.[34]
  • இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மட்டும் $1 மில்லியன் மதிப்பிலான பிட்காயின்கள், ஒன்று $22 மேனிக்கு, விற்பனையாயின என்று சான் பிரான்சிசுகோவில் உள்ள காசுதளம் (Coinbase) என்ற பிட்காயின் பரிமாற்றக் கூடம் கூறியது.[35]
  • இன்டர்நெட் ஆர்கைவ் (Internet Archive) என்ற கணினி மயமாக்கப் பட்ட நூலகம் நன்கொடைகளைப் பிட்காயின்களாக ஏற்றுக் கொள்ளும் என்றும், தன் தொழிலாளர்களுக்குச் சம்பளத்தைப் பிட்காயின்களாகக் கொடுக்க அணியமாக இருப்பதாகவும் தெரிவித்தது.[36]
  • மார்ச் மாதம் பிட்காயின் கட்டச்சங்கிலியில் கடுங்கவை தோன்றி, சங்கிலி இரண்டு சங்கிலிகளாகப் பிரிந்தது. ஆறு மணி நேரம் கழித்து இந்த சிக்கலுக்குத் தீர்வு காணப் பட்டது.[37]
  • ஆகத்து மாதத்தில் டெக்சாஸ் தென் மாவட்டத்தில் அமெரிக்க ஒன்றிய நீதியரசர், பிட்காயின் ஒரு வகையான பணம் என்று ஏற்றுக் கொண்டார்.
  • நவம்பர் மாதத்தில் நிகோசியா பல்கலைக்கழகம் (University of Nicosia), மாணவர்கள் தங்கள் நுழைவுக் கட்டணத்தை பிட்காயினாகக் கட்டலாம் என்று தெரிவித்தது.[38]
  • திசம்பர் மாதம் சீன மக்கள் வங்கி (People's Bank of China) பிட்காயின் பரிமாற்றங்கள் சீனாவில் செல்லாது என அறிவித்தது.[39]
  • இந்த ஆண்டு திசம்பர் மாதம் மைக்ரோசாப்ட், எக்ஸ் பாக்ஸ், விண்டோஸ் ஆகியவற்றின் விற்பனையில் பிட்காயினை ஏற்று கொண்டது.
  • பிட்காயின் பயனர்கள், ஆர்வலர்களின் நேர்காணல்கள் ஆகியவற்றின் தொகுப்பாக, உயர்வும், பிட்காயின் வளர்ச்சியும் (The Rise and Rise of Bitcoin) என்ற ஆவணப் படம் வெளியாயிற்று.
  • இந்த ஆண்டு சனவரி மாதத்தில் காசுத்தளம் (Coinbase) $75 மில்லியன் மதிப்பிலான பிகாயின்களை ஈட்டியது.
  • களவு: இங்கிலாந்தைச் சேர்ந்த பிட்ஸ்டாம்ப் (Bitstamp) என்ற பணப் பரிமாற்ற குழுமம் தன்னுடைய பிட்காயின் பணப்பைகளில் இருந்து 19,000 பிட்காயின்கள் ($5 மில்லியன்) களவு போய்விட்டன என்று கூறி, தனது குழுமத்தை சனவரி 2016-வரை மூடி வைத்திருந்தது.
  • இந்த ஆண்டு சனவரியில் குறுக்க எண் வீதம் (hash rate) ஒரு நொடிக்கு 1 இளஞ்சி (<math> {10^{18}} </math>) -ஐத் தாண்டியது.[40]
  • மார்ச்சு மாதம் சப்பான் அமைச்சரவை, "பிட்காயினைப் போன்ற குறியாக்க நாணயங்கள் பொதுவாக வழங்கும் நாணயங்களை போன்றவையே," என்று ஏற்றுக் கொண்டது.[41] பிடோபை (Bidorbuy) என்ற தென் ஆப்பிரிக்க இணையதள சந்தை, பொருட்களை வாங்க விற்க பிட்காயினை ஏற்றுக் கொண்டது.[42]
  • சூலை மாதம் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரையின் படி, நவம்பர் 2013 முதல் பிட்காயின் சந்தை, களவு போன்ற தீய சக்திகளால் நடத்தப் படுவதற்குப் பதிலாக, சட்டப்படி நடக்கும் வணிக சக்திகளால் நடத்துப் படுகின்றது என்று கூறியது.
  • களவு: ஆகத்து மாதம் பெரிய பரிமாற்றக் கூடமான பிட்பைனக்ஸ் ( Bitfinex) தீநிரலிகளால் தாக்கப் பட்டு (hacked), 120,000 BTC களவாடப் பட்டது.
  • இந்த ஆண்டு கல்வி நிலையங்களில் பிட்காயின் பெரிதும் பேசப் பட்டது. லெட்ஜர் (Ledger) என்ற ஆய்வு இதழ் தொடங்கப் பட்டது. பிட்காயினைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் 2009-இல் 83, 2012-இல் 424, 2016-இல் 3580 என வளர்ந்தது.
  • இந்த ஆண்டு சனவரியில் பிட்காயினை ஏற்றுக் கொள்ளும் கடைகள் முந்தைய ஆண்டை விட 4.6 மடங்கு உயர்ந்து இருக்கிறது என்று சப்பானிய அலைபரப்பு நிலையம் NHK (Japan Broadcasting Corporation) கூறியது.[43]
  • சூன் மாதத்தில் யூனிகோடு 10.0 என்ற பதிப்பில், பிட்காயின் U+20BF (₿) என்ற இடத்தில், பணக் குறியாக (Currency Symbols block) ஆக்கப்பட்டது.
  • சூலை வரை ஒரு கட்டச் சங்கிலியாக இருந்த பிட்காயின், 1 ஆகத்து 2017-இல் இரண்டாகப் பிரிந்தது.[44]
  • திசம்பர் 6-இல், மென்பொருள் சந்தையான ஸ்ட்ரீம் (Stream), பிட்காயின் மிக மெதுவாக இயங்குகிறது என்று குறைகூறி, இப் பணத்தை இனி ஏற்றுக்கொள்ள இயலாது என்று கூறி விட்டது.[45]
  • இந்த ஆண்டு 22 சனவரி-இல் தென் கொரியா, அனைத்து பிட்காயின் வணிகர்களும் தங்கள் அடையாளங்களை (பெயர்,முகவரி, பதிவு செய்தவர்களா இல்லையா என்ற விளக்கங்கள் போன்றவற்றை) வெளியிடவேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டு வந்தது. இதனால், மறைவில் இருந்து பிட்காயினை வைத்து வணிகம் செய்பவர்கள் இயங்க முடியாமல் போயிற்று.[46]
  • 24 சனவரி-இல், பிட்காயினின் தேவை குறைந்துவிட்டது, பரிமாற்றக் கட்டணமும் நேரமும் மிகுதியாகி விட்டது என்ற காரணங்களைக் கூறி, ஸ்ட்ரைப் (Stripe) என்ற மென்பொருள் நிறுவனம் பிட்காயின் பயன்பாட்டை நிறுத்திவிட்டது.[47]

பிட்காயின் விலையும் மதிப்பும்

தொகு
 
பிட்காயின் விலை: சனவரி 2104 முதல் அக்டோபர் 2017 வரை. 4 சனவரி 2017-இல் பிட்காயின் விலை US$1,139.9-ஆக ஏறியது. (semi logarithmic plot)

பிட்காயின் விலை ஏறியும் இறங்கியுமாக இருந்து கொண்டு இருக்கின்றது. பிட்காயின் விலை 4 சனவரி 2017-இல் US$1,139.9 -ஆக ஏறி இருந்தது. இந்த ஏற்றத்திற்குக் காரணம் சைப்ரஸ் நிதிப் பிரச்சினை (2012–2013 Cypriot financial crisis) நேரத்தில் பின்சென் (FinCEN - Financial Crimes Enforcement Network) பிட்காயினுக்கு ஆதரவாகக் கூறிய கூற்று, ஊடகங்களின் ஆர்வம், இணையத்தளம் எல்லா இடத்திலும் பரவியமை போன்றவை காரணங்களாக இருக்கலாம் என்று கருதப் படுகிறது.[48][49]

பிட்காயின் மதிப்பு மாறிய வரலாறு
நாள் 1 பிட்காயின் விலை (அமெரிக்க டாலரில்) குறிப்புகள்
சனவரி 2009 – மார்ச்சு 2010 எந்த மாற்றமும் இல்லை பரிமாற்றங்கள் ஏதுமில்லை. குறியாக்க ஆர்வலர்கள் பொழுது போக்குக்காக தங்களுக்குள் சிறு சிறு பிட்காயின்களை அனுப்பிக்கொண்டு இருந்தனர். மார்ச்சு 2010-இல், "ஸ்மோக்டூமச்" ("SmokeTooMuch") என்னும் பிட்காயின் பயனர் (user) 10,000 BTC-ஐ $50-உக்கு ஏலம் விட்டார்; ஆனால் எடுப்பார் யாருமில்லை.
மார்ச்சு 2010 $0.003 17 மார்ச்சு 2010-இல் பிட்காயின்மார்க்கெட்.காம் (BitcoinMarket.com) என்ற இணையதளம் திறக்கப் படுகிறது. (இப்போது, மார்ச்சு 2019, இந்த நிறுவனம் மூடப் பட்டுவிட்டது.)
மார்ச்சு 2010 $0.01-உக்குக் குறைவாக உள்ளது. $40 மில்லியனுக்கு இரண்டு பிட்சா: 22 மே 2010-இல், லாஸ்லோ அனியெட்ஸ்,[50] என்பவர், புளோரிடா (Florida) மாநிலத்தில் உள்ள ஜாக்சன்வில் (Jacksonville) என்ற நகரத்தில் 10,000 BTC கொடுத்து இரண்டு பிட்சா வாங்கினார். 10,000 BTC-இன் இன்றைய விலை (February 2019) $40 மில்லியன்கள் ஆகும். [51][52]
சூலை 2010 $0.08  ஐந்து நாட்களில் விலை 900% உயர்ந்தது: $0.008-இலிருந்து $0.08-உக்கு.
அக்டோபர் 2010 $0.125  உயர்வு.
பிப்ரவரி 2011 – ஏப்ரல் 2011 $1.00  அமெரிக்க டாலருக்கு இணையாக உயர்ந்தது.[53]
8 சூலை 2011 $31.00  குமிழ் தொடக்கம்: உயர்வு மிக அதிகம். "குமிழ்" தொடங்குகிறது; அதாவது, வீழ்ச்சி விரைவில் வரலாம்.
திசம்பர் 2011 $2.00 ஒரு சில மாதங்களிலேயே வீழ்ந்தது.
திசம்பர் 2012 $13.00 மெல்ல உயர்ந்தது.
11 ஏப்ரல் 2013 $266  மிக வேகமான உயர்வு; நாளொன்றுக்கு 5%-இலிருந்து 10% வரையிலான உயர்வு.
மே 2013 $130 குறைவு; இருப்பினும் இந்த ஆண்டு விலை நிலையாகவே இருந்தது.
சூன் 2013 $100 மெல்ல குறைந்து $70-உக்கு வந்தது. சூலை மாதம் $100-உக்கு மெல்ல ஏறியது.
நவம்பர் 2013 $350–$1,242  அக்டோபரில் $150–$200. ஆனால், 29 நவம்பர் 2013-இல் $1,242.[54]
திசம்பர் 2013 $600–$1,000 வீழ்ச்சி, பிறகு உயர்வு.
சனவரி 2014 $750–$1,000  சற்று நேரம் $1000-உக்கு உயர்ந்து பின் $800–$900-இல் நிலைத்தது.[சான்று தேவை]
பிப்ரவரி 2014 $550–$750  மவுண்ட் காக்ஸ் (Mt. Gox) மூடப் பட்டது; விலை சரிந்தது. பிறகு ஏறியது.
மார்ச்சு 2014 $450–$700  பிட்காயின் சீனாவில் தடை செய்யப் பட்டது என்ற வதந்தி வெளியானவுடன், விலை குறையத் தொடங்கியது.
ஏப்ரல் 2014 $340–$530 சைப்ரஸ் நிதிப் பிரச்சினைக்குப் (2012–2013 Cypriot financial crisis) பிறகு

பிட்காயின் விலை மேலும் குறைந்தது.[55]

மே 2014 $440–$630  மே மாத இறுதியில் கொஞ்சம் ஏற்றம் தெரிந்தது.
மார்ச்சு 2015 $200–$300 விலை மீண்டும் சரிந்தது.
நவம்பர் 2015 $395–$504  அக்டோபர் தொடக்கத்தில் தொடங்கி, நவம்பர் இறுதியில் $504-ஐத் தொட்டது.
மே - சூன் 2016 $450–$750  எதிர் பாராமல் $750-ஐத் தொட்டது.
சூலை - செப்டம்பர் 2016 $600–$630 விலை $600-ஐச் சுற்றி நிலைத்தது.
அக்டோபர் - நவம்பர் 2016 $600–$780  சீனத்துப் பணமான ரென்மின்பி (RMB, அதாவது யுவான் (yuan)) அமெரிக்க டாலரைவிட வலிமை குன்றவே, பிட்காயின் விலை $700-உக்கு ஏறியது.
சனவரி 2017 $800–$1,150  மேலும் ஏற்றம்.
5-12 சனவரி 2017 $750–$920 30% வீழ்ச்சியில் $750ஐ அடைந்தது.
2-3 மார்ச்சு 2017 $1,290+   மேலும் ஏற்றம்.
ஏப்ரல் 2017 $1,210–$1,250
மே 2017 $2,000   முதன் முறையாக $2000-ஐத் தொட்டது.
மே - சூன் 2017 $2,000–$3,200+  $3000-உக்கு ஏறி, $2500-இல் ஊசலாடி, 6 ஆகத்து 2017-இல் $3270 ஆக நிலைத்தது.
ஆகத்து 2017 $4,400  
செப்டம்பர் 2017 $5,000 
12 செப்டம்பர் 2017 $2,900
13 அக்டோபர் 2017 $5,600 
21 அக்டோபர் 2017 $6,180  
6 நவம்பர் 2017 $7,300  
17-20 நவம்பர் 2017 $7,600-8,100   $8100-உக்கு உயர்ந்ததற்குக் காரணம் சிம்பாப்வே-இல் நடந்த இராணுவப் புரட்சி (2017 Zimbabwean coup d'état) என்று கருதப் படுகின்றது.[56][57]
15 திசம்பர் 2017 $17,900   மிகப் பெரும் உயர்வு $17,900[58]
17 திசம்பர் 2017 $19,783.06   பிட்காயின் தன் உச்சியைத் தொட்டது.[59]
22 திசம்பர் 2017 $13,800 வீழ்ச்சி தொடங்கியது.[60]
5 பிப்ரவரி 2018 $6,200 16 நாட்களில் பாதி வீழ்ந்தது.[61]
31 அக்டோபர் 2018 $6,300  
23 பிப்ரவரி 2019 $3,930 இப்போதைய பிட்காயின் விலை.[62]

பிட்காயின் களவுகள், பணமாற்றக் கூடங்கள் நிறுத்தம் (Theft and exchange shutdowns)

தொகு
  • ஏப்ரல் 2013-இல் வெளியிட்ட குறிப்பு ஒன்று 45% பிட்காயின் பணமாற்றக் கூடங்கள் நிறுத்தப் பட்டு மூடப் படுகின்றன என்று கூறியது.[63]
  • 19 சூன் 2012-இல் மவுண்ட் காக்ஸ்-இல் பணிபுரிந்த கணக்குத் தணிக்கையாளரின் கணினியிலிருந்து அத்துமீறி பெரிய அளவில் பிட்காயின்களை ஒருவர் தம் கணக்குக்கு மாற்றிக் கொண்டார். இதனால், இறுதியில் US$8,750,000 அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது.[64]
  • சூலை 2011-இல், மூன்றாவது மிகப் பெரிய பணமாற்றக் கூடமான பிடோமேட் (Bitomat) நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு செயல் வினைஞர் (operator) தனது பிட்காயின் பணப்பையைத் "திறக்க" முடியவில்லை என்று கூறினார். அதில் தம் நுகர்வோரின் (customers) 17,000 பிட்காயின்கள் (அப்போது US$220,000) இருந்தன என்றும், அவர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க, தன்னுடைய நிறுவன சேவையை விற்க போவதாகவும் தெரிவித்தார்.[65]
  • ஆகத்து 2011-இல், மைபிட்காயின் (MyBitcoin) என்ற பிட்காயின் பணமாற்றக் கூடம், தம் கணினியில் ஊடுருவல் (hacking) நடந்தது என்று கூறி, நிறுவனத்தை மூடிவிட்டது. அதில், 78,000 பிட்காயின்கள் (அப்போது US$800,000) மறைந்த இடம் தெரியவில்லை.[66]
  • ஆகத்து 2012-இல், பிட்காயினிக்கா ( Bitcoinica) என்ற பிட்காயின் வணிக நிறுவனம் இருமுறைகள் ஊடுருவப் பட்டன. US$460,000 இழப்பீடு செய்யும் படி இதன் மீது வழக்கு தொடரப் பட்டது. இந்த நிறுவனம் தம் நுகர்வோர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு கொடுக்கவில்லை என்பது கூறப்பட்ட குறையாகும்.[67]
  • ஆகத்து 2016-இல், ஆங்காங் (Hong Kong) நகரத்தில் இருந்த பிட்பினிக்ஸ் (Bitfinex) என்ற பிட்காயின் நிறுவனத்தில் இருந்து "கள்வர்கள்" US$72 மில்லியனைத் திருடிச் சென்றனர்.[68]
  • திசம்பர் 2017-இல், நைஸ்ஹேஷ் (NiceHash) என்ற நிறுவனம் 4700 பிட்காயின்களை (US$80 மில்லியன்) "கள்வர்களி"டத்தில் இழந்தது.[69]
  • 19 திசம்பர் 2017-இல், தென் கொரியாவைச் சேர்ந்த யாபியன் (Yapian) என்ற நிறுவனம், எட்டு மாதங்களில் இரண்டு முறை "களவாடப் பட்டு", தன்னைப் பணமற்ற கடனாளியாக (bankrupt) விண்ணப்பித்துக் கொண்டது.[70]

கட்டச்சங்கிலியில் தவறான தரவுகள்

தொகு

பிட்காயின் கட்டச்சங்கிலியை ஒரு சிலர் ஊடுருவித் "தாக்கி", அதில் உள்ள கட்டங்களில் தாறுமாறான தரவுகளை இட்டுச் செல்கின்றனர் என்று கண்டுபிடிக்கப் பட்டது. 2018-இல், ஆச்சென், கோயெத் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் ( RWTH Aachen University and Goethe University) 1600 கோப்புகள் (files) அனுமதி இன்றி பிட்காயின் கட்டச்சங்கிலியில் இணைக்கப் பட்டிருந்தன என்று கண்டறிந்தனர். அதில் 59 கோப்புகளில் குழந்தைகளைப் பற்றி தவறாகச் சித்தரிக்க பட்டும், சொல்லக் கூடாத அரசியல் கருத்துக்களும் இருந்தன என்று கூறினர். எடுத்துக் காட்டாக, அதில் பாலியல் தொடர்பான பல தரவுகள் இருந்தன என்றனர்.[71]

"கட்டச்சங்கிலியின் கட்டமைப்பில் தீநிரல்களைப் (malware) புகுத்தி, அதை அதில் நிலைத்து நிற்கவைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன, அதை தடுப்பதற்கான வழிமுறை எதுவும் தற்போது இல்லை," என்ற எச்சரிக்கையை 2015-இல் இன்டர்போல் (International Criminal Police Organization ICPO-INTERPOL) வெளியிட்டுள்ளது.[72]

உருவ அழிப்பு

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Jerry Brito; Andrea Castillo (2013). "Bitcoin: A Primer for Policymakers" (PDF). </nowiki>Mercatus Center. George Mason University. Retrieved 22 October 2013.
  2. A History of Bitcoin. Monetary Economics: International Financial Flows, Financial Crises, Regulation & Supervision eJournal. Social Science Research Network (SSRN). Accessed 8 January 2018.
  3. Chaum, David (1983). "Blind signatures for untraceable payments" (PDF). Advances in Cryptology Proceedings of Crypto. 82 (3): 199–203. doi:10.1007/978-1-4757-0602-4_18.
  4. "A partial hash collision based postage scheme"(Txt). Hashcash.org. Retrieved 13 October 2014.
  5. Dai, W (1998). "b-money". Archived from the original on 4 October 2011. Retrieved 5 December2013.}
    • நிக் சாபோ (Nick Szabo) உருவாக்கிய பிட்-கோல்டு (bit-gold) [Szabo, Nick. "Bit Gold". Unenumerated. Blogspot. Archived from the original on 22 September 2011. Retrieved 5 December 2013.
  6. "Reusable Proofs of Work". Archived from the original on 22 December 2007.
  7. "What is 'Bitcoin'". Investopedia. Retrieved 11 October 2017.
  8. 8.0 8.1 Nakamoto, Satoshi (31 October 2008). "Bitcoin: A Peer-to-Peer Electronic Cash System" (PDF). Retrieved 20 December 2012.
  9. Finley, Klint (31 October 2018). "After 10 Years, Bitcoin Has Changed Everything—And Nothing". Wired. Retrieved 9 November 2018.
  10. 10.0 10.1 10.2 10.3 10.4 Wallace, Benjamin (23 November 2011). "The Rise and Fall of Bitcoin". Wired. Archived from the original on 31 October 2013. Retrieved 13 October 2012.
  11. "Bitcoin P2P e-cash paper". 31 October 2008
  12. "Satoshi's posts to Cryptography mailing list". Mail-archive.com. Retrieved 26 March 2013.
  13. "Block 0 – Bitcoin Block Explorer". Archived from the original on 15 October 2013.
  14. 14.0 14.1 Davis, Joshua (10 October 2011). "The Crypto-Currency". The New Yorker. Archived from the original on 2013-08-23. Retrieved 16 February 2013.
  15. Elliott, Francis; Duncan, Gary (3 January 2009). "Chancellor Alistair Darling on brink of second bailout for banks". The Times. Retrieved 27 April 2018.
  16. Pagliery, Jose (2014). Bitcoin: And the Future of Money. Triumph Books. ISBN 9781629370361. Archived from the original on 21 January 2018. Retrieved 20 January 2018.
  17. Nakamoto, Satoshi (9 January 2009). "Bitcoin v0.1 released". Archived from the original on 26 March 2014.
  18. "SourceForge.net: Bitcoin". Archived from the original on 16 March 2013.
  19. Peterson, Andrea (3 January 2014). "Hal Finney received the first Bitcoin transaction. Here's how he describes it". The Washington Post.
  20. Popper, Nathaniel (30 August 2014). "Hal Finney, Cryptographer and Bitcoin Pioneer, Dies at 58". NYTimes. Retrieved 2 September 2014.
  21. McMillan, Robert. "Who Owns the World's Biggest Bitcoin Wallet? The FBI". Wired. Condé Nast. Retrieved 7 October 2016.
  22. Bosker, Bianca (16 April 2013). "Gavin Andresen, Bitcoin Architect: Meet The Man Bringing You Bitcoin (And Getting Paid In It)". The Huffington Post. Retrieved 21 October 2016.
  23. 23.0 23.1 Sawyer, Matt (26 February 2013). "The Beginners Guide To Bitcoin – Everything You Need To Know". Monetarism. Archived from the original on 9 April 2014.
  24. 24.0 24.1 "Vulnerability Summary for CVE-2010-5139". National Vulnerability Database. 8 June 2012. Archived from the original on 9 April 2014. Retrieved 22 March 2013.
  25. Nakamoto, Satoshi. "[bitcoin-list] ALERT – we are investigating a problem" (Mailing list). Archived from the original on 15 October 2013. Retrieved 15 October2013.
  26. "Satoshi Nakamoto is (probably) Nick Szabo". LikeInAMirror. WordPress. Archived from the original on 13 April 2014. Retrieved 5 December 2013.
  27. Weisenthal, Joe (19 May 2013). "Here's The Problem With The New Theory That A Japanese Math Professor Is The Inventor Of Bitcoin". Business Insider. Archived from the original on 3 November 2013. Retrieved 19 May 2013.
  28. Bitcoin Inventor Satoshi Nakamoto is Anonymous-style Cell from Europe Archived 17 December 2013 at the Wayback Machine
  29. Penenberg, Adam. "The Bitcoin Crypto-Currency Mystery Reopened". FastCompany. Archived from the original on 6 October 2013. Retrieved 16 February2013.
  30. Espinoza, Javier (22 September 2014). "Is It Time to Invest in Bitcoin? Cryptocurrencies Are Highly Volatile, but Some Say They Are Worth It". The Wall Street Journal. Retrieved 28 June 2016.
  31. Toepfer, Susan (16 January 2012). "'The Good Wife' Season 3, Episode 13, 'Bitcoin for Dummies': TV Recap". The Wall Street Journal. Archived from the original on 12 January 2014.
  32. Matonis, Jon. "Bitcoin Foundation Launches To Drive Bitcoin's Advancement". Forbes. Retrieved 20 May 2017.
  33. Browdie, Brian (11 September 2012). "BitPay Signs 1,000 Merchants to Accept Bitcoin Payments". American Banker. Archived from the original on 12 April 2014.
  34. Skelton, Andy (15 November 2012). "Pay Another Way: Bitcoin". WordPress. Retrieved 24 April 2014.
  35. Ludwig, Sean (8 February 2013). "Y Combinator-backed Coinbase now selling over $1M Bitcoin per month". VentureBeat. Archived from the original on 9 April 2014.
  36. Mandalia, Ravi (22 February 2013). "The Internet Archive Starts Accepting Bitcoin Donations". Parity News. Archived from the original on 3 June 2013. Retrieved 28 February 2013.
  37. Lee, Timothy (11 March 2013). "Major glitch in Bitcoin network sparks sell-off; price temporarily falls 23%". arstechnica.com. Retrieved 15 February2015.
  38. "Cypriot University to Accept Bitcoin Payments". abc News. 21 November 2013. Archived from the original on 2 December 2013. Retrieved 24 November2013.
  39. Kelion, Leo (18 December 2013). "Bitcoin sinks after China restricts yuan exchanges". bbc.com. BBC. Retrieved 20 December 2013.
  40. "Bitcoin hash rate exceeds 1 EH/s for the first time". 25 January 2016.
  41. "Japan OKs recognizing virtual currencies as similar to real money". 4 March 2016.
  42. "Activating and Using Bitcoin as a Payment Option"
  43. "Steam Announces It Is 'No Longer Supporting Bitcoin'". Vice.com. 6 December 2017. Retrieved 9 December 2017.
  44. Popper, Nathaniel (25 July 2017). "Some Bitcoin Backers Are Defecting to Create a Rival Currency". The New York Times. ISSN 0362-4331. Retrieved 28 July 2017.
  45. "Unicode 10.0.0". Unicode Consortium. 20 June 2017. Retrieved 20 June 2017.
  46. "Bitcoin price latest: Cryptocurrency plunges as traders in South Korea forced to identify themselves". The Independent. Retrieved 1 February2018.
  47. "Stripe to ditch Bitcoin payment support". BBC. 24 January 2018. Retrieved 25 January 2018.
  48. Traverse, Nick (3 April 2013). "Bitcoin's Meteoric Rise". Archived from the original on 9 April 2014.
  49. Bustillos, Maria (2 April 2013). "The Bitcoin Boom". Archived from the original on 13 March 2014.
  50. "Why Bitcoin Matters". பார்க்கப்பட்ட நாள் 4 January 2016.
  51. (ஆங்கிலம்) Laszlo's pizza for $76,880 பரணிடப்பட்டது 12 ஏப்பிரல் 2014 at the வந்தவழி இயந்திரம்
  52. Merchant, Brian (26 March 2013). "This Pizza Cost $750,000". Motherboard இம் மூலத்தில் இருந்து 28 மார்ச் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130328041057/https://motherboard.vice.com/blog/this-pizza-is-worth-750000. பார்த்த நாள்: 13 January 2017. 
  53. Leos Literak. "Bitcoin dosáhl parity s dolarem". Abclinuxu.cz. Archived from the original on 22 February 2014. பார்க்கப்பட்ட நாள் 4 December 2013.
  54. "Bitcoin worth almost as much as gold". CNN.com. 29 November 2013. பார்க்கப்பட்ட நாள் 24 February 2017.
  55. BitcoinWisdom – Live Bitcoin/Litecoin charts பரணிடப்பட்டது 11 மே 2014 at the வந்தவழி இயந்திரம்
  56. Robert Brand, Brian Latham, and Godfrey Marawanyika (15 November 2017). "Zimbabwe Doesn't Have Its Own Currency and Bitcoin Is Surging". Bloomberg L.P.. https://www.bloomberg.com/news/articles/2017-11-15/bitcoin-surges-in-zimbabwe-after-military-moves-to-seize-power. 
  57. Riley, Charles. "Bitcoin costs as much as $13,000 in Zimbabwe". CNNMoney. http://money.cnn.com/2017/11/16/investing/bitcoin-zimbabwe-price/index.html. 
  58. Kelly, Jemima (15 December 2017). "Bitcoin hits new record high as warnings grow louder". Reuters. https://www.reuters.com/article/us-global-markets-bitcoin/bitcoin-hits-new-record-high-as-warnings-grow-louder-idUSKBN1E919T. 
  59. "Bitcoin Hits a New Record High, But Stops Short of $20,000". Fortune. Archived from the original on 14 நவம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 8 December 2018.
  60. Shane, Daniel (22 December 2017). "Bitcoin lost a third of its value in 24 hours". CNN. http://money.cnn.com/2017/12/22/investing/bitcoin-plunges-below-14k/index.html. பார்த்த நாள்: 23 December 2017. 
  61. Cheng, Evelyn (5 February 2018). "Bitcoin continues to tumble, hitting its lowest point since November". CNBC. https://www.cnbc.com/2018/02/05/bitcoin-drops-more-than-14-percent-to-below-7000.html. பார்த்த நாள்: 5 February 2018. 
  62. {{Cite news|url=https://www.coindesk.com/bitcoin-remains-on-hunt-for-4-2k-despite-price-consolidation
  63. "Study: 45 percent of Bitcoin exchanges end up closing". Archived from the original on 28 ஏப்ரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 28 April 2013. © Condé Nast UK 2013 {{cite web}}: Check date values in: |archivedate= (help) Wired.co.uk (26 April 2013).
  64. Mick, Jason (19 June 2011). "Inside the Mega-Hack of Bitcoin: the Full Story". DailyTech. Archived from the original on 22 April 2013.
  65. Dotson, Kyt (1 August 2011) . SiliconAngle
  66. Jeffries, Adrianne (8 August 2011) . BetaBeat
  67. Geuss, Megan (12 August 2012) . Ars Technica
  68. "All Bitfinex clients to share 36% loss of assets following exchange hack". The Guardian. 7 August 2016.
  69. Lee, Dave; Millions 'stolen' in NiceHash Bitcoin heist; BBC News; 8 December 2017; https://www.bbc.com/news/technology-42275523
  70. "A South Korean cryptocurrency exchange files for bankruptcy after hack, says users will get 75% of assets for now". CNBC. 19 December 2017.
  71. Roman Matzutt; Jens Hiller; Martin Henze; Jan Henrik Ziegeldorf; Dirk Mullmann; Oliver Hohlfeld; Klaus Wehrle (2018). "A Quantitative Analysis of the Impact of Arbitrary Blockchain Content on Bitcoin" (pdf). Financial Cryptography and Data Security 2018. pp. 6–8.
  72. "Interpol cyber research identifies malware threat to virtual currencies". Interpol. Retrieved 20 March2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிட்காயின்_வரலாறு&oldid=4056191" இலிருந்து மீள்விக்கப்பட்டது