பிசாசர்கள்
பி���ாசர்கள் (Pishachas) (சமக்கிருதம்: पिशाच, Piśāca) என்பவர்கள் புராணங்களில் மனித மாமிசத்தை உண்ணும் கொடூரமான, கோபக் குணமும், வடிவமற்றவர்கள் என இந்து சமயப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
பிசாசர்கள், தட்சனின் மகளான குரோதவசாவிற்கும் - பிரஜாபதியான காசிபருக்கும் பிறந்தவர்கள் என அறியப்படுகிறது. [1]
பொ.ஊ. 7ஆம் நூற்றாண்டின் நிலாமத் புராணத்தில் காஷ்மீர் சமவெளியில் நாகர்களுடன் பிசாச இன மக்களும் வாழ்ந்தனர் எனக் குறிப்பிட்டுள்ளது.
பூதங்கள், வேதாளங்களுடன் பிசாசர்கள் பிறர் கண்னில் படாமல் மயாணங்களில் மறைந்து வாழ்ந்து, இறந்த பிணங்களை தோண்டி உண்பவர்கள் எனக் கூறப்படுகிறது.
மேலும் பிசாசர்கள் மனிதர்களில் குடி கொண்டு தங்கள் விருப்பப் படி ஆட்டிப் படைப்பவர்கள் என்றும், மந்திர சக்திகளால் மட்டுமே பிசாசர்களை விரட்டுயடிக்க இயலும் என நம்பப்படுகிறது. பிசாசர்களின் அடாவடித்தனங்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள சமயச் சடங்களின் போதும், கோயில் திருவிழாக்களின் போதும் பிசாசர்களுக்க்கும் தனி படையல் வைக்கின்றனர்.
பிசாசர்களின் பிறப்பு குறித்து தெளிவற்று உள்ளது. மானிடவியல் கொள்கையில் மாமிசம் உண்பதில் ஆவல் நிறைந்தவர்களாக பிசாசர்கள் உருவகப்படுத்தப்படுகின்றனர்.[2] பாணினியின் அஷ்டாத்தியாயி என்ற சமஸ்கிருத இலக்கண நூலில், பிசாசர்கள் சிறந்த சத்திரியப் படைவீரர்கள் எனக் கூறுகிறது. பரத கண்டத்திற்கு வெளியே வடமேற்குப் பகுதியில் வாழ்ந்த இன மக்களை பிசாசர்கள் என மகாபாரதம் கூறுகிறது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ The Piśāca languages of north-western India, Sir George Abraham Grierson, Royal Aisatic Society, 1906
- ↑ Sanskṛit-English dictionary : etymologically and philologically arranged with special reference to cognate Indo-European languages (Corrected ed.). Delhi: Motilal Banarsidass. 2005. p. 628. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-3105-5.
உசாத்துணை
தொகு- Dictionary of Hindu Lore and Legend (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-51088-1) by Anna Dhallapiccola