பள்ளபாளையம்

இது தமிழகத்தின் கோயம்புத்தூர் மாநகராட்சியில் கூட்டுநகரப் பகுதியில் அமைந்துள்ள ஓர் பேரூராட்

பள்ளபாளையம் பேரூராட்சி (Pallapalayam) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், கோயம்புத்தூர் மாநகராட்சியின் கூட்டு நகருக்கு உட்பட்ட ஒரு பேரூராட்சி ஆகும். இந்த பேரூராட்சி சூலூர் சட்டமன்ற தொகுதிக்கும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

பள்ளபாளையம்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநகரம் கோயம்புத்தூர் மாநகராட்சி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

11,910 (2011)

1,218/km2 (3,155/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 9.78 சதுர கிலோமீட்டர்கள் (3.78 sq mi)

போக்குவரத்து

தொகு

இந்த பேரூராட்சி கோயம்புத்தூர் மாநகராட்சியின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது. இது கோயம்புத்தூர் மாநகராட்சி கூட்டுநகர் பகுதியில் இடம் பெறுகிறது. இங்கிருந்து கோயம்புத்தூர், சூலூர், செஞ்சேரிமலை, பாப்பம்பட்டி என அருகில் உள்ள நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேரூராட்சியின் முக்கிய போக்குவரத்து மையமாக பாப்பம்பட்டி பிரிவு செயல்படுகிறது. இந்த சாலை வழியாக கிழக்கு மாவட்டங்களுக்கு அதிகளவில் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பேரூராட்சி அமைப்பு

தொகு

இந்த பேரூராட்சியானது சுமார் பதினைந்து வார்டுகளையும் பள்ளபாளையம் தலைமையில் ஒரு மண்டலமாகவும் செயல்பட��கிறது. பாப்பம்பட்டி பிரிவு, பட்டணம், இருகூர் பிரிவு, பள்ளபாளையம், கண்ணம்பாளையம் பிரிவு என பேரூராட்சியின் முக்கிய பகுதிகளாகும். இந்த பேரூராட்சி உள்ளாட்சி அமைப்பின்படி சாலை மேம்பாடு, சுகாதாரம், குடிநீர் வசதிகள் என நிர்வாகத்தை மேற்கொள்கிறது.

கல்வி நிலையங்கள்

தொகு
  • அங்கன்வாடி மையங்கள்,
  • பேரூராட்சி தொடக்கப்பள்ளி,
  • அரசு மேல்நிலைப்பள்ளி,
  • கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி.

ஆதாரங்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பள்ளபாளையம்&oldid=3395916" இலிருந்து மீள்விக்கப்பட்டது