நேபாள குடியரசுத் தலைவர்
நேபாள குடியரசுத் தலைவர், (President of the Federal Democratic Republic of Nepal) (நேபாளி: राष्ट्रपति), நேபாள ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு மற்றும் முப்படைகளின் தலைவர் ஆவார். நேபாளத்தில் மன்னராட்சி ஒழித்து, நேபாளத்தை ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசாக அறிவித்த நாளில் குடியரசுத் தலைவர் பதவி மே 2008ல் உருவாக்கப்பட்டது. நேபாளத்தின் முதல் குடியரசுத் தலைவர் ராம் பரன் யாதவ் ஆவார்.
நேபாள ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு குடியரசுத் தலைவர் | |
---|---|
வாழுமிடம் | சீதள் நிவாஸ் |
நியமிப்பவர் | மறைமுகத் தேர்தல் |
பதவிக் காலம் | ஐந்தாண்டுகள் |
உருவாக்கம் | 28 மே 2008 |
துணை குடியரசுத் தலைவர் | துணைக் குடியரசுத் தலைவர் |
ஊதியம் | நேபாள ரூபாய் 1,09,410 (மாதந்தோறும்)[1] |
இணையதளம் | www.presidentofnepal.gov.np |
வித்யா தேவி பண்டாரி நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி, அக்டோபர் 2015 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய ஜனாதிபதி ராம் சந்திர பௌதெல் மார்ச் 2023 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குடியரசுத் தலைவர் தேர்தல்
தொகுநேபாள நாடாளுமன்றத்தின், பிரதிநிதிகள் சபை, தேசிய சபை உறுப்பினர்கள் மற்றும் ஏழு நேபாள மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களால், நேபாள குடியரசுத் தலைவர் தேர்ந்தேடுக்கப்படுகிறார்.
குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் ஆகும். ஒருவர் இரண்டு முறைக்கு மேல் குடியரசுத் தலைவர் பதவி வகிக்க இயலாது.
அதிகாரங்கள்
தொகுஇந்தியக் குடியரசுத் தலைவர் போன்றே, நேபாளக் குடியரசுத் தலைவரின் அனைத்து அதிகாரங்களும் சடங்கு சம்பிரதாயம் போன்றதே. பிரதம அமைச்சரின் ஆலோசனையின் படியே நேபாள குடியரசுத் தலவர் செயல்படுகிறார்.
குடியரசுத் தலைவர் பதவியின் வரலாறு
தொகுநேபாள இடைக்கால அரசியலமைப்பு சட்டத்தின் படி நேபாளத்தில் சனவரி, 2007 அன்று மன்னராட்சி முறை ஒழிக்க தீர்மானிக்கப்பட்டத��. நேபாளத்தின் தற்காலிக குடியரசுத் தலைவராக முன்னாள் பிரதம அமைச்சர் கிரிஜா பிரசாத் கொய்ராலா தேர்ந்தெடுக்கப்பட்டார். 28 மே 2008ல் கூடிய நேபாள நாடாளுமன்றம், ராம் பரன் யாதவ்வை, நேபாளத்தின் முதல் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுத்தது. இதன் மூலம் நேபாளத்தில் 247 ஆண்டு கால மன்னராட்சி முறை அதிகாரப்பூர்வமாக முடிவிற்கு வந்தது.
நேபாளக் குடியரசுத் தலைவர்கள் (2008 முதல் - தற்போது வரை)
தொகுஎண் | பெயர் (பிறப்பு–இறப்பு) |
படம் | தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் | பதவியேற்ற நாள் | விலகிய நாள் | துணை குடியரசுத் தலைவர் | வாக்குகள் |
---|---|---|---|---|---|---|---|
1 | ராம் பரன் யாதவ் (1948–) |
நேபாளக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2008 | 23 சூலை 2008 | 29 அக்டோபர் 2015 | பரமானந்த ஜா | 308 / 601 (2nd round) | |
2 | வித்யா தேவி பண்டாரி (1961–) |
நேபாள குடியரசுத் தலைவர் தேர்தல், 2015 | 29 அக்டோபர் 2015 | 13 மார்ச்சு 2023 | நந்த கிசோர் புன் | 327 / 601
| |
நேபாள குடியரசுத் தலைவர் தேர்தல், 2018 | |||||||
3 | ராம் சந்திர பௌதெல் (1944–) |
நேபாளக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2023 | 13 மார்ச்சு 2023 | பதவியில் | 566 / 881
|
நேபாள குடியரசுத் தலைவர் தேர்தல், 2023
தொகுநேபாளத்தின் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் மார்ச் 9, 2023 அன்று நடைபெற்றது. தேர்தலில் ராம் சந்திர பௌதெல் மற்றும் சுபாச்சந்திர நெம்வாங் ஆகியோர் போட்டியிட்டனர். ராம் சந்திர பௌதெல் அதிக வாக்குகள் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றார்.
குடியரசுத் தலைவர் தேர்தல்
வேட்பாளர் | அரசியல் கட்சிகள் | வாக்குகள் |
---|---|---|
ராம் சந்திர பௌதெல் | நேபாளி காங்கிரஸ் | 556 |
சுபச்சந்திர நெம்வாங் | மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் | 260 |
செல்லாத வாக்குகள் | 5 | 881 |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Salary of President". Naya Patrika. 17 July 2013 இம் மூலத்தில் இருந்து 17 ஜூலை 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130717183841/http://www.nayapatrika.com/index.php?option=com_content&view=article&id=11157:2013-07-17-01-07-28&catid=56:cover-story&Itemid=75. பார்த்த நாள்: 17 July 2013.