நிலை அலைவு
வானியலில், நிலை அலைவுகள் (libration) சுற்றிவரும் வான்பொருட்களுக்கிடையே ஒன்றிலிருந்து மற்றதைக் காணும்போது உணரப்படுகின்ற ஊசலாடும் நகர்வினைக் குறிக்கின்றது. குறிப்பாக புவியிலிருந்து நிலவி���் நகர்வு, அல்லது கோள்களிலிருந்து டிரோஜன் விண்கற்கள் போன்றவற்றைக் குறிக்க இக்கலைச்சொல் பயன்படுத்தப்படுகின்றது. நிலை அலைவு என்பது புவியிலிருந்து நிலவின் அளவில் ஏற்படும் சிறு மாற்றங்களைக் குறித்ததல்ல. இதுவும் அலையோட்டமாகக் காணப்பட்டாலும் இது புவிக்கும் நிலவுக்கும் உள்ள தொலைவின் வேறுபாட்டால், நீள்வட்டப்பாதையில் சுற்றுவதால், எழுவதாகும்.
நிலவின் நிலை அலைவு
தொகுஒத்தியங்கு சுழற்சியால் நிலவின் ஒரு அரைக்கோளமே புவியை நோக்கி உள்ளது. இதன்படி மனிதர்களால் 50% நிலவுப் பரப்பை மட்டுமே காணவியலும். 1960களில் நிலவுத் தேடல் திட்டங்களுக்குப் பின்னரே நிலவின் பின்பகுதியின் காட்சிகள் மனிதருக்குக் காணக் கிடைத்தன; இக்கூற்று பகுதியாகவே உண்மையாகும். ஏனெனில் காலவோட்டத்தில் நிலவின் நிலை அலைவுகளால் சற்றேக் கூடுதலாக 59% நிலவின் பரப்பைக் காண முடிந்துள்ளது.[1]
புவியிலிருந்து பார்க்கும்போது நிலா முன்னும் பின்னும் செல்வது போன்ற அசைவாக நிலை அலைவைக் காணலாம். இதனால் சற்றே வெவ்வேறான அரைக்கோளப் பரப்புகளை வெவ்வேறு காலங்களில் காணலாம்.
மூன்று வகையான நிலவு அலைவுகள் உள்ளன:
- நிலநிரைக்கோட்டில் அலைவு - இது புவியைச் சுற்றி நிலாச் செல்லும் சுற்றுப்பாதையின் வட்டவிலகலால்; நிலவின் சுற்றுதல் சுற்றுப்பாதை நிலையிலிருந்து சிலநேரங்களில் முன்னதாகவும் சில நேரங்களில் பிந்தியும் இருக்கின்றது.
- நிலநேர்க்கோட்டில் அலைவு - இது புவியைச் சுற்றும் சுற்றுப்பாதையின் தளத்திற்கு செங்குத்தும் சுழலச்சும் சற்றே சாய்ந்திருப்பதால் ஏற்படுகின்றது. இது புவி சூரியனைச் சுற்றும்போது எவ்வாறு பருவகாலங்கள் ஏற்படுகின்றனவோ அவ்வாறானது.
- பகலிரவு அலைவு என்பது புவியின் சுழற்சியால் ஒவ்வொரு நாளும் ஏற்படும் சிறு அலைவாகும்; காண்பவரை புவியையும் நிலவையும் இணைக்கின்ற நேர்கோட்டிற்கு முதலில் ஒருபுறமும் பின்னர் வேறு புறமும் கொண்டு செல்கின்றது. இதனால் புவியின் மையத்தில் இல்லாத காரணத்தால் காண்பவருக்கு முதலில் நிலவின் ஒருபக்கமும் பின்னர் மற்ற பக்கமும் காணக் கிடைக்கின்றது.
டிரோஜன் அலைவு
தொகு1772இல் ஜோசப் லூயி லாக்ராஞ்சியின் பகுப்பாய்வுகள் சிறு வான்பொருட்கள் நிலையாக ஓர் கோளுடன் அதன் சுற்றுவட்டப்பாதையைப் பகிர்ந்து கொள்ள முடியும் எனக் காட்டின. சுற்றுப்பாதை��ில் கோளுக்கு 60° முன்னும் பின்னும் உள்ள புள்ளிகள் லாக்ராஞ்சி புள்ளிகள் எனப்படுகின்றன; இந்தப் புள்ளிகளுக்கு அண்மித்து இயங்கும் வான்பொருட்கள் கோளின் சுற்றுப்பாதையிலேயே இயங்க முடியும். இத்தகைய டிராஜன் சிறுகோள்கள் புவி, வியாழன், செவ்வாய், மற்றும் நெப்டியூனின் சுற்றுப்பாதைகளில் இருப்பதாக வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். புவியின் டிரோஜன் சிறுகோள்களை, அவற்றின் அலைவுப்பாதைகள் பகல்நேர வானத்தில் அமைந்திருப்பதால், கட்புலனாகும் ஒளியில் காண்பது கடினமாகும். இருப்பினும் 2010இல் அகச்சிவப்புக் கதிர் அவதானிப்பு நுட்பங்களைப் பயன்படுத்தி சிறுகோள் 2010 TK7 புவியின் டிரோஜன் துணையாக கண்டறியப்பட்டுள்ளது; இது நிலைத்த சுற்றுப்பாதையில் முன்னால் செல்லும் லாக்ராஞ்சிப் புள்ளியில் அலைவுகளைக் கொண்டுள்ளது L4.[2]
மேற்சான்றுகள்
தொகு- ↑ Spudis, Paul D. (2004). "Moon". World Book at NASA. அணுகப்பட்டது May 27, 2010. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-04-17. பார்க்கப்பட்ட நாள் 2021-08-10.
- ↑ Connors, Martin; Paul Wiegert & Christian Veillet (28 July 2011). "Earth’s Trojan asteroid". Nature (Nature) 475: 481–483. doi:10.1038/nature10233. பப்மெட்:21796207. Bibcode: 2011Natur.475..481C. https://archive.org/details/sim_nature-uk_2011-07-28_475_7357/page/481. பார்த்த நாள்: 1 August 2011.
வெளி இணைப்புகள்
தொகு- Libration of the Moon from educational website From Stargazers to Starships
- Astronomy Picture of the Day: 2005 November 13 – time-lapse animation of moon through one complete cycle, hosted by NASA
- Libration: 2 years in 2 seconds – 24 full moon pictures taken over two years, compiled in an animation (linked on page) showing the Moon's libration and variations in apparent diameter
- Observing the Lunar Libration Zones
- Fine photographic show of lunar cycle and explanation of libration