நா. முருகானந்தம்
நா. முருகானந்தம் என்பவர் தமிழ்நாடு அரசின் ஐம்பதாவது தலைமைச் செயலாளராவார்.[1]
நா. முருகானந்தம் | |
---|---|
தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசு | |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
கல்வி | எம்.பி.ஏ. இ. ஆ. ப |
இவர் சென்னையைச் சோ்ந்தவர். இவர் கணினி அறிவியலில் முதுநிலைப் பட்டமும் ஐ.ஐ.எம்., லக்னோவில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றுள்ளார்.[2] 1991-ஆம் ஆண்டு இந்தியக் குடிமைப் பணித் தேர்வில் தோ்ச்சி பெற்று, திருநெல்வேலி மாவட்டத்தில் சார் ஆட்சியராகத் தனது பணியைத் தொடங்கினார்.[3] கடந்த 2001 முதல் 2004 ஆம் ஆண்டு வரை கோவை மாவட்ட ஆட்சியராகவும், ஊரக வளா்ச்சித் துறையின் இணைச் செயலா், தில்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையா், தொழில் துறை, நிதித் துறைகளின் செயலாளா் பொறுப்புகளிலும் பணியாற்றியுள்ளாா். 2021 டிசம்பரில் கூடுதல் தலைமைச் செயலராகப் பொறுப்பேற்று முதல்வரின் தனி பிரிவுச் செயலாளா் 1-ஆக பணிபுரிந்து வந்தார்.[4] பின்னர் 2024 ஆகஸ்ட்டில் தமிழக அரசின் தலைமைச் செயலராக நியமனம் செய்யப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "புதிய தலைமைச் செயலராக நா.முருகானந்தம் நியமனம்: தமிழக அரசு உத்தரவு". இந்துதமிழ் திசை. https://www.hindutamil.in/news/tamilnadu/1297642-na-muruganandam-appointed-as-the-new-chief-secretary.html. பார்த்த நாள்: 19 August 2024.
- ↑ "புதிய தலைமை செயலாளராக முருகானந்தம்; தமிழக அரசு நியமனம்". தினமலர். https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-muruganandam-appointed-as-tamilnadu-chief-secretary--/3708270. பார்த்த நாள்: 19 August 2024.
- ↑ "தமிழக அரசின் புதிய தலைமைச் செயலா் நா.முருகானந்தம்?". தினமணி. https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2024/Aug/18/the-new-chief-secretary-of-the-tamil-nadu-government-namurukanandam. பார்த்த நாள்: 19 August 2024.
- ↑ "7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலராக அந்தஸ்து வழங்கி உத்தரவு". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/tamilnadu/752648-7-ias-officers-promoted-1.html. பார்த்த நாள்: 19 August 2024.