தோள் சீலைப் போராட்டம்

கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் திருவாங்கூர் சமசுதானத்தின் கீழ் மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது இந்து நாடாக இருந்தது. அந்த காலகட்டத்தில் சாதீயக் கொடுமைகளால் மக்கள் அதிக அடக்குமுறைக்கு ஆளாகினர். பனையேறும் தொழிலைச் செய்து வந்த பனையேறி நாடார் நாயர், ஈழவர், புலையர் உட்பட 18 சமுதாயத்தைச் (சான்று தேவை) சார்ந்த பெண்கள் தங்கள் மார்பகத்தை மறைக்க மேலாடை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. நாடான் என்ற பட்டங்களுக்குரிய நிலமைக்காரர் நாடார்களும் இப்பகுதியில் இருந்தனர்.[1] இவர்கள் மார்பகத்தை திறந்து போடுவதுதான் உயர் சாதியினருக்குத் தரும் மரியாதை என்று தரம் தாழ்ந்த எண்ணத்தில் திருவாங்கூர் நாடு ஒரு நடைமுறையை வகுத்திருந்தது. இதன்படி 18(சான்று தேவை) சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியாமல் அவமதிப்புடன் வாழ்ந்து வந்தனர். இந்த அடக்குமுறையை எதிர்த்து சீர்திருத்த கிறித்தவத்தை ஏற்றுக்கொண்ட பனையேறி நாடார் சாதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் சாதிப் பெண்களுக்கு மார்பை மறைத்து சேலை அணிய உரிமை கோரிப் போராடத் தொடங்கினர். இது தோள் சீலைப் போராட்டம் எனப்பட்டது. 37 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு திருவிதாங்கூர் அரசு நாடார் கிருத்தவ பெண்களுக்கு மட்டும் தோள் சீலை அணியவும், மார்பகங்களை மறைக்கவும் உரிமை அளித்தது.

சாதிய கோட்பாடுகள்

கி.பி. ஏழாம் நூற்றாண்டு வாக்கில் கேரளப் பகுதியில் குடியேறிய நம்பூதிரிகள் பூமியிலுள்ள கடவுள்கள் தாங்கள் என்று சொல்லி அரசர்களும் பிறரும் மதிக்கும் வண்ணம் உயர்வு பெற்று வாழ்ந்தனர். மலையாள ��ாடு நம்பூதிரிப் பிராமணர்களான தங்களுக்குப் பரசுராமனால் ஈட்டித் தரப்பட்டது என்றும் அரசர் முதல் யாவரும் தங்களுக்குத் தொண்டு செய்யக் கடமைப்பட்டவர் என்றும் கூறி அதையே நடைமுறைப்படுத்தினார். அதனால் நிலவுடைமையாளர்களாகவும் விளங்கி தெய்வத் தன்மை பொருந்தியவர்களாகவும் மதிக்கப் பெற்றார்.

நம்பூதிரிகளில் வழிகாட்டுதலில் அமைந்த சமூகத்தில் சாதிப் பிரிவுகளும் தீண்டாமையும் அடிமை வாழ்வும் நிலைபேறு பெற்றிருந்தன. வர்ண தர்மம் எனப்படும் இந்து மதத்தில் நான்கு வர்ணங்கள் (பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன்) அடையாளங்காட்டப்பெற்றன. ஆனால் நம்பூதிரிகள் தங்கள் சுயநல நோக்கில் அதை வேறுவிதமாக மாற்றி சவர்ணர், அவர்ணர் எனப் பிரிவினை செய்தனர்.

முன்னளைய திருவிதாங்கூர் (Travancore) நாட்டின் பகுதியாக இருந்த இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் சாதிக் கொடுமை தீவிரமாக இருந்தது. அது தீண்டாமையின் உருவம்தான். உதாரணமாக, “ஒரு நம்பூதிரி பிராமணனுக்குப் பக்கத்தில் நாடாளுகின்ற சத்திரியர்கள் செல்லலாம். ஆனால் தொடக்கூடாது. மன்னனின் அருகில் சூத்திரர்களான நாயர்கள் செல்லலாம். ஆனால் தொடக்கூடாது. ஒரு நம்பூதிரியிடமிருந்து நாயர் இரண்டு அடித் தொலைவிலும், ஒரு நாடார் 12 அடி தொலைவிலும், ஒரு புலையர் 72 அடி தொலைவிலும் நிற்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.[3] இல்லையென்றால் அவர்கள் தீண்டாமைக்கு ஆளாக்கப்படுவர்.கோவிலில் சென்று இறை வழிபாடு மறுக்கப்பட்டிருந்தது. கோவில் தெருக்களில் நடக்க அனுமதி மறுக்கப்பட்டது. அரசு அனுமதியோடு மேற்கூறிய கொடுமைகள் 1850ம் ஆண்டுகள் வரை தொடர்ந்தன. இத்தகைய அடக்குமுறைகள் அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் எல்லைப் பகுதிகளிலும் அதை ஒட்டியிருந்த பகுதிகளிலும் இருந்து வந்தன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பான்மையினராக வாழும் பனையேரி நாடார் சமுதாயத்தினரும்,ஈழவ சமுதாயத்தினரும்.

மேலாடை அல்லது தோள் சீலை

திருவிதாங்கூரில் “மேலாடை”, அல்லது “Upper cloth” என்பதை மலையாளிகள் “மேல்முண்டு” என்றே அழைக்கின்றனர். நாயர் பெண்கள் இன்றும் இந்த மேல் முண்டை சில சமயச் சடங்குகள் மற்றும் திருமணச் சடங்குகளில் கடைபிடித்து வருகின்றனர். இவர்கள் சாதாரணமாக மூன்று முண்டுகளை பயன்படுத்துகின்றனர். ‘உடுமுண்டு’ அதாவது உடுத்திக் கொள்ளுகின்ற முண்டு (வேட்டி – ஒற்றை அல்லது இரட்டை), மார்பு துண்டு, அதாவது மார்பகங்களை மறைக்கின்ற கச்சை போன்ற வேட்டி, அதற்கும் மேலாக தோளோடு தோளில் இட்டு மறைக்கின்ற “மேல்முண்டு” அதாவது மேலடை போன்ற வேட்டித்துண்டுகளாகும். நம்பூரிப் பெண்கள் பொதுவாக மார்புமுண்டு அணியாமல், மேல்முண்டால் மார்பகங்களை இலைமறைவு காய்மறைவாக போர்த்திக் கொள்வர். இதை சித்தரிக்கின்ற வகையில் வரலாற்றாசியர் சங்கை எ.எசு.சாமுவேல் மேற்றீற் அவர்களின் தர்மபூமி (Land of charity) 1870-யில் பக்கம் 30-ல் படம் ஒன்று தந்துள்ளார். இதுதான் “தோள்சீலை”யே (மேல்முண்டு) தவிர ‘தோள் சேலை அல்ல’. பெண்களின் சேலை[புடவை] (Saree) முந்தாணை அல்ல தோள்சீலை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். திருவிதாங்கூர் நாட்டு அரசிகளே கூட இந்த மேல்முண்டை (தோள் சீலை) அணிவது இல்லை. இதை திருவிதாங்கூர் வரலாற்றை விரிவாக எழுதின நாகம் ஐயாவின் முதல் பாகத்தில் பக்கம் 520-ல் காணலாம். தவிரவும் இவருக்கு முன்பு (1878-ல்) திருவிதாங்கூர் வரலாற்றை அதன் தொன்மைக்காலம் தொட்டு எழுதிய திரு.பி.சங்குண்ணிமேனன் கூட அரசி கவுரிலெட்சுமிபாய் (பக்கம் – 362) மற்றும் அரசி பார்வதிபாய் (பக்கம் – 383) மற்றும் இளவரசு உருக்குமணிபாய் (பக்கம் – 389) போன்றோர்களின் ஆடை அலங்காரமும், கீழ்முண்டு, மார்பு முண்டு, மேல்முண்டு (Upper Cloth) என்றுதான் காணப்படுகின்றது. இந்த முறைதான் உயர் சாதி இந்துக்கள் அன்று அணிந்து வந்த ஆடை அலங்காரம்.

போராட்டத்திற்கான காரணம்

ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் ஜன்மி சம்பிரதாயமும், 10 மற்றும் 11 ம் நூற்றான்டுகளில் ஆரியப் பார்ப்பனர்களும் (நம்பூதிரிகள்) ஆதிக்கம் சேர நாட்டில் ஓங்கத் தொடங்கிய வேளையில் சாதிக் கட்டுப்பாடுகள் உருவெடுத்தன. 12 ம் நூற்றாண்டில் இந்தக் கட்டுப்பாடுகள் ஜென்மி சம்பிரதாயத்தின் உத்வேகத்தால் அதிகரித்து, மேல் சாதி இந்து என்றும், கீழ் சாதி இந்து என்றும் பாகுபாடுகள் உருவாகி காணாமை, நடவாமை, தொடாமை போன்ற சமுதாய முறைகள் உருவாகிற்று. இந்த தீமைகளில் ஒரு பிரிவு தான் தாழ்த்தப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலும், முட்டுக்கு கீழும் ஆடை அணியக்கூடாது என்றக் கட்டுப்பாடு. உயர்ந்த சாதி இந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மறைக்கப்படாத மார்பகங்களுடன்தான் மரியாதை செலுத்த வேண்டும். சான்றாக நம்பூதிரிகளின் முன்பு சூத்திர நாயர் பெண்கள் மார்பகங்களை மறைக்க கூடாது, அதே போன்று சாதி வரிசையின் அடிப்படையில் கீழ் சாதி இந்து நாடார் பெண்கள் அனைவரும் மார்பகங்களை மறைக்காமல் நடமாட வேண்டும் என்பது மரபாகிவிட்டது. இந்த உடைக் கட்டுப்பாட்டை மீறினால் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.

உடை கட்டுப்பாடு

திருவிதாங்கூர் நாட்டால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் தங்கள் இடுப்பிற்கு மேல் உடை அணிய மறுக்கப்பட்டனர். கலாச்சாரம் என்ற போர்வையில் பெண்களுக்கும் இது திணிக்கப்பட்டது. உயர் சாதி பெண்கள் தங்கள் மார்பை மறைக்க அனுமதி அளிக்கப் பட்டது என்றாலும் நம்பூதிரிப் பிராமணர்கள் முன்பு நாடார் சாதிப் பெண்கள் திறந்த மார்புடனே நிற்க வேண்டும் என்ற ஈனக் கட்டுப்பாடு இருந்தது. இந்த உடை கட்டுப்பாடுகள் மிக கடுமையாக கடைபிடிக்கப்பட்டன. உடை அணியும் விதத்தை வைத்தே மக்களை உயர்ந்தவர்களாகவும் தாழ்ந்தவர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டார்கள். கொத்தனாவிளை என்ற ஊரில் 1822 ம் ஆண்டு ஒரு சிறிய போராட்டம் நடைபெற்றது. அதன் பிறகு 37 வருட காலம் இப் பேராட்டம் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட போராட்டம் 1822 முதல் 1823 வரையும், இரண்டாம் கட்டப் போராட்டம் 1827 முதல் 1829 வரையும், மூன்றாம் கட்டப் போராட்டம் 1858 முதல் 1859 வரையும் நடைபெற்றது.

முத்துக்குட்டி சாமியார் பங்கு

முத்துக்குட்டி சாமியார் 1808-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ம் தேதி (கொல்லமாண்டு மாசி மாதம் 20-ம் நாள்) பிறந்தார். இவரது தாய் தந்தையர் திருநெல்வேலி மாவட்டம், இடையன்குடியிலிருந்து பனைத்தொழில் செய்து பிழைப்புக்காக திருவிதாங்கூர் வந்தனர். வாலிப பருவத்தில் இவர் பனைத்தொழிலையே செய்தார். எனவே எஸ். இராமச்சந்திரன் சித்தாந்தத்தின்படி இவர் நாடான் அல்லது சத்திரியன் ஆக முடியாது் இவர் சாணான் ஆகவே முடியும். இவர் நோய்வாய்ப்பட்டு, திருச்செந்தூர் முருகன் சன்னிதானத்திற்கு தரிசனத்துக்காகத் தூக்கிச் சென்ற வேளையில், 1833 ஆம் ஆண்டு, தனது 25-ம் வயதில் விஞ்சைப் பெற்று ஊர் திரும்பினார். அதனைத் தொடர்ந்து சுவாமிகள் தவ வாழ்க்கை மேற்கொண்டு 1834 ஆம் ஆண்டில் தனது சமயத் தொண்டைத் தொடங்கினார். இதற்கும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1838 முதற்கொண்டு அருளாசிகள் வழங்கத் தொடங்கி புகழ் அடைந்தார். இவரது கொள்கையான “ஏக கடவுள், ஏகச் சமயம், ஒரே சாதி” என்ற கோட்பாட்டால் சாணார் மக்கள் அனேகர் ஈர்க்கப்பட்டு இந்து சமயத்தைவிட்டு இப்புதிய சமயத்தைத் தழுவினர். 1851 ஆம் ஆண்டு தனது 43 அகவையில் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டார். இவரது பூத உடல் பூவண்டர்தோப்பு என்ற சாமித்தோப்பில் சமணமுறை போன்று உட்கார்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டு, அதன்மேல் தலைமைப்பதி நிறுவப்பட்டுள்ளது.

இவரது மக்கள் தொண்டு 1838-ல் தான் தொடங்கப்பட்டது. ஆனால் தோள்சீலைப் போராட்டம் 1822-ல் தொடங்கப்பட்டுவிட்டது. அதன் இரண்டாவது கட்டப் பேராட்டம் கூட 1829-ல் தொடங்கப்பட்டது. அதாவது சாமியார் மக்கள் தொண்டு தொடங்குவதற்கு முன்பே, (1838-ல்) ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே கலகத்தின் இரண்டாவது நிலை எட்டிவிட்டது. எனவே பெண்கள் தோள்சீலை (Upper Cloth) அணிவதில் இவருக்கு எந்தவித பங்களிப்பும் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதை உறுதியாகக் கூறலாம். தோள்சீலைப் போராட்டம் முழு வெற்றி பெற்றது 1859-ல் ஆகும். இதற்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே சாமியார் காலமாகிவிட்டார்கள். அந்த வகையிலும் அவருக்கு பங்கு எடுத்துக் கொள்ள இயலவில்லை. அவரது ஆயுட் காலத்தில் சில குறுகிய காலகட்டங்களில் தோள்சீலைப் போராட்டம் நடந்தது என்பது உண்மை. இப்போராட்டங்களை கிறிஸ்தவ மிஷனறிமார்கள் முன்னின்று நடத்தினார்களேத்[சான்று தேவை]தவிர, முத்துக்குட்டிசாமிகள் முன்னின்று, குறைந்தபட்சம் அவரது கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்களிடத்தில் கூட விரிவாகச் செய்யவில்லை.

என்று இறைவனிடம் ஆவலாதி கூறுகிறாரேத் தவிர, அடித்த உயர்சாதியானைப் பார்த்து “ஏய் நீ ஏன் எங்கள் பெண்ணை அடிக்கிறாய், அடித்தால் உன் கையை நான் உடைப்பேன்” என்றாவது கூறி இவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தவிரவும் பெண்களை அழைத்து “ஏ, கண்மணிகளா சேலையைக் கட்டிக் கொண்டும், ரவிக்கையை அணிந்து கொண்டும் தைரியமாக நடமாடுங்கள், அதனால் என்ன வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று பெண்களுக்கு இவர் ஊக்கமளித்ததாகக்கூட அகிலத்தில் குறிப்பு உண்டா?

முதல் போராட்டம்

 
சார்ல்சு மீட்

சீர்திருத்தக் கிறித்தவ சமயத் தொண்டரான மீட் பாதிரியார் [2] கிறித்தவ பெண்களின் மார்பகங்களை மறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதனால் கிறித்தவ பெண்கள் தங்கள் மார்பகங்களை துணிந்து மறைத்ததுமல்லாமல், அதற்கு மேல் ஒரு மேலாடையையும் பயன்படுத்தினர். இதனால் மேல் சாதியினர் கலவரம் செய்தனர்[சான்று தேவை]. மே மாதம் 1822ம் வருடம் கல்குளம் மற்றும் இரணியல் பகுதிகளில் கலவரம் வெடித்தது. இதன் காரணமாக மீட் ஐயர் என்ற ஐரோப்பிய மறைப்பணியாளர் ஆங்கிலேய தளபதி கார்னல் நேவால் என்பவருக்கு இச்சம்பவங்களைப் பற்றி விரிவாக கடிதம் எழுதினார். இதன் பயனாக ஆங்கிலேய தளபதி கார்னல் நேவால் பத்மநாபபுரம் நீதிமன்ற விசாரனைக்கு உத்தரவிடுகிறார். இதன் பயனாக 1823 ம் ஆண்டு வெளியிடப்பட்ட நீதிமன்ற உத்தரவுப்படி சீர்திருத்தக் கிறித்தவர்களுக்கு மட்டும் மேலாடை அணியலாம் என்று தீர்ப்பளிக்கப்படுகிறது.

இரண்டாம் கட்டப் போராட்டம்

மிக அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களான ஆத்தூர், திற்பரப்பு, கண்ணனூர், அருமனை,உடையார்விளை, புலிப்புனம் ஆகிய இடங்களில் மீண்டும் 1827 ம் ஆண்டு போராட்டம் வெடித்தது. 1823 ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை ஒரு நிரந்தரமான தீர்வை அளிக்கத் தவறியது. இந்த ஆணையின் அடிப்படையில் கிறித்தவப் பெண்கள் உயர்சாதிப் பெண்கள் அணிவது போன்ற ஆடைகள் அணியக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. இதனால் கிறித்தவ பெண்களிடம் அதிருப்தி ஓங்கியது. கிறித்தவ பெண்கள் தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட குப்பாயம் என்ற மேலாடையை விட ஐரோப்பிய மறைப்பணியாளர்கள் மற்றும் உயர் சாதி பெண்கள் அணியும் உடைகளை அணிய ஆரம்பித்தனர். இவர்களைப் பின்பற்றி இந்து பெண்களும் மேலாடை அணிய ஆரம்பித்தனர். இவர்களுக்கு போன்றோர் மிகவும் உறுதுணையாக இருந்தனர். இதற்கு சூத்திர நாயர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். விக்டோரியா மகராணியின் பிரகடனத்தையடுத்து தோள் சீலைப் போராட்டம் தீவிரமடைந்தது. விக்டோரியா மகராணியின் பிரகடனம்

'one soceity or Government should not interfere into the religious regulations or social restrictions of other society. Government servants should not intervene and discriminate anybody in the customary affairs that is being followed in the respective soceities. The violators of this order would be punished'[3]


இந்த பிரகடனம் நவம்பர் 1, 1858 ம் ஆண்டு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இந்தியாவை ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனியிடமிருந்து அரசாங்க கட்டுப்பாட்டில் கொண்டு வரும் போது ஆற்றிய உரை. இதை எதிர்த்து கிறித்தவ மறைப் பணியாளர்கள் ஆங்கிலேய அரசிடம் முறையிட்டனர். நெய்யாற்றின்கரையில் தொடங்கியப் போராட்டம் பாறசாலை, நெய்யூர் போன்ற ஊர்களுக்கும் பரவியது. பல இடங்களில் தெருக்களிலும், சந்தைகளிலும் பெண்கள் தாக்கப்பட்டனர். பெண்களின் மேலாடைகள் கிழித்து எறியப்பட்டன.பெண்கள் மற்றும் குழந்தைகள் ஐரோப்பிய மறைபரப்பாளர்களின் பங்களாக்களில் ஒளிந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். டிசம்பர் 30, 1859 ம் நாள் கோட்டாறுப் பகுதியில் வைத்து நாடார் கிறித்தவகளுக்கும் சூத்திர நாயர்களுக்கும் இடையே மிகப் பெரிய சண்டை மூண்டது. இந்து,கிறித்தவர்களுடன் இதில் கைகோர்த்து கொண்டனர்.

உடை உடுத்த உரிமை

1829-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் நாள் திருவிதாங்கூர் அரசு வெளியிட்ட நீட்டில் (அரசு ஆணையில்) இந்து மதத்தில் நீடிக்கின்ற சாணார் பெண்டிர், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய சாணார் பெண்டிர் போன்று குப்பாயம் அணியலாம் என்று கூறப்படவில்லை. இந்த உத்தரவுப்படி இந்து சமயத்தில் நீடித்த சாணார் பெண்களுக்கு தங்களது மார்பகங்களை மறைப்பதற்கு உரிமை வழங்கவில்லை என்பது வெட்ட வெளிச்சம். இதனால் கிறிஸ்தவர்களுக்கு கிடைக்கப் பெற்ற உரிமையும் பறிபோயிற்று. சுருக்கமாகக் கூறின்

மிஷனறிகள் அல்ல குப்பாயத்தை வடிவமைத்தது. அவர்களின் மனைவிகளே இதை உருவாக்கி கையால் தைத்துக் கொடுத்தனர். இதை உருவாக்கிக் கொடுப்பதற்கான காரணத்தை அவர்கள் கூறும் பொழுது

இதற்கான அரசாணை 26, சூலை 1859 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால் உயர் சாதி பெண்கள் அணிவது போன்ற ஆடை அணிய தடை விதிக்கப்பட்டது. இந்த உரிமையை மற்ற சாதியினருக்கு அரசு வழங்கவில்லை. எனினும் கிறித்தவப் பெண்கள் அனைவரும் மேலாடை அணிந்தனர்.

மூன்றாம் கட்ட போராட்டம்

இதனால்தான் மீண்டும் போராட்டம் தொடர்ந்தது. இப்பேராட்டத்தை மிஷனறிகள் பொறுப்பேற்று நடத்தினர்.ஆனாலும் சாணார் கிறிஸ்தவர்கள் சற்றும் சளைக்காமல் நாயர்களை எதிர்த்துப் போராடி 1859-ல் வெற்றிவாகை சூடினர். “அதன் பயனாக 1859 ஆம் ஆண்டு ஜுலை 26-ம் நாள் அதிகாரபூர்வ அரசு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அனைத்து சமயத்தைச் சேர்ந்த சாணார் பெண்களும், கிறிஸ்தவப் பெண்களைப் போன்று குப்பாமிட்டுக் கொள்ளவோ, மீனவப் பெண்களைப் போன்று கட்டிச் (Coarse) சீலை உடுத்திக் கொள்ளவோ செய்யலாம் என்றும், ஆனால் உயர் சாதிப் பெண்கள் (நாயர், நம்பூதிரிகள், வெள்ளாளர்கள்) மேலாடை அணிவது போன்று அணியாமல் வேறு எவ்விதத்திலாவது மார்பை மறைத்துக் கொள்வதற்கு எந்தவிதத் தடையும் இல்லை என அந்த அறிக்கை தெரிவித்தது”.[6] இந்த நீட்டுப்ப��ித்தான் இந்து சமயத்தில் நீடித்த சாணார் பெண்களுக்கும் குப்பாயம் அணியும் உரிமை கிடைத்தது. ஆயினும் இவ்வுரிமை தாழ்ந்த சாதிப் பெண்களுக்குக் கிடைக்கவில்லை. தாழ்த்தப்பட்ட பிற சமுதாயத்தினருக்கு இவ்வறிப்பால் உரிமை கிடைக்கவில்லை. எனவே இந்த ஆணையைக் கண்டித்து மிஷனறிகள் ஆங்கில அரசிடம் மீண்டும் மேல்முறையீடு செய்தனர். சென்னை மாகாண ஆளூனர் சார்லஸ்ட்ரெவிலின் திருவிதாங்கூருக்கான ஆங்கிலப் பிரதிநிதி மால்ட்பியை நேரடியாக அழைத்துப் பேசினார். திருவிதாங்கூரில் பெண்கள் உடை அணிவதில் இருக்கின்ற எல்லா கட்டுப்பாடுகளையும் நீக்க ஆங்கிலப் பிரதிநிதி மகாராஜாவிடம் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மால்ட்பி இதனைக் குறித்து மகாராசாவிடம் (ஆயில்லியம் திருநாள் ராமவர்மா – 1860 – 1080) பேசினார். ஆங்கில அரசின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காவிட்டால் ஆங்கில அரசுடனான தங்களது உறவு பாதிக்கப்படும் என்றுணர்ந்த மகாராஜா 1865-ம் ஆண்டு மற்றோரு அறிவிப்பு வெளியிட்டார். இதன் மூலம் இந்து கிறிஸ்தவ சத்திரிய நாடார் பெண்களுக்கு மேலாடை அணிவதற்குக் கொடுக்கப்பட்ட உரிமை அனைத்து சாதியைச் சேர்ந்த பெண்களுக்கும் கொடுக்கப்பட்டது. ஆனால் சூத்திர நாயர் பெண்களைப் போன்று ஆடை அணியும் உரிமை மட்டும் அனைவருக்கும் மறுக்கப்பட்டிருந்தது”.[7]

ரவிக்கை அணிவதற்கான உரிமையை கர்னல் மன்றோ (Resident) 1823-ல் வழங்கப்பட்டு கிறிஸ்தவப் பெண்கள் அன்று முதல் பகிரங்கமாக அணிந்து கொண்டனர்.

இப் போராட்டத்திம் விளைவாகவும் ஆங்கிலேயர்களின் நெருக்கடியின் காரணமாகவும் திருவிதாங்கூர் அரசரும், திவானும் அனைத்து நாடார் பெண்களும் மத வேறுபாடு இல்லாமல் குப்பாயம் என்கின்ற மேலாடை அணியலாம் என்று உரிமை அளித்தனர்.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட சர்ச்சை கருத்துக்கள்

மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 9ஆம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடப் புத்தகத்தின் 168ஆவது பக்கத்தில் காலணி ஆதிக்க இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ற தலைப்பிலான பாடத்தில் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் சில கருத்துக்கள் இடம் பெற்றுள்ளதாகவும் அது உடனே நீக்க வேண்டும் என்றும் தமிழகத்தை சேர்ந்த திமுக, மதிமுக, பமக, சமக ஆகிய கட்சிகள் கூறி வருகின்றன. இப்பாடத் திட்டத்தை ஜானகி நாயர் என்பவர் தயாரித்துள்ளார். நீக்குவதற்கு முன் வைக்கப்பட்ட முக்கிய காரணங்கள்:

  • சாதி மற்றும் மோதலும், ஆடை மாற்றமும் என்ற குறுந்தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ள பத்தியில், ஆங்கிலேயர் ஆட்சியில் தெற்கு திருவிதாங்கூர் என்றழைக்கப்பட்ட குமரி மாவட்டத்தின் பூர்வக்குடி மக்கள் நாயர்கள் தான் என்றும், நாடார் சமுதாயம் அங்கு பிழைப்பு தேடி இடம் பெயர்ந்து வந்தது என்றும் தவறாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழர் நாகரீகத்தின் ஓர் அங்கமாக இந்து கடலில் மூழ்கிய குமரிக்கண்டத்தின் ஒருபகுதி தான் கன்னியாக்குமரி மாவட்டம் மாகும். நாடர்கள் தான் அம்மாவட்டத்தின் பூர்வகுடிமக்கள் ஆவர். அவ்வாறு இருக்கும்போது அவர்களை பிழைப்பு தேடி வந்தவர்கள் என்றும், பிழைப்பு தேடி வந்த மலையாள நாயர்களை பூர்வகுடிமக்கள் என்றும் பாடநூலில் குறிப்பிடபட்டிருக்கிறது.
  • நாடார்களை சாணார்கள் என்று அழைக்கும் வழக்கம் வெகுகாலத்திற்கு முன்பே ஒழிந்துவிட்ட நிலையில், இந்த பாடத்தின் அனைத்து இடங்களிலும் நாடார் சமுதாயத்தினரை சாணார்கள் என்று குறிப்பிட்டிருப்பது அவர்களை இழிவுபடுத்தும் செயலாகும்.
  • நாடார் சமுதாயப் பெண்கள் மேலாடை அணியத் தடை விதிக்கப் பட்டிருந்ததை எதிர்த்து, கிறித்தவ மறைபரப்பு பணியாளர்களின் துணை கொண்டு நடத்திய போராட்டங்கள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. 1836ம் ஆண்டிலிருந்து அய்யா வைகுந்தர் அவர்கள் நடத்திய போராட்டங்களை பற்றிய குறிப்புகளை பாட புத்தகத்தில் சேர்க்கவில்லை.

ஆங்கிலேயரின் வெற்றி

சில நூற்றாண்டுகளாவது இந்திய மண்ணை ஆள்வதற்கு திட்டம் தீட்டிய ஆங்கிலேயர், சிப்பாய் கலகத்திற்குப் பின்னர் இந்தியாவில் எடுத்த மக்கள் குடிமதிப்பில் சாதி, சமயம் பற்றிய விவரங்கள் மிக முக்கிய இடம் வகித்தன. இதன் மூலம் நீர்மத்தன்மையுடன் மங்கலாக இருந்த இவ்வேறுபாடுகள் உறுதிப்படுத்தப்பட்டு செய்யும் தொழிலை வைத்து ஏற்பட்ட வேறுபாடுகள் மறைந்து ஆங்கிலேயர்கள் வகைப்படுத்திய சாதி, மத அமைப்புகள் இறுகத்தொடங்கி ஆங்கிலேயர் திட்டமிட்டபடி மக்கள் நடந்து கொள்ளத்துவங்கினர். விடுதலைக்குப் பின்னரும் அதே கணக்கெடுப்பு முறை இந்தியாவில் பின்பற்றப்பட்டது.

இந்தியாவில் இத்தகைய விதத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்திய ஆங்கிலேயர் தங்கள் தாயகமான இங்கிலாந்தில் இதற்கு நேர்மாறாகக் கணக்கெடுத்தனர். 1801 லிருந்து 1931 வரையிலான 130 ஆண்டு கால கட்டத்திலும் மக்களின் சமயம் கணக்கில் எடுக்கப்படவில்லை. 1851 இல் ஒருமுறை மட்டும் விரும்பினால் தரலாம் விரும்பாவிட்டால் சமயம் குறிப்பிடப்படவேண்டாம் எனக்குறிப்பிட்டு சமயம் பற்றிய வினா இடம் பெற்றிருந்தது. மக்களில் பலர் தங்கள் சமய நம்பிக்கையை தெரிவிக்கவே இல்லை.[8]

இதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி போன்ற ஆங்கிலேயர் பலம் மிகுந்திருந்த பகுதிகளில் இன்றளவும் பல போராட்டங்கள் தொடர்கின்றன.[9]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. Robert Hardgrave (1969). The Nadars of Tamil Nadu. University of California Press. pp. 52&56.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-08-28. பார்க்கப்பட்ட நாள் 2011-03-04.
  3. http://en.wikisource.org/wiki/Queen_Victoria%27s_Proclamation
  4. C.M. Augur – Church, History of Travancore – 1902 – Appendix XVIII – Page vii
  5. (C.M. Augur – Church History of Travancore – 1. அக்டோபர் 1902 pages 781, 782)
  6. (Proclamations from 1858–1874 – AD proclamation of 1859 – AD, சமயத் தொண்டர்களும் சமுதாய மறுமலர்ச்சியும் – 1999 – Pயபந 157)
  7. Neetu Vol. 71/ PP.210/ 211/ Proclamation of 19 Mithunam 1040ME, (1865-AD, Central Archieves, Trivandrum as quoted by Dr. Ivy, Pepeter, supra stated, page 158)
  8. நரிக்குறவர் இனவரைவியல்;கரசூர் பத்மபாரதி;பக்கம் 6-7 (முனைவர் பக்தவத்சல பாரதி)
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-27. பார்க்கப்பட்ட நாள் 2014-08-01.

வெளி இணைப்புகள்

  1. LIBERATION OF THE OPPRESSED, A CONTINUOUS STRUGGLE பரணிடப்பட்டது 2011-07-24 at the வந்தவழி இயந்திரம், A CASE STUDY (Since 1822 A.D.)
  2. தோள் சீலைப் போராட்டம்[தொடர்பிழந்த இணைப்பு]
  3. தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்
  4. சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 5. உடை
  5. எழுதப்படாத சரித்திரம் சமூக புரட்சியாளர் வைகுண்ட சாமி![தொடர்பிழந்த இணைப்பு]
  6. பொன்னீலன் எழுதிய தெற்கிலிருந்து
  7. பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் மையம் வெளியிட்ட பண்பாட்டு வேர்களைத் தேடி
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோள்_சீலைப்_போராட்டம்&oldid=3879025" இலிருந்து மீள்விக்கப்பட்டது