தை

(தை மாதம் இலிருந்து ���ழிமாற்றப்பட்டது)

தமிழ் முறையில் கணிக்கப்பட்ட நாட்காட்டியின்படி ஆண்டின் பத்தாவது மாதம் தை ஆகும். இது தைசிய என்றும் பௌச/பௌட என்றும் வடமொழியில் குறிப்பிடப்படுகிறது. சூரியன் மகர இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 27 நாடி, 16 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 அல்லது 30 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும். தை மாதப் பிறப்புத் தமிழர்களால் தைப்பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இது தமிழர்களுக்கே சிறப்பான பண்டிகையாதலால் தமிழர் திருநாள் என்றும், அறுவடையில் கிடைத்த புது நெல்லுக் கொண்டு சூரியனுக்குப் பொங்கலிட்டுப் படைக்கும் நாளாதலால் உழவர் திருநாள் என்றும் இந்தநாள் குறிப்பிடப்படுகின்றது.[1][2][3]

தை மாதத்தில் சூரியனின் நிலை.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி

மேற்கோள்கள்

தொகு
  1. Henderson, Helene. (Ed.) (2005) Holidays, festivals, and celebrations of the world dictionary Third edition. Electronic edition. Detroit: Omnigraphics, p. xxix. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7808-0982-3
  2. James G. Lochtefeld (2002). The Illustrated Encyclopedia of Hinduism: A-M, N-Z (Vol 1 & 2). The Rosen Publishing Group. pp. 508. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8239-3179-8.
  3. Robert Sewell; Śaṅkara Bālakr̥shṇa Dīkshita (1896). The Indian Calendar. S. Sonnenschein & Company. pp. 5–11, 23–29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தை&oldid=4099742" இலிருந்து மீள்விக்கப்பட்டது