தெக்ரி கர்வால் மாவட்டம்

உத்தரகாண்டத்தில் உள்ள மாவட்டம்

தெக்ரி கார்வால் மாவட்டம் (Tehri Garhwal District), இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் பதின்மூன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் கார்வால் கோட்டத்தில் அமைந்துள்ளது. இதன் தலைமையிடம் நியு தெக்ரி நகரத்தில் உள்ளது. பரப்பளவில் இம்மாவட்டம் உத்தரகாண்ட மாநிலத்தின் பெரிய மாவட்டமாகும்.

தெக்ரி கார்வால்
टिहरी गढ़वाल
மாவட்டம்
உத்தராகண்டம் மாநிலத்தில் டெக்ரி கார்வால் மாவட்டத்தின் அமைவிடம்
உத்தராகண்டம் மாநிலத்தில் டெக்ரி கார்வால் மாவட்டத்தின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்உத்தராகண்டம்
கோட்டம்கார்வால்
தலைமையிடம்நியு தெக்ரி
பரப்பளவு
 • மொத்தம்3,642 km2 (1,406 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்6,18,931
 • அடர்த்தி170/km2 (400/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
249001
வாகனப் பதிவுUK-09
இணையதளம்tehri.nic.in

மாவட்ட எல்லைகள்

தொகு

இம்மாவட்டம் வடக்கில் உத்தரகாசி மாவட்டம், கிழக்கில் ருத்ரபிரயாக் மாவட்டம், தெற்கில் பௌரி கார்வால் மாவட்டம், மேற்கில் டேராடூன் மாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது.

பொருளாதாரம்

தொகு

இம்மாவட்டம் வேளாண் பொருளாதாரத்தையே நம்பியுள்ளது. கோதுமை, பார்லி, பருப்பு, கடுகு, நிலக்கடலை, அரிசி, எள், உளுந்தம் பருப்பு, சோயா மொச்சை, கேழ்வரகு மற்றும் ராகி இம்மாவட்டத்தின் முக்கியப் பயிர்களாகும். மேலும் பழத்தோட்டங்கள் உள்ளன.[1]

அரசியல்

தொகு

இம்மாவட்டம் கான்சாலி (தலித்), தியோபிரயாகை, நரேந்தரநகர், பிரதாபநகர், டெக்ரி மற்றும் தனொல்தி என ஆறு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம்

தொகு

3,642 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட டெக்ரி கார்வால் மாவட்டம் கீர்த்தி மற்றும் டெக்ரி-பிரதாப்நகர் என இரண்டு வருவாய் கோட்டங்களும், தேவபிரயாகை, கன்சாலி, நரேந்திரநகர், பிரதாபநகர், டெக்ரி, தனோல்தி, கண்டிசௌர், மற்றும் நயின்பாக் என ஏழு வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.

மேலும் இம்மாவட்டம் பிலாங்கனா, சம்பா, ஜகாந்திதர், ஜௌன்பூர், கீர்த்திநகர், நரந்திரநகர், பிரதாபநகர், தேவபிரயாகை மற்றும் தௌல்தர் என ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களும், 76 ஊராட்சி மன்றங்களையும், 1,847 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது.

இம்மாவட்டம் டெக்ரி மற்றும் நரேந்திரநகர் என்ற இரண்டு நகராட்சி மன்றங்களை கொண்டுள்ளது.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 618,931 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 297,986 மற்றும் பெண்கள் 320,945 ஆக உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 1077 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 170 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 76.36 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 89.76 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 64.28 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 84,657 ஆக உள்ளது.[2]

ஆன்மிகத் தலங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Agriculture Contingency Plan for District : Tehri Garhwal" (PDF). agricoop.nic.in/. பார்க்கப்பட்ட நாள் 4 Feb 2016.
  2. http://www.census2011.co.in/census/district/577-tehri-garhwal.html

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெக்ரி_கர்வால்_மாவட்டம்&oldid=3385141" இலிருந்து மீள்விக்கப்பட்டது