திருவள்ளுவர் விருது

திருவள்ளுவர் விருது (Thiruvalluvar Award) என்பது பண்டைய கவிஞர்-தத்துவஞானி, உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரின் நினைவாக இந்தியாவின் தமிழக மாநில அரசு வழங்கும் ஆண்டு விருது ஆகும். இந்த விருது திருக்குறள் இலக்கியத்திற்கும் அதன் தத்துவத்திற்கும் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதானது 1986ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில், தமிழக அரசு திருவள்ளுவர் தினமாக கடைபிடிக்கப்படும் தை மாதத்தின் 2வது நாளில் வழங்கப்படுகிறது. இந்த விருது தமிழ் மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக வழங்கப்படுகிறது.[1]

விருது

தொகு

திருவள்ளுவர் விருதினை பெறுபவருக்கு 100,000 பணமும் 1- பவுன் தங்கப் பதக்கம், மற்றும் சான்று வழங்கப்படும்.[2] விருதில் முதலில் 10,000 ரொக்கப் பரிசு மட்டுமே வழங்கப்பட்டது. 1991ஆம் ஆண்டு முதல், பரிசுத் தொகை 20,000 ஆக உயர்த்தப்பட்டது. பின்னர் 1999ஆம் ஆண்டு முதல், பரிசுத் தொகை மீண்டும் தற்போதைய 100,000 ஆக உயர்த்தப்பட்டது.[1]

விருது பெற்றவர்கள்

தொகு
வ.எண். ஆண்டு பெறுபவர் படம் பிறப்பு/

இறப்பு

நாடு குறிப்பு
1 1986 குன்றக்குடி அடிகளார்   1925–1995   இந்தியா இந்து ஆன்மீக குரு
2 1987 கி. ஆ. பெ. விசுவநாதம்   1899–1994  இந்தியா
3 1988 எஸ். தண்டபாணி தேசிகர்   இந்தியா
4 1989 வ. சுப. மாணிக்கம்   1917–1989   இந்தியா
5 1990 கு. ச. ஆனந்தன் 1934–1999   இந்தியா
6 1991 சுந்தர சண்முகனார்   1922–1997   இந்தியா
7 1992 இரா. நெடுஞ்செழியன் 1920–2000   இந்தியா
8 1993 கலை. டி. கண்ணன்   இந்தியா
9 1994 திருக்குறள் வீ. முனிசாமி 1913–1994   India இறப்பிற்குப் பின்னர் வழங்கப்பட்டது
10 1995 சா. சிவகாமசுந்தரி   இந்தியா
11 1996 எம். கோவிந்தசாமி   இந்தியா
12 1997 கே. மோகன்ராஜ்   இந்தியா
13 1998 சங்கரபாணி   இந்தியா
14 1999 வா. செ. குழந்தைசாமி 1929–2016   இந்தியா
15 2000 டி. எஸ். கே. கண்ணன்   இந்தியா
16 2001 வி. எம். சேதுராமன்   இந்தியா
17 2002 ஐ. சுந்தரமூர்த்தி   இந்தியா
18 2003 கே. மங்கையர்கரசி   இந்தியா
19 2004 ஆர். முத்துகுமாரசாமி   இந்தியா
20 2005 பி. அரங்கசாமி   இந்தியா
21 2006 அரு. அழகப்பன்   இந்தியா
22 2007 க. பா. அறவாணன்   1941–2018   இந்தியா
23 2008 குன்றக்குடி பொன்னம்பழ அடிகள்   இந்தியா
24 2009 பொன் கோதண்டராமன் (பொற்கோ)   இந்தியா தமிழ் கல்வியாளர், சென்னைப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர்[3]
25 2010 ஐராவதம் மகாதேவன்   1930–2018   இந்தியா
26 2011 பா. வளன்அரசு   இந்தியா
27 2012 எஸ். வரதராஜன்   இந்தியா நிறுவநர்—குறள் மனம் மாத இதழ்[சான்று தேவை]
28 2013 என் முருகன்   இந்தியா
29 2014 யூசி 1951–   தைவான் திருவள்ளுவர் விருது பெறும் முதலாவது அயற்நாட்டினர்[4]
30 2015 க. பாஸ்கரன்   1951–   இந்தியா
31 2016 வி. ஜி. சந்தோசம்   இந்தியா
32 2017 பி. வீரமணி   இந்தியா தமிழ் ஆர்வலர்[2]
33 2018 ஜி. பெரியண்ணன்   இந்தியா
34 2019 எம். ஜி. அன்வர்பாட்சா   இந்தியா
35 2020 என். நித்யானந்த பாரதி   இந்தியா [5]
36 2021 வைகைச்செல்வன்   இந்தியா [6]
37 2022 மு. மீனாட்சி சுந்தரம்   இந்தியா [7]
38 2023 இரணியன் நா.கு.பொன்னுசாமி   இந்தியா [8]
39 2024 பாலமுருகனடி சுவாமிகள்   இந்தியா [9]
40 2025 பெரும் புலவர் மு.படிக்கராமு   இந்தியா [10]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Polilan et al., 2019.
  2. 2.0 2.1 The New Indian Express, 16 January 2017.
  3. The Times of India, 29 December 2008.
  4. The New Indian Express, 16 January 2014.
  5. The Hindu, 21 January 2020.
  6. https://www.hindutamil.in/news/tamilnadu/622316-tn-awards.html
  7. https://www.dinamani.com/tamilnadu/2022/jan/15/meenakshi-sundaram-nominated-for-thiruvalluvar-award-3774097.html
  8. https://www.dailythanthi.com/News/State/thiruvalluvar-award-and-tamil-nadu-government-awards-chief-minister-mkstalin-presented-awards-to-9-people-879429
  9. "TN govt announces recipients for Periyar, Ambedkar, Anna awards". DT Next (Chennai: Daily Thanthi). 12 January 2024. https://www.dtnext.in/news/tamilnadu/tn-govt-announces-recipients-for-periyar-ambedkar-anna-awards-760784#:~:text=Balamuruganadi%20Swamigal%2C%20who%20has%20been,for%20Kamarajar%20award%20for%202023.. 
  10. "தமிழக அரசின் திருவள்ளுவர் விருது உள்ளிட்ட 10 விருதுகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்". Daily Thanthi (Chennai: Daily Thanthi). 15 January 2025. https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-mkstalin-presented-10-awards-including-the-tamil-nadu-governments-thiruvalluvar-award-1139561. 

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவள்ளுவர்_விருது&oldid=4196027" இலிருந்து மீள்விக்கப்பட்டது