திருமாகாளம் மகாகாளநாதர் கோயில்

பாடல்பெற்ற சோழநாட்டு தலம்

திருமாகாளம் மாகாளேசுவரர் கோயில் (அம்பர் மாகாளம்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 55ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தில் சோமாசிமாற நாயனார் சோம யாகஞ் செய்தார் எனப்படுகிறது.

தேவாரம் பாடல் பெற்ற
அம்பர் மாகாளம் மகாகாளநாதர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):அம்பர் மாகாளம்
பெயர்:அம்பர் மாகாளம் மகாகாளநாதர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:கோயில் திருமாளம்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:மகாகாளநாதர், மாகாளேசுவரர், காளகண்டேசுவரர்
தாயார்:பட்சயாம்பிகை, பட்சநாயகி
தல விருட்சம்:கருங்காலி, மருதமரம்
தீர்த்தம்:மாகாள தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

அமைவிடம்

தொகு

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]

 
மூலவர் விமானம்

கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலி பீடமும் நந்தி மண்டபமும் உள்ளன. அடுத்து பயட்ச்யாம்பிகை அம்மன் சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது. திருச்சுற்றில் மருதப்பர், அம்பரகத்தூர் பத்ரகாளியம்மன், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. வன்மீகநாதர், 63 நாயன்மார்கள், கணபதி, மகாலிங்கம், நாகநாதர், பிரம்மா, நால்வர், அகத்தியலிங்கம், விநாயகர், வாசுகி நாகம், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், நாகநாதர், மகாலட்சுமி, குபேரலிங்கம், ஈசான்யலிங்கம், ஜுரநிவர்த்திலிங்கம், நவக்கிரகம், பைரவர், விஸ்வநாதர், தண்டபாணி ஆகியோர் உள்ளனர். மூலவர் மகாகாளநாதசுவாமி சன்னதிக்கு வலது புறமாக தியாகராசசுவாமி நீலோத்பாலாம்பாள் சன்னதி உள்ளது. கருவறை கோஷ்டத்தில் மதங்க ரிஷி, விநாயகர், தட்சிணாமூர்த்தி, அடிமுடிகாணா அண்ணல், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

இறைவன், இறைவி

தொகு

இக்கோயிலில் உள்ள இறைவன் காளகண்டேசுவரர்,இறைவி பட்சயாம்பிகை (அச்சம் தவிர்த்த நாயகி).

வழிபட்டோர்

தொகு

அசுரர்களாகிய அம்பன், அம்பாசுரன் ஆகியோரைக் கொன்ற பாவம் தீர காளி தேவி வழிபட்ட திருத்தலம்.

விழாக்கள்

தொகு

இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்திலன்று சோமாயாகப் பெருவிழா நடக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "அருள்மிகு மாகாளநாதர் கோவில்". Archived from the original on 2021-06-15. பார்க்கப்பட்ட நாள் 2022-03-06.

இவற்றையும் பார்க்க

தொகு

வெளி இணைப்பு

தொகு