திருப்பணமூர் கிராமம்
திருப்பணமூர், தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், திருப்பனமூர் ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும். திருப்பணமூரும்-கரந்தையும் இரட்டைக் கிராமங்கள் ஆகும். இது காஞ்சிபுரத்திலிருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கரந்தைக்கு அருகில் திருப்பணமூரில் கல்வெட்டுக்கள் கொண்ட சமணக் கோயில்கள் உள்ளது. இவ்வூரில் பிறந்த அபிநந்தன் எனும் இந்திய வான்படையின் அதிகாரி 2021-இல் வீர் சக்கரம் விருது பெற்றவர். [1]மேலும் அபிநந்தனின் தந்தையும், இந்திய வான்படையின் ஏர் மார்ஷலாக இருந்து ஓய்வு பெற்றவருமான சிம்மக்குடி வர்த்தமான் திருப்பணமூரில் பிறந்தவராவார்.
திருப்பணமூர் கிராமத்தில் சமண சமயத் தீர்த்தங்கரர் புஷ்பதந்தருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் உள்ளது.[2][3] இவ்வூர் சமணத் துறவியும், அறிஞருமான அகலங்கரின் பிறப்பிடமாகும். இவ்வூரில் தர்ம சாகர், சுதர்ம சாகர், கஜபதி சாகர் ஆகிய சமணத் துறவிகள் சல்லேகனை செய்து முக்தி பெற்றனர்.
சிறப்புகள்
தொகு- இது தமிழ்ச் சமணர்கள் அதிகம் வாழும் கிராமம் ஆகும்.
- சமண சமயத் தீர்த்தங்கரர் புஷ்பதந்தருக்கு அர்ப்பணிக்கப்பட்ட திகம்பர சமணக் கோயில் உள்ளது
- கரந்தைக்கும், திருப்பணமூருக்கு நடுவில் சமண குரு அகலங்கரின் (கிபி 720-780) சமாதி உள்ளது.
- சங்கக் கால நூலான நன்னூலை இயற்றிய பவணந்தி பிறந்த ஊர் ஆகும்.
- வீர் சக்கரம் விருது பெற்ற, இந்திய வான்படையில் குரூப் கேப்டனாக பணியாற்றும் அபிநந்தன் வர்த்தமான் பிறந்த ஊராகும்.