தன்னார்வம்
தன்னார்வம் (Self-interest) என்பது எவரதும் அல்லது எந்த ஒரு அமைப்பினதும் அதிகாரத்திற்கோ அல்லது கட்டளைக்கோ அடிப்பணியாது, தனக்குள் ஏற்படும் ஓர் ஆர்வத்தின் வெளிப்பாடாகத் தோற்றம்பெறும் உளவியல் சார்ந்த வெளிப்பாடாகும். தன்னார்வம் என்பது எப்போதும் அடுத்தவரின் கருத்துத்திணிப்பையோ, அடுத்தவரின் நோக்கத்தை ஈடுசெய்யும் முகமாகவோ அமைவதில்லை. இது உளவியல் சார்ந்த வெளிப்பாடு என்பதால், ஆர்வம் என்பது அவரவர் ஆள்மனதில் இருந்தே தோற்றம் பெறுகிறது.[1][2][3]
இந்த ஆர்வம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறைசார்ந்து ஏற்படுகிறது. உலகில் மாபெரும் வெற்றியாளர்கள், புரட்சியாளர்கள், சாதனையாளர்கள் போன்றோரின் வெற்றிகளுக்கும் திருப்புமுனைகளுக்கும் அவரவரது ஆர்வம் கொண்ட துறை மீதான செயல்பாடுகளே காரணமாகியுள்ளன; உலக வரலாற்றில் சான்றுகளாகவும் உள்ளன. எவருக்கு எந்தத் துறையில் ஆர்வம் ஏற்படுகிறதோ, அந்தத்துறையில் தனது முன்னெடுப்புகளைத் தொடரும் போது வெற்றிகள் கிடைக்கின்றன. வெற்றிகள் சாதனைகளாகவும் பரிணமிப்பவைகளும் உள்ளன.
தன்னார்வம் என்பது வேலையற்று வெறுமனே இருப்பவருக்கும் ஏற்படும், மணித்துளிக்கு பல்லாயிம் டொலர்களை ஈட்டுவோருக்கும் ஏற்படும். உளவியல் ரீதியாக ஏற்படும் இந்த ஆரவ மிகுதியால், பலர் தமது கடமைகளையும், பொறுப்புக்களையும் மறந்த நிலையில் ஈடுபடுவதும் உண்டு. ஆனால் இந்த ஆர்வம், எப்போது அடுத்தவரின் கருத்துத்திணிப்புக்காக அல்லது அடுத்தவர் நோக்கத்தினை ஈடுசெய்யும் முகமாக, செயல்படிய வேண்டிய கட்டாயம் அல்லது நிர்பந்தம் ஏற்படுகிறதோ அங்கே அற்றுப்போகிறது. அவ்வாறான இடத்தில் முழுமையான ஆர்வத்துடன் செயல்படும் ஒருவருக்கான மனநிலை சிதைந்தும் போவதற்கும் வாய்ப்புள்ளது. மனநிலை சிதைந்த நிலையில் எந்த ஒருவரும் தன்னார்வப் பணியை தொடரமுடியாது. அவ்வாறு தொடர்ந்தாலும் அது தன்னார்வப் பணியாகவும் இருக்காது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Barbalet, Jack (November 2013). "Self-Interest in Chinese Discourse and Practice: Temporal Distinctions of Self". The Sociological Review 61 (4): 649–666. doi:10.1111/1467-954X.12080.
- ↑ Pines, Yuri (16 November 2018). "Legalism in Chinese Philosophy". The Stanford Encyclopedia of Philosophy. Metaphysics Research Lab, Stanford University. Archived from the original on 26 October 2020.
- ↑ Goldin, Paul R. (November 2001). "Han Fei's Doctrine of Self-interest". Asian Philosophy 11 (3): 151–159. doi:10.1080/09552360120116900. https://archive.org/details/sim_asian-philosophy_2001-11_11_3/page/n18.