சோமேசுவரி ஆறு

வங்காளதேசத்தில் ஒரு நதி

சோமேசுவரி ஆறு (Someshwari River) இந்திய மாநிலமான மேகாலயாவில் காரோ மலையிலும் வங்காளதேச நாட்டின் நேத்ரோகோனா மாவட்டத்திலும் பாய்கின்ற ஒரு பெரிய நதியாகும். சிம்சாங் ஆறு என்றும் அழைக்கப்படுகின்ற இது காரோ மலையை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது.

வங்காள தேசத்தின் நேத்ரோகோனா மாவட்டத்தில் சோமேசுவரி ஆறு

வங்காளதேசம்

தொகு

வங்காளதேசத்தில் சோமேசுவரி ஆறு சுசாங்-துர்காபூர் துணை மாவட்டம் மற்றும் நேத்ரோகோனா மாவட்டத்தின் பிற பகுதிகள் வழியாக காங்சா நதியில் பாய்கிறது. ஆற்றின் ஒரு கிளை கல்மகண்டாவை நோக்கிப் பாய்ந்து பாலியா நதியைச் சந்திக்கிறது. ஆற்றின் மற்றொரு கிளையானது சுனம்கஞ்ச் மாவட்டத்தின் ஆவோர் பகுதிகளில் பயணித்து சுர்மா ஆற்றில் பாய்கிறது.[1] வங்காளதேசின் எல்லை தாண்டிய ஆறுகளில் சோமேசுவரி ஆறும் ஒன்றாகும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Map of Sunamganj District". Banglapedia. Asiatic Society of Bangladesh. Archived from the original on 2007-12-12. பார்க்கப்பட்ட நாள் 2007-12-02.
  2. Sarkar, Sanjay (2012). "Netrokona District". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோமேசுவரி_ஆறு&oldid=4143097" இலிருந்து மீள்விக்கப்பட்டது