சேத் திருவிழா
சேத் திருவிழா (Sed festival) பண்டைய எகிப்திய பார்வோனின் 30 ஆண்டு ஆட்சிக் கால நிறைவிற்காகவும், பின்னர் ஒவ்வொரு 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் மன்னரின் ஆட்சிக் காலத்தைப் போற்றும் வகையிலும், மன்னருக்கு நல்ல உடல் நலத்தையும் வேண்டியும் அமூன் மற்றும் இரா கடவுளர்களுக்கு படையல் விருந்து மற்றும் ஊர்வலத்துடன் சிறப்பிக்க கொண்டாடப்பட்டது.[1] [2] பண்டைய எகிப்தியர்களின் ஓநாய்க் கடவுளான சேத் பெயரால் இத்திருவிழா பெயர் பெற்றது.[3] [4]
எகிப்தின் முதல் வம்ச மன்னர் டென்னின் ஆட்சிக் காலம் முதல் சேத் திருவிழா கொண்டாடப்பட்டது. [5]
சேத் திருவிழாவின் போது அமூன்-இரா கடவுளர்களுக்கு சடங்குகளுடன் பூஜைகள் செய்வதுடன், ஊர்வலமும் நடத்தப்பட்டது. புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட பதினெட்டாம் வம்ச பார்வோன் மூன்றாம் அமென்கோதேப் மற்றும் இராணி ஆட்செப்சுட்டு ஆகியோர் சேத் திருவிழாவை சிறப்புடன் கொண்டாடினர்.[6]
மூன்றாம் அமென்கோதேப்பிற்கு ஆட்சிக்கு வந்த அக்கெனதென் மற்றும் அவரின் மனைவி நெஃபர்டீட்டீ அமூன் -இரா கடவுளருக்கு பதிலாக, அதின் எனும் புதிய் கடவுளுக்கு சேத் திருவிழாவின் போது பூசைகளும், சடங்குகளும் செய்தனர்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Heb-Sed, Egyptian feast
- ↑ The Sed-festival: Renewal of the kings Rule and Health
- ↑ Shaw, Ian. Exploring Ancient Egypt. Oxford University Press. 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-511678-X. p. 53
- ↑ Kamil, Jill (1996). The Ancient Egyptians: Life in the Old Kingdom. American Univ in Cairo Press. p. 47. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-977-424-392-9.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - ↑ Wilkinson, Toby A. H. Early Dynastic Egypt. Routledge, 1999. p. 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-203-20421-2.
- ↑ Breasted, James Henry, Ancient Records of Egypt: Historical Documents from the Earliest Times to the Persian Conquest, The University of Chicago Press, 1907, pp. 116–117.
மேலும் படிக்க
தொகு- Hornung, Erik; Staehelin, Elisabeth (2006). Neue Studien Zum Sedfest. Schwabe. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-7965-2287-1.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் சேத் திருவிழா தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.