செபு அரசகம்
செபு அரசகம் (Rajahnate of Cebu, செபு மொழி: கரடியஹன் ச சுக்போ; மலாய்: கெர்ஜான் சுக்போ) ஸ்பானியர்கள் வெற்றி கொள்வதற்கு முந்தைய பிலிப்பீன்சு மாநிலமாகும். சுமாத்ராவை வெற்றி கொண்ட சோழ வம்சாவளியைச் சார்ந்த ஸ்ரீ லுமாய் அல்லது இளவரசர் லுமயாவால் இந்த அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டது.[1][2][3]
செபு அரசகம் Karadyaan sa Sugbo Kerajaan Sugbo | |||||||
---|---|---|---|---|---|---|---|
1450–1565 | |||||||
நிலை | மன்னர் ஆட்சி | ||||||
தலைநகரம் | சிங்க பலா / சுக்பு | ||||||
பேசப்படும் மொழிகள் | பழைய மலாய், பழைய செபு | ||||||
சமயம் | இந்து மதம், புத்த மதம் மற்றும் இயற்கை வழிபாடு இவற்றின் கலவை | ||||||
அரசாங்கம் | மன்னராட்சி | ||||||
ராஜா | |||||||
• 1497 - 1565 | ஃபெலிப்பி ராஜா (கடைசி) | ||||||
வரலாறு | |||||||
• தொடக்கம் | 1450 | ||||||
• செபு ஒப்பந்தம் (1565) ஸ்பெயின் வெற்றியைத் தொடர்ந்து | 1565 | ||||||
| |||||||
தற்போதைய பகுதிகள் | பிலிப்பீன்சு |
மகாராஜாவால் துணைப்படைகளுக்கான ஒரு தளத்தை விரிவாக்க அனுப்பப்பட்ட அவன் தனக்கென்று ஒரு சுதந்திர அரசை அமைத்துக் கொண்டான்.
சுருக்கம்
தொகுவிசயன் குலவரலாற்றின்படி, ஸ்ரீ லுமாய் சுமாத்ராவிலிருந்து விசயாஸில் குடியேறிய சேர்ந்த மலாய் தமிழ் கலப்பினத்தவன். அவனுக்கு பல மகன்கள் உண்டு. செபுவின் தெற்குப் பகுதியில் இருக்கும் தற்போதைய சார்சர் மற்றும் சண்டாண்டர் பகுதிகளை உள்ளடக்கிய சையலோ பிராந்தியத்தை ஸ்ரீ லுமாயின் மகன்களில் ஒருவனாகிய ஸ்ரீ அல்ஹோ ஆண்டுவந்தான். தற்போதைய கன்சோலேசியன், லிலொயன், கம்போஸ்டெலா, டன, கேர்மென் பண்ட்யான் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய நஹலின் அரசாங்கத்தை ஸ்ரீ உகோப் ஆண்டுவந்தான்.
குறிப்பு
தொகு- ↑ Valeros, Maria Eleanor E. (September 13, 2009). "The Aginid". Philstar.com (in ஆங்கிலம்).
- ↑ SONG, MING, AND OTHER CHINESE SOURCES ON PHILIPPINES-CHINA RELATIONS By Carmelea Ang See. Page 74.
- ↑ Santarita, J. B. (2018). Panyupayana: The Emergence of Hindu Polities in the Pre-Islamic Philippines. Cultural and Civilisational Links Between India and Southeast Asia, 93–105.