சுசந்திகா ஜயசிங்க
சுசந்திகா ஜயசிங்க (பிறப்பு டிசம்பர் 17, 1975), இலங்கையைச் சேர்ந்த ஓர் ஓட்ட வீராங்கனை ஆவார். 100 மற்றும் 200 மீட்டர் குறுந்தூரப் போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றவர். 2000 ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார், ஆரம்பத்தில் இவரிற்கு மூன்றாம் இடமே கிடைத்தது எனினும் தங்கப்பதக்கம் வென்ற மரியன் ஜோன்ஸ் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியமையால் அவரின் பதக்கம் பறிக்கப்பட்டது இதையடுத்து சுசந்திகாவிற்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.[1] 1948 இன் பின் ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஒரே இலங்கையர் இவராவார்.
பதக்க சாதனைகள் | ||
---|---|---|
சுசந்திகா ஜயசிங்க | ||
நாடு இலங்கை | ||
பெண் ஓட்ட வீராங்கனை | ||
ஒலிம்பிக் போட்டிகள் | ||
சிட்னி 2000 | 200 மீ | |
உலகத் தடகளப் போட்டிகள் | ||
ஏதன்ஸ் 1997 | 200 மீ | |
ஓசாகா 2007 | 200 மீ |
15வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், 2006
தொகுடோகாவில் நடைபெற்ற 15வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 100மீ ஓட்டப் பந்தயத்தில் சுசந்திகா வெள்ளிப் பதக்கம், 200மீ பந்தயத்தில் வெண்கலப்பதக்கமும் பெற்றார்.
உலக தடகளப் போட்டிகள், 2007
தொகுஇவர் ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற உலக தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் 22.63 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.[2]
தனிப்பட்ட சாதனைகள்
தொகுதேதி | நிகழ்வு | இடம் | நேரம் |
---|---|---|---|
செப்டம்பர் 9, 2000 | 100மீ | யொகொஹாமா, ஜப்பான் | 11.04 |
செப்டம்பர் 28, 2000 | 200மீ | சிட்னி, ஆஸ்திரேலியா | 22.28 |
சாதனைகள்
தொகுஆண்டு | போட்டி | இடம் | முடிவு | நிகழ்வு |
---|---|---|---|---|
1994 | ஆசிய விளையாட்டுக்கள் | 2வது | 200மீ | |
1997 | உலகத் தடகளப் போட்டிகள் | ஏதன்ஸ், கிறீஸ் | 2வது | 200மீ |
1999 | IAAF Grand Prix Final | மியூனிச், ஜேர்மனி | 8வது | 200மீ |
2000 | 2000 ஒலிம்பிக் போட்டிகள் | சிட்னி, ஆஸ்திரேலியா | 3வது | 200மீ |
2001 | உலக உள்ளக தடகளப் போட்டிகள் | லிஸ்பன், போர்த்துக்கல் | 4வது | 200மீ |
2002 | IAAF உலகக் கிண்ணம் | ம��ட்ரிட், ஸ்பெயின் | 3வது | 100மீ |
2002 | ஆசியப் போட்டிகள் | கொழும்பு, இலங்கை | 1வது | 100மீ |
2002 | பொதுநலவாய விளையாட்டுக்கள் | மான்செஸ்டர், பிரித்தானியா | 4வது | 100மீ |
2002 | IAAF உலகக் கிண்ணம் | மாட்ரிட், ஸ்பெயின் | 4வது | 200மீ |
2002 | ஆசிய விளையாட்டுப் போட்டிகள் | கொழும்பு, இலங்கை | 1வது | 200மீ |
2006 | ஆசியப் போட்டிகள் | டோஹா, கட்டார் | 2வது | 100மீ |
2006 | ஆசியப் போட்டிகள் | டோஹா, கட்டார் | 3வது | 200மீ |
2007 | ஆசியப் போட்டிகள் | அம்மான், ஜோர்தான் | 1வது | 100மீ |
2007 | ஆசியப் போட்டிகள் | அம்மான், ஜோர்டான் | 1வது | 200மீ |
2007 | IAAF உலகத் தடகளப் போட்டிகள் | ஒசாகா, ஜப்பான் | 3வது | 200மீ |