சிவா சின்னப்பொடி
சிவா சின்னப்பொடி (பிறப்பு: டிசம்பர் 12, 1955) ஈழத்தின் மூத்த ஊடகவியலாளரும் எழுத்தாளரும் ஆவார்.
சிவா சின்னப்பொடி | |
---|---|
பிறப்பு | சிவநேசமுர்த்தி டிசம்பர் 12, 1955 வல்லிபுரம் |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஊடகவியலாளர் ,ஈழத்து எழுத்தாளர் |
பெற்றோர் | சின்னப்பொடி-இலட்சுமி |
வாழ்க்கைச் சுருக்கம்
தொகுவடமராட்சியில் வல்லிபுரம் என்ற கிராமத்தில் சின்னப்பொடி-இலட்சுமி ஆகியோருக்கு மகனாகப் பிறந்த இவரது இயற்பெயர் சிவநேசமுர்த்தி. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய தனது தந்தையின் நினைவாகத் தனது பெயருடன் அவரது பெயரை இணைத்துச் சிவா சின்னப்பொடி என்று குறிப்பிடுகிறார்.
1970களில் எழுத்துலகில் காலடி வைத்த இவர் சிங்கைத் திவாகரன் என்ற பெயரில் ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளை இலங்கையில் வெளிவந்த பத்திரிகைகளில் எழுதியுள்ளார். 1975 முதல் வானொலி, பத்திரிகை, சஞ்சிகை என்று பல துறைகளில் பணியாற்றினார். 1983 இல் ஈழப் போராளிகளால் முதன் முதலில் உருவாக்கப்பட்ட தமிழீத்தின் குரல் வானொலியின் பொறுப்பாளராக, ஒலிபரப்பாளராக 1985 வரை பணியாற்றினார். 1990 இல் பிரான்சுக்கு புலம் பெயர்ந்த பின்னர் ஊடகத்துறை கல்வியை கற்றதுடன் ஈழமுரசு, தாய்நிலம் ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகவும், ரிரிஎன் தொலைக்காட்சியின் முதன்மை செய்தி ஆசிரியராகவும் இருந்தார்.
2012-2015 வரை ஜிரிவி தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய இவர் பல தொடர்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நினைவழியா வடுக்கள் என்ற தன் வரலாற்று நூல் தற்போது விடியல் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது