சர்மிளா பிஸ்வாஸ்
சார்மிளா பிசுவாசு (Sharmila Biswas) என்ற இவர் ஓர் குறிப்பிடத்தக்க இந்திய பாரம்பரிய நடனக் கலைஞரும் மற்றும் ஒடிசி நடனபயிற்சியாளரும் ஆவார். இவர், குரு கேளுச்சரண மகோபாத்திராவின் சீடராவார். 1995 ஆம் ஆண்டில், கொல்கத்தாவில் 'ஒடிசி விசன் அண்ட் மூவ்மென்ட் செண்டர்' என்ற நிருவனத்தை நிறுவினார். அங்கு இவர் கலை இயக்குநராக இருக்கிறார். இந்நிறுவனம் நடனக்களைப் பற்றிய தகவல்கள் கொண்ட தொகுப்பு மையத்தையும் நடத்துகிறது.
சார்மிளா பிசுவாசு | |
---|---|
பிறப்பு | கொல்கத்தா, இந்தியா |
பணி | பாரம்பரிய நடனக் கலைஞர், நடன இயக்குநர். |
வலைத்தளம் | |
sharmilabiswas |
2012 ஆம் ஆண்டில், சார்மிளா பிசுவாசுக்கு இந்திய சங்கீத நாடக அகாதமியால் இவருக்கு சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டது. இந்த அமைப்பு, இசை, நடனம் மற்றும் நாடகத்திற்கான தேசிய அகாதமியாகும்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுசார்மிளா பிசுவாசு இந்தியாவிலுள்ள கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தார். அங்கு இவர் தனது எட்டு வயதிலிருந்தே நடனம் கற்கத் தொடங்கினார். இவருக்கு பதினாறு வயதாக இருந்தபோது, முரளிதரன் மசியின் கீழ் ஒடிசி நடனத்தில் பயிற்சியைத் தொடங்கினார். அதன் பின்னர் கேளுச்சரண மகோபாத்ராவிடம் தனது பயிற்சி பெற்றார். [1]
இதனையடுத்து, கலாநிதி நாராயணனிடமிருந்து அபிநயத்தைக் கற்றுக்கொண்டார். [2]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுசுகாதார மேலாண்மையில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவராக இருக்கும் சுவபன் குமார் பிசுவாசை, சார்மிளா 1987 இல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் தற்போது கொல்கத்தாவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சௌமிக் பிசுவாசு என்ற ஒரு மகன் உள்ளார். [1]
தொழில்
தொகுபல ஆண்டுகளாக, பிசுவாசு எலிபண்டா, கசுரகோ நடன விழா மற்றும் கோனார்க் நடன விழாவில் பங்கு கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். மேலும், இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா, செருமனி, உருசியா, துபாய் மற்றும் வங்காள தேசம் ஆகிய வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து கலை விழாக்களில் பங்கேற்றுள்ளார். தற்போது, இவர் பாரம்பரிய ஒடிசி நடனம் மற்றும் இவரது சோதனை நடன படைப்புகளை செய்து வருகிறார். [2]
இவர், ஒடிசாவின் கோயில் நடனக் கலைஞர்கள் நிகழ்த்திய பண்டைய மகரி நடனம் குறித்தும் விரிவான ஆராய்ச்சி செய்துள்ளார். [2] 1995 ஆம் ஆண்டில், கொல்கத்தாவில் ஒடிசி விசன் அண்ட் மூவ்மெண்ட் செண்டர் என்ற நிறுவனத்தை (ஓவிஎம்) நிறுவினார். அங்கு கலை இயக்குநராக உள்ளார். மேலும் இளம் நடனக் கலைஞர்களுக்கு பயிற்சி அளிக்கிறார். இந்நிறுவனம் நடனக்களைப் பற்றிய தகவல்கள் கொண்ட தொகுப்பு மையத்தையும் நடத்துகிறது.
இவர், 2009 ஆம் ஆண்டில், கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் பாரம்பரிய நடனங்களின் ஆண்டு விழாவான பூர்வ தாராவைத் தொடங்கினார். [3]
விருதுகள்
தொகுஇந்தியாவின், புரியின் தேவதாசி முறையை அடிப்படையாகக் கொண்ட சம்பூர்ணா என்கிற இவரது நடன தயாரிப்புக்காக அ��சாங்கத்தின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் "சிறந்த நடன விருது" இவருக்கு வழங்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டில், மேற்கு வங்காள அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையிலிருந்து 1998 ஆம் ஆண்டில் சிறந்த நடனத்திற்கான உதய் சங்கர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. [2] 2010 இல், பிசுவாசுக்கு மகாரி விருதுகள் வழங்கப்பட்டன. 2012 ஆம் ஆண்டில், இசைக் கலைஞர்களுக்கான மிக உயர்ந்த விருதான சங்கீத நாடக அகாதமி விருதை, இந்தியாவின் இசை, நடனம் மற்றும் நாடகத்திற்கான தேசிய அகாதமியான சங்கீத நாடக அகாதமி இவருக்கு வழங்கியது. [4] [5]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "Rhythms of life". The Telegraph. 23 April 2005. http://www.telegraphindia.com/1050423/asp/weekend/story_4631630.asp. பார்த்த நாள்: 28 May 2013.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Katha Kavya Abhinaya". Sangeet Natak Akademi. 2011. Archived from the original on 27 September 2013. பார்க்கப்பட்ட நாள் 28 May 2013.
- ↑ "East is most". The Hindu. 29 October 2009. http://www.thehindu.com/features/friday-review/dance/east-is-most/article40407.ece. பார்த்த நாள்: 28 May 2013.
- ↑ "Sangeet Natak Akademi Fellowships and Akademi Awards 2012" (PDF). Press Information Bureau, Govt of India. பார்க்கப்பட்ட நாள் 28 May 2012.
- ↑ "SNA: List of Akademi Awardees". சங்கீத நாடக அகாதமி Official website. Archived from the original on 2015-05-30.