கோத்தா தாருல் எசான்
கோத்தா தாருல் எசான் (மலாய்: Kota Darul Ehsan; ஆங்கிலம்: Kota Darul Ehsan; சீனம்: 雪兰莪牌楼) என்பது கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத்திற்கும் மலேசிய மாநிலமான சிலாங்கூர் மாநிலத்திற்கும் இடையே மலேசிய கூட்டரசு நெடுஞ்சாலையில் எல்லையைக் குறிக்கும் வளைவுகளின் அமைப்பைக் குறிப்பிடுவது ஆகும்.[1]
கோத்தா தாருல் எசான் Kota Darul Ehsan | |
---|---|
2023-இல் கோத்தா தாருல் எசான் வளைவு | |
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | மூரிஷ் கட்டிடக்கலை |
இடம் | மலேசிய கூட்டரசு சாலை 2 கூட்டரசு சாலை |
ஆள்கூற்று | 3°6′44.2″N 101°39′23.65″E / 3.112278°N 101.6565694°E |
கட்டுமான ஆரம்பம் | 1979 |
நிறைவுற்றது | 1981 |
மலேசிய கூட்டரசு நெடுஞ்சாலை 2-இல் அமைக்கப்பட்டுள்ள இந்த வளைவு மலேசியாவின் மிகப்பெரிய வளைவு ஆகும்.
வரலாறு
தொகு1 பிப்ரவரி 1974-இல், கோலாலம்பூர் மாநகரை ஒரு கூட்டரசுப் பிரதேசமாக அமைப்பதற்காக, சிலாங்கூரில் இருந்து மத்திய அரசுக்கு கோலாலம்பூர் மாநகரை மாற்றும் உடன்படிக்கையில் கையெழுத்தானது. அதன் நினைவாக கோலாலம்பூர் - சிலாங்கூர் எல்லைப் பகுதியில்; கோலாலம்பூர் - கிள்ளான் நெடுஞ்சாலையில், 1981-இல், கோத்தா தாருல் எசான் (Kota Darul Ehsan) எனும் வளைவு அமைக்கப்பட்டது.[2]
மலேசிய மத்திய அரசுக்கு சிலாங்கூர் மாநிலத்தின் தியாக உணர்வை இந்த வளைவு குறிக்கிறது. இந்த வளைவு 1981-இல் கட்டி முடிக்கப்பட்டது. 3 சனவரி 1982 அன்று சிலாங்கூரின் மறைந்த சுல்தான் சலாவுதீன் அப்துல் அசீஸ் அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.[3]
கட்டிடக்கலை
தொகுவளைவின் வடிவமைப்பு மூரிஷ் கட்டிடக்கலையின் தாக்கங்களைக் கொண்டது.மேலும் கோலாலம்பூர் தொடருந்து நிலையத்துடன் இதே போன்ற வடிவமைப்பைப் பகிர்ந்து கொள்கிறது. கோத்தா தாருல் எசான் வளைவில் ��ள்ள குவிமாடங்களில் இதைக் காணலாம்.
கோத்தா தாருல் எசான் வளைவின் ஒவ்வொரு புறத்திலும் இரண்டு பீரங்கிகளைக் கொண்டுள்ளது.
காட்சியகம்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Portal Rasmi PDT Petaling Sultan Sharafuddin rasmi pemuliharaan Kota Darul Ehsan - A landmark that is a symbol of Selangor's sovereignty is Kota Darul Ehsan". www.selangor.gov.my. பார்க்கப்பட்ட நாள் 15 July 2024.
- ↑ The Nation Mourns The Passing Of A Great Ruler பரணிடப்பட்டது 30 ஏப்பிரல் 2009 at the வந்தவழி இயந்திரம் 24 November 2001, MySinchew.com
- ↑ "Kota Darul Ehsan – Selangorkini". பார்க்கப்பட்ட நாள் 15 July 2024.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Kota Darul Ehsan தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.