கொங்கிராடு
கொங்கிராடு (மொங்கோலியம்: Хонгирад) என்பது மங்கோலியப் பழங்குடியினரில் ஒரு பிரிவு ஆகும். இவர்களது பகுதியானது சீனாவின் உள் மங்கோலியா மாகாணத்தின் ஹுலுன் ஏரி மற்றும் மங்கோலியாவின் கால்கா நதி ஆகியவற்றுக்கு அருகில் அமைந்திருந்தது.[1][2] இங்கிருந்தபடி இவர்கள் ஆளும் வட சீன அரசுகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தனர். பல்வேறு கொங்கிராடு இனங்கள் ஒரே தலைவரின் கீழ் ஒன்றிணையாமலேயே இருந்தன. இதனால் இவர்களால் ஒரு இராணுவ சக்தியாக உருவாக முடியவில்லை.
குறிப்புகள்
தொகு- ↑ Хонгирад аймаг mongol.undesten.mn பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் (Mongolian)
- ↑ M. Sanjdorj, History of the Mongolian People's Republic, Volume I, 1966