கைல் மில்ஸ்
கைல் டேவிட் மில்ஸ் (Kyle David Mills, பிறப்பு: மார்ச்சு 15, 1979) நியூசிலாந்து துடுப்பாட்ட அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஆவார். இவர் நியூசிலாந்து அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடியுள்ளார். வலதுகை விரைவு-மித பந்துவீச்சுசாளரான இவர் வலதுகை துடுப்பாளரும் ஆவார். இவர் இறுதிக்கட்ட ஓவர்களில் விரைவாக ஓட்டங்கள் சேர்ப்பதில் வல்லவராக இருந்தார். அக்டோபர், 2009 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.[1] இவர் ஆக்லாந்து மாகாணத் துடுப்பாட்ட அணிக்காகவும், இந்தியன் பிரீமியர் லீக் தொடர்களில் கிங்சு இலெவன் பஞ்சாபு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார்.
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | கைல் டேவிட் மில்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 1.93 m (6 அடி 4 அங்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை விரைவு-மிதம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | சகலதுறை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 227) | சூன் 10 2004 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | மார்ச்சு 18 2009 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 123) | ஏப்ரல் 15 2001 எ. பாக்கிஸ்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | நவம்பர் 9 2009 எ. பாக்கிஸ்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1998–இன்று | ஆக்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2001 | லின்கொர்செயா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், நவம்பர் 14 2009 |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுகைல் டேவிட் மில்ஸ் மார்ச்சு 15, 1979 இல் ஓக்லாந்தில் பிறந்தார்.[2] இவர் கை தஹு மரபைச் சேர்ந்தவர் ஆவார்.[3] இவர் முர்வேலிலுள்ள துவக்கப்பள்ளியில் கல்வி பயின்றார். மேலும் மக்லியன்ஸ் கல்லூரியில் பட்டம் பயின்றார்.
சர்வதேச போட்டிகள்
தொகுதேர்வுத் துடுப்பாட்டம்
தொகுஇவர் 2004 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. சூன் 10 இல் நாட்டின்ஹாமில் நடைபெற்ற இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.
இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 4 பந்துகளில் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஹோகார்டின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 6 ஓவர்கள் வீசி 31 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார். இதில் 2 ஓவர்களை மெய்டனாக வீசினார். இவரின் பதுவீச்சு சராசரி 5.16 ஆகும்.இரண்டாவது ஆட்டப் பகுதியில் 21 பந்துகளில் 8 ஓட்டங்கள் எடுத்து கிலெசின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப்பகுதியில் இவருக்கு பந்துவீச வாய்ப்பு வழங்கப்படவில்லை.இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 4 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[4] மார்ச் 18, 2009 இல் இந்தியத் துடுப்பாட்ட அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிய தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். இதன் முதல் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் இவர் சந்தித்த முதல் பந்திலேயே முனாஃப் படேலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 22 ஓவர்கள் வீசி 98 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார். இதில் 4 ஓவர்களை மெய்டனாக வீசி ஹர்பஜன் சிங்கின்இலக்கினைக் கைப்பற்றினார். இவரின் பதுவீச்சு சராசரி 4.45 ஆகும்.இரண்டாவது ஆட்டப் பகுதியில் 2 ஓவர்கள் வீசி 21 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி 10 இலக்குகள் வித்திதியாசத்தில் வெற்றி பெற்றது.[5]
ஏப்ரல் 15, 2001 இல் சார்ஜா அமீரகத்தில் நடைபெற்ற ஏ ஆர் ஒய் கோப்பைக்கான தொடரில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[6]
பெப்ரவரி, 2007 ஆம் ஆண்டில் ஆத்த���ரேலிய தொடரில் காயம் ஏற்பட்டதனால் இவர் 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் இருந்து விலகினார்.பின் நியூசிலாந்துன் அணி 2007 டிசம்பர் மாதத்தில் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .இந்தத் தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.
சான்றுகள்
தொகு- ↑ "Mills claims number-one bowling spot". ICC. 6 அக்டோபர் 2009. Archived from the original on 24 சூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 7 அக்டோபர் 2009.
- ↑ "Kyle Mills". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 28 March 2015.
- ↑ Harriman, Rewa (28 March 2015). "Strong Ngāi Tahu connection in Black Caps team". Māori Television News. http://www.maoritelevision.com/news/sport/strong-ngai-tahu-connection-black-caps-team. பார்த்த நாள்: 28 March 2015.
- ↑ "3rd Test, New Zealand tour of England at Nottingham, Jun 10-13 2004 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-24
- ↑ "1st Test, India tour of New Zealand at Hamilton, Mar 18-21 2009 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-24
- ↑ "5th Match (D/N), ARY Gold Cup at Sharjah, Apr 15 2001 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-24
வெளியினைப்புகள்
தொகு- கைல் மில்ஸ் ஈஎஸ் பி என் l
- கைல் மில்ஸ் at New Zealand Cricket Players Association