குர்சரன் தல்வார்
குர்சரன் பிரான் தல்வார் (Gursaran Talwar) இந்தியாவைச் சேர்ந்த தடுப்பூசிகள் மற்றும் நோயெதிர்ப்பு தடுப்புத் துறையில் பணிபுரியும் ஒரு மருத்துவ ஆராய்ச்சியாளர் ஆவார். [1] 1994 ஆம் ஆண்டு ஓர் ஆய்வறிக்கையில், [2] கர்ப்பத்தைத் தடுக்க பெண்களுக்கு தடுப்பூசி போடலாம் என்று இவரது குழு நிரூபித்தது. குர்சரன் பிரசாத் தல்வார் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் (ஆனர்சு), முதுநிலை அறிவியல் (தொழில்நுட்பம்) பட்டங்களை பெற்றார். பாரிசு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். புந்தேல்கண்ட் பல்கலைக்கழகத்தில் 2004 ஆம் ஆண்டு மற்றொரு முனைவர் பட்டத்தைப் பெற்றார். டூபிங்கன், சுடட்கார்ட்டு மற்றும் முனிச்சு ஆகிய இடங்களில் அலெக்சாண்டர் வான் அம்போல்ட்டின் முனைவர் பட்ட மேற்படிப்பு உறுப்பினராக இருந்தார்.
புதுதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் உயிர்வேதியியல் இணைப் பேராசிரியராக குருசரண் (1956) சேர்ந்தார். மேலும் 1983 ஆம் ஆண்டு வரை அங்கேயே பேராசிரியராகவும் தலைவராகவும் பணியாற்றினார். இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான (1972-91) நோய்த்தடுப்பு மருத்துவத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழ்கம்-உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் தலைவராக இருந்தார். தேசிய நோயெதிர்ப்பு அறிவியல் நிறுவனத்தின் (1983-91) நிறுவன இயக்குனராகவும், 1994 ஆம் ஆண்டு வரை ஒரு பேராசிரியராகவும் இருந்தார். புது தில்லியிலுள்ள மரபணு பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்பத்திற்கான பன்னாட்டு மையம், (1994-99), தல்வார் ஆராய்ச்சி அறக்கட்டளையிலும் இவர் பேராசிரியராகப் பணியாற்றினார். பிரான்சு கல்லூரியில் வருகை தரும் பேராசிரியராக, இயான்சு ஆப்கின்சிலும் வருகைதரும் பேராசிரியராகவும், புனே பல்கலைக்கழகத்தின் உயிர் தகவல் மற்றும் உயிரித் தொழில்நுட்ப நிறுவனத்தில் (2005-10) புகழ்பெற்ற ஒரு பேராசிரியராகவும் இருந்தார். [3]
விருதுகள்
தொகு- செவாலியே விருது [1]
- பத்ம பூசன் [4]
- பொன்விழா நினைவுப் பதக்கம் (உயிர் அறிவியல்) [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Mukerjee, Madhusree (1996). "Pushing the Envelope for Vaccines". Scientific American 275 (1): 38–40. doi:10.1038/scientificamerican0796-38. பப்மெட்:8658109. Bibcode: 1996SciAm.275a..38M. https://archive.org/details/sim_scientific-american_1996-07_275_1/page/38.
- ↑ Talwar, G. P.; Singh, Om; Pal, Rahul; Chatterjee, N.; Sahai, P.; Dhall, Kamala; Kaur, Jasvinder; Das, S. K. et al. (1994). "A Vaccine that Prevents Pregnancy in Women". Proceedings of the National Academy of Sciences 91 (18): 8532–6. doi:10.1073/pnas.91.18.8532. பப்மெட்:8078917. Bibcode: 1994PNAS...91.8532T.
- ↑ Aldhous, Peter (1994). "A booster for contraceptive vaccines". Science 266 (5190): 1484–6. doi:10.1126/science.7985014. பப்மெட்:7985014. Bibcode: 1994Sci...266.1484A.
- ↑ "Prof. G. P. Talwar, Former Director, NII". Archived from the original on 21 January 2015. பார்க்கப்பட்ட நாள் 21 January 2015.
- ↑ "INSA". Archived from the original on 21 January 2015. பார்க்கப்பட்ட நாள் 21 January 2015.