கிருஷ்ணா சோப்தி

சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்தி எழுத்தாளர்

கிருஷ்ணா சோப்தி (Krishna Sobti, 18 பெப்ரவரி 1925 – 25 சனவரி 2019) என்பவர் இந்தி மொழி எழுத்தாளர் ஆவார். இவர் 1980 ஆம் ஆண்டில் சாகித்திய அகதெமி விருதினையும்[1][2], 2017 ஆம் ஆண்டின் ஞானபீட விருதினைப் பெற்றார். 1996 ஆம் ஆண்டில் இவர் எழுதிய புதினமான மித்ரோ மராஜனி (Mitro Marajani) மூலம் பரவலான கவனத்தினைப் பெற்றார். புதினம் மட்டுமல்லாது சிறுகதைகள் மற்றும் மொழிபெயர்ப்பு ஆகியவற்றையும் செய்தார். ஹஸ்மத் (Hashmat) எனும் பெயரில் இவர் எழுதிய கட்டுரைகள் பரவலான விமர்சனத்தை உருவாக்கின. 2010 ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷண் விருதினை மறுத்தார்.

கிருஷ்ணா சோப்தி
कृष्णा सोबती
2011 இல் சோப்தி
2011 இல் சோப்தி
பிறப்பு18 பெப்ரவரி 1925 (1925-02-18) (அகவை 99)
குஜராத் நகரம், பஞ்சாப், பிரித்தானிய இந்தியா
இறப்பு25 சனவரி 2019(2019-01-25) (அகவை 93)
புது தில்லி, இந்தியா
தொழில்புனைகதை எழுத்தாளர், கட்டுரையாளர்
தேசியம்இந்தியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • மித்ரோ மராஜனி
  • டார் சே பிச்சூரி (डार से बिछुरी)
  • சுராஜ்முகி அந்தெரெ கே ஆதி (डार से बिछुरी, सूरजमुखी अंधेरे के आदि)
குறிப்பிடத்தக்க விருதுகள்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணா_சோப்தி&oldid=2645279" இலிருந்து மீள்விக்கப்பட்டது