ஒகினவா சண்டை
ஐஸ்பெர்க் நடவடிக்கை (Operation Iceberg) என்று குறிப்பெயரிடப்பட்ட ஒகினவா சண்டை (Battle of Okinawa) யப்பானிய ஒகினவா தீவுகளில் இரண்டாம் உலகப் போரின் பசிபிக் போரின் ஒரு அங்கமாக நடைபெற்ற மிகப்பெரிய ஈருடகச் சண்டையாகும்.[1] 1945 ஆம் ஆண்டின் மார்ச் கடைசி முதல் யூன் மாதம் வரை நடைபெற்றது.
ஒகினவா சண்டை | |||||||
---|---|---|---|---|---|---|---|
2ஆம் உலகப்போர் (பசிபிக் போரின்) பகுதி | |||||||
மார்ச் 26, 1945: ஐக்கிய அமெரிக்க ஈருடகப் படையினர் தரையிரக்கம் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐக்கிய அமெரிக்கா | சப்பான் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
சிமொன் பொலிவர் பக்னோர் † | மிட்சுரு உசிஜிமா † இசமு சோ † |
||||||
பலம் | |||||||
548,000 வீரர், 1,300 கப்பல்கள், ? விமானங்கள் | 100,000 விரர் மற்றும் துணைப்படைகள், ? கப்பல்கள், ? விமானங்கள் |
||||||
இழப்புகள் | |||||||
12,513 கொலை அல்லது காணவில்லை, 38,916 காயம், 33,096 படைத்துறை அல்லாத, 79 கப்பல்கள், 763 விமானங்கள் அழிப்பு | 66,000 கொலை அல்லது காணவில்லை, 17,000 காயம், 7,455 கைது, 16 கப்பல்கள், 3,130 விமானங்கள் அழிப்பு, 75,000-140,000 பொதுமக்கள் கொலை அல்லது காணவில்லை |
இச்சண்டையில் பாவிக்கப்பட்ட துப்பாக்கிச் சூடுகளின் செறிவு, கப்பல்களின் எண்ணிகை, கவச வண்டிகள் போன்றவை காரணமாக இச்சண்டை ஆங்கிலத்தில் டைப்பூன் ஃச்டீல் (Typhoon of Steel; இரும்பு சுறாவளி) யப்பானிய மொழியில் தெற்சுனோ அமே (இரும்பு மழை) என அழைக்கப்பட்டது. சண்டையின் முன்னர் ஒகினவாவில் 435,000 பேர் வசித்தனர் இவர்களில் 75,000 முதல் 140,000 இச்சண்டைகளின் போது கொல்லப்பட்டனர்.[2]
நேச நாடுகள் யப்பான் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையான டவுன்ஃபோல் நடவடிக்கையின் (Operation Downfall) தொடக்கப்புள்ளியாக ஒகினவாவை பயன்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருந்தன. இருப்பின��ம் டவுன்ஃபோல் நடவடிக்கையில் முன்னராக ஒகினவா சண்டையை தொடர்ந்து இரோசிமா, நாகசாகி நகரங்கள் மீதான ஐக்கிய அமெரிக்காவின் அணுகுண்டுத் தாக்குதல், இரசியா யப்பான் மீது போர் பிரகடனப்படுத்தல் போன்ற நிகழ்வுகள் காரணமாக யப்பான் சரணடைந்ததன் காரணமாக இரண்டாம் உலகப்போர் முடிவுற்றது.
மேற்கோள்கள்
தொகு