எம். ஆர். ஆர். வாசு
தமிழ்த் திரைப்பட நடிகர்
எம். ஆர். ஆர். வாசு (M. R. R. Vasu) ஒரு தமிழ் நாடக மற்றும் திரைப்பட நடிகர். எம். ஆர். ராதாவுக்கும் தனலட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார். பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு ராதாரவி என்ற சகோதரனும், ரசியா, ராணி, ரதிகலா என்று மூன்று சகோதரிகளும் உள்ளனர். இவருடைய தந்தையின் இன்னொரு மனைவியான கீதா ராதாவிற்கு பிறந்தவர்கள் நிரோஷா, ராதிகா, மோகன் ராதா ஆவர்.
M. R. R. Vasu எம். ஆர். ஆர். வாசு | |
---|---|
பிறப்பு | எம். ஆர். இராதாகிருஷ்ணன் வாசுதேவன் 29 மே 1942 தமிழ், தமிழ்நாடு |
இறப்பு | 20 மார்ச்சு 1984 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 41)
பணி | மேடை நாடக நடிகர், திரைப்பட நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1962–1984 |
பெற்றோர் | எம். ஆர். ராதா (தந்தை) சரஸ்வதி அம்மாள் (தாய்)[1] |
வாழ்க்கைத் துணை | லலிதா |
பிள்ளைகள் | வாசு விக்ரம் (மகன்)[2] வாசு சதீஷ் (மகன்)[3][4] |
உறவினர்கள் | ராதாரவி (சகோதரர்) ராதிகா (சகோதரி) நிரோஷா (சகோதரி) |
வாசு நாடக கம்பேனி நடத்தி வந்தார். அதில் ராதாரவியும் நடித்திருக்கிறார். என் விழிகளில் என் தந்தை என்ற பெயரில் எம். ஆர். ராதாவினைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
எம்.ஆர்.ஆர்.வாசு நடித்துள்ள திரைப்படங்கள்
தொகு- நாலும் தெரிந்தவன்.
- பட்டிக்காடா பட்டணமா
- சக்கரம்
- அவன்தான் மனிதன்
- தேன் கிண்ணம்
மேற்கோள்கள்
தொகு- ↑ The Hindu. "The Ultimate Bad Guy".
- ↑ தமிழ் நாடக வரலாறு
- ↑ Vikatan Correspondent (9 May 2015). "நடிகர் எம்.ஆர்.ராதா பேரன் நீச்சல் குளத்தில் மூழ்கி பலி!".
- ↑ The Hindu (10 May 2015). "Actor drowns". The Hindu. https://www.thehindu.com/news/cities/chennai/actor-drowns/article7192411.ece.
வெளி இணைப்புகள்
தொகுஎம்.ஆர்.ஆர். வாசு எம்.ஆர்.ராதாவைப் பற்றி எழுதிய புத்தகம் பரணிடப்பட்டது 2009-10-01 at the வந்தவழி இயந்திரம்