எமன் (திரைப்படம்)

எமன் (Yaman (film)) என்பது ஜீவா சங்கர் எழுதி இயக்கிய 2017 ஆண்டைய, இந்திய தமிழ் அரசியல் திரைப்படமாகும். இப்படம் லைக்கா புரொடக்சன்ஸ் மற்றும் விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேசன் ஆகிய நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பாகும். படத்தில் விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ், தியாகராஜன் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர், மேலும் சில்பா மஞ்சுநாத், சங்கிலி முருகன், சார்லி சுவாமிநாதன் ஆகியோரும் பிற பாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1] ஜீவா சங்கர் ஒளிப்பதிவையும் மற்றும் விஜய் ஆண்டனி இசையமைப்பு பணியையும் கூடுதலாக மேற்கொண்டுள்ளனர். இப்படம் 2017 பெப்ரவரி 24 அன்று வெளியானது. திரைப்படம் பெரும் அளவில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, இது ஒரு வெற்றிப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எமன்
சுவரொட்டி
இயக்கம்ஜீவா சங்கர்
தயாரிப்புஏ. சுபாஷ் கரன்
பாத்திமா விஜய் ஆண்டனி
கதைஜீவா சங்கர்
இசைவிஜய் ஆண்டனி
நடிப்புவிஜய் ஆண்டனி
மியா ஜார்ஜ்
தியாகராஜன்
ஒளிப்பதிவுஜீவா சங்கர்
படத்தொகுப்புவீர செந்தில் ராஜ்
கலையகம்லைக்கா புரொடக்சன்ஸ்
விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேசன்
வெளியீடு24 பெப்ரவரி 2017
ஓட்டம்153 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு15 கோடி (US$1.9 மில்லியன்)
மொத்த வருவாய்65.58 கோடி (US$8.2 மில்லியன்)

1980 களில் திருநெல்வேலியில் அரசியல் ஆர்வமுள்ள அறிவுடைநம்பி (விஜய் ஆண்டனி), கலப்பு திருமணம், உள்கட்சி அரசியல் மோதல் காரணமாக வஞ்சகமாக கொல்லப்பட, அதன்பிறகு அவர் மனைவியும் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்கிறார். பிறந்த உடனே பெற்றோரை இழந்ததால், எமன் என்ற பெயருடன் அழைக்கப்படும் தமிழரசனை (விஜய் ஆண்டனி) வளர்க்கிறார் சங்கிலி முருகன் சூழ்நிலையால் தமிழரசன் குற்றம், அரசியல் ஆகியவற்றில் நுழைகிறார். கிடைத்த வாய்ப்புகளை திறமையாக பயன்படுத்தி சூழ்ச்சிகளை வென்று பழிவாங்கும் அரசியல் கதைதான் எமன் திரைப்படம்.

மேற்கோள்கள்

தொகு
  1. "எமன் - திரைவிமர்சனம்". திரை விமர்சனம். வெப்துனியா. 26 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 26 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எமன்_(திரைப்படம்)&oldid=4118761" இலிருந்து மீள்விக்கப்பட்டது