எட்கர் ஆலன் போ

அமெரிக்க எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர் (1809-1849)

எட்கர் ஆலன் போ (Edgar Allan Poe, ஜனவரி 19, 1809 – அக்டோபர் 7, 1849) ஒரு அமெரிக்க எழுத்தாளர், கவிஞர், தொகுப்பாசிரியர் மற்றும் இலக்கிய விமர்சகர். ஆங்கில கற்பனாவாத இயக்கத்தின் (Romantic movement) எழுத்தாளர்களுள் ஒருவரான போ, துப்பறிவுப் புனைவுப் (Detective fiction) பாணியினைக் கண்டுபிடித்தவராகவும் கருதப்படுகிறார். மேலும் அறிபுனை பாணியின் முன்னோடிகளில் ஒருவராகவும் கருதப்படுகிறார். பிரபலமான அமெரிக்க எழுத்தாளர்களுள், எழுத்தின் மூலம் கிட்டிய வருமானத்தை மட்டும் கொண்டு வாழ்க்கையை நடத்த முதலில் முயன்றவர் போ. இதனால் அவர் வறுமையில் வாட நேர்ந்தது.

எட்கர் ஆலன் போ
1848ல் போ
1848ல் போ
பிறப்புஎட்கர் போ
(1809-01-19)சனவரி 19, 1809
பாஸ்டன், அமெரிக்கா
இறப்புஅக்டோபர் 7, 1849(1849-10-07) (அகவை 40)
பால்டிமோர், அமெரிக்கா
தொழில்கவிஞர், எழுத���தாளார், தொகுப்பாசிரியர், இலக்கிய விமர்சகர்
தேசியம்அமெரிக்கர்
வகைதிகில் புனைவு, துப்பறிவுப் புனைவு, குற்றப் புனைவு, நகைச்சுவை, அங்கதம்
இலக்கிய இயக்கம்கற்பனாவாதம்
துணைவர்வர்ஜீனியா கிளெம்
கையொப்பம்

பாஸ்டன் நகரில் பிறந்த போ, இளம் வயதிலேயே தந்தையையும் தாயையும் இழந்தார் (அவரது தந்தை குடும்பத்தைக் கைவிட்ட சிறிது நாட்களிலேயே அவரது தாய் இறந்து விட்டார்). பின்னர் ரிச்மண்ட் நகரின் ஆலன் தம்பதியினர் போவை வளர்த்தனர். வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் படித்த போ, பொருளாதார நெருக்கடியால் கல்லூரிப் படிப்பைக் கைவிட்டார். 1827ல் அவரது முதல் புத்தகமான டாமர்லேனும் பிற கவிதைகளும் வெளியானது. அடுத்த பல ஆண்டுகளுக்கு பல இலக்கியப் பத்திரிக்கைகளில் புத்தக விமர்சனங்களை எழுதினார். 1835ல் வர்ஜீனியா கிளெம் என்னும் பெண்ணை மணந்தார். 1845ல் அவரது தி ரேவன் என்ற கவிதை வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் இவ்வெற்றி போவிற்கு செல்வத்தைத் தேடித் தரவில்லை . 1849ல் போ பால்டிமோர் நகரில் தனது நாற்பதாவது வயதில் மரணமடைந்தார்.

இன்று அமெரிக்க இலக்கியத்தின் பெரும்புள்ளிகளில் ஒருவராக கருதப்படுகிறார் போ. அவரது எழுத்தின் தாக்கம் இலக்கிய உலகில் மட்டுமல்லாமல், அண்டவியல், மறைமொழியியல் (cryptology) போன்ற துறைகளிலும் உணரப்படுகிறது. போவும் அவரது படைப்புகளும் எண்ணற்ற புத்தகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், கவிதைகள் மற்றும் இசைத் தொகுப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. போ வாழ்ந்த பல வீடுகள் அருங்காட்சியகங்களாக மாற்றப்பட்டுள்ளன.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்கர்_ஆலன்_போ&oldid=2917214" இலிருந்து மீள்விக்கப்பட்டது