உமா ராமராவ்

கே. உமா ராமராவ் (K. Uma Rama Rao) (பிறப்பு:1938 சூலை 4 - இறப்பு: 2016 ஆகஸ்ட் 27 ) உமா மகேஸ்வரி என்ற இயற்பெயருடன் பிறந்த இவர் ஓர் இந்திய குச்சிபுடி நடனக் கலைஞரும், நடன இயக்குநரும், ஆராய்ச்சி அறிஞரும், எழுத்தாளரும் மற்றும் நடன ஆசிரியரும் ஆவார்.[1] 1985 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஐதராபாத்தில் நிறுவப்பட்ட இலாஸ்யா பிரியா நடன அமைப்பின் நிறுவனராகவும் மற்றும் இயக்குநராகவும் இருந்தார்.[2]

கே. உமா ராமராவ்
2004இல்
பிறப்புஉமா மகேஸ்வரி
(1938-07-04)4 சூலை 1938
விசாகப்பட்டினம், இந்தியா இந்தியா
விருதுகள்கலா நீராஞ்ஜனம், சிறீ கலா பூர்ணா, பிரதிபா புரஸ்காரம், சங்கீத நாடக அகாதமி விருது.

2003 ஆம் ஆண்டில், குச்சிபுடியில் இவரது பங்கிற்காக சங்கீத நாடக் அகாடமி விருதை இந்தியாவின் இசை, நடனம் மற்றும் நாடகத்திற்கான தேசிய அகாடமி வழங்கியது.[3] இவர் சங்கீத நாடக அகாடமி மூலம் இந்திய அரசின் கலாச்சாரத் துறையால் வழங்கப்பட்ட தேசிய மூத்த சக கூட்டாளர் என்பதையும் பெற்றவராவார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு
 
உமா ராமராவ் தனது ஆரம்ப வாழ்க்கையில்

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒரு 'வாடாடி' குடும்பத்தில் முனைவர் வி. வி. கிருஷ்ண ராவ் மற்றும் சௌபாக்கியம் ஆகியோருக்கு 1938 சூலை 4 ஆம் தேதி "உமா மகேஸ்வரி" என்ற பெயரில் பிறந்தார். இலக்கியம், இசை மற்றும் நடனம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்ட புகழ்பெற்ற அறிஞர்களின் பின்னணியைக் கொண்ட இவரது குடும்பத்தினரால் ஊக்கப்படுத்தப்பட்ட இவர், ஆச்சார்யா பி. வி. நரசிம்மராவ், பத்மசிறீ முனைவர் நடராஜ இராம கிருட்டிணா, பிரம்மசிறீ வேதாந்தம் லட்சுமி நாராயண சாஸ்திரி போன்ற குருக்களிடமிருந்து 5 வயதிலிருந்தே நடனத்தில் பயிற்சி தொடங்கினார். குரு பக்கிரிசுவாமி பிள்ளை மற்றும் குரு சி. ஆர். ஆச்சார்யா ஆகியோரிடம் குச்சிபுடி, பரதநாட்டியம் மற்றும் சடங்கு நடன மரபுகளில் பயிற்சி மேற்கொண்டார். இந்த பண்டைய பாரம்பரிய கலை வடிவங்களின் தத்துவார்த்த மற்றும் நடைமுறை அம்சங்களில் இவர் தேர்ச்சி பெற்றார். இவரது ஆரம்ப ஆண்டுகளில், இவரது சகோதரி சுமதி கௌசலுடன் சேர்ந்து, இவர் தனது குருக்களின் தனிப்பட்ட வழிகாட்டுதலின் கீழ் பல இடங்களில் பல சந்தர்ப்பங்களில் நடனங்களை நிகழ்த்தினார். 1953 மற்றும் 55 காலகட்டங்களில், அப்போதைய சென்னை (மெட்ராஸ்) அரசாங்கத்தால் நடத்தப்பட்ட பாரம்பரிய இசை மற்றும் நடன பாடங்களில் தேர்ச்சி ப��ற்றார். இந்த நடனப் பாரம்பரியத்தை இளைய தலைமுறையினருக்கு அனுப்ப இவருக்கு கற்பித்திருந்த இவரது குருவான முனைவர் நடராஜ இராமகிருட்டிணனின் ஆசீர்வாதங்களுடன் ��னது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார்.

ஐதராபாத்தின் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.

இலாஸ்யா பிரியா நடன நிறுவனம்

தொகு

1985 ஆம் ஆண்டில் ஆந்திராவின் ஐதராபாத்தில் இலாஸ்யா பிரியா என்ற நடன நிறுவனத்தை நிறுவினார். இது குச்சிபுடி மற்றும் பாரத நாட்டியம் ஆகியவற்றின் பாரம்பரிய நடன மரபுகளில் கோட்பாட்டு மற்றும் நடைமுறை அம்சங்களில் பயிற்சியளிக்கிறது. மாநில அரசு மற்றும் பல்கலைக்கழக தேர்வுகளின் பல்வேறு நிலைகளுக்கு அவர்களை தயார்படுத்துகிறது. இலாஸ்யா பிரியா நடனப் பள்ளி இந்திரா காந்தி தேசிய திறந்த பல்கலைக்கழகத்தின் இணைந்த ஒரு ஆய்வு மையமாகும்.[4]

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

தொகு

நடனக் கலை மீதான இவரது அர்ப்பணிப்பு, மற்றும் சேவையை அங்கீகரிக்கும் விதமாக இவருக்கு பல விருதுகளும், கௌரவங்களும் வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் மதிப்புமிக்க ஒரு சில:

ஆந்திரப் பிரதேச அரசு இவருக்கு கலா நீராஞ்சனம் மற்றும் சிறந்த ஆசிரியர் ஆகிய விருதுகளை வழங்கி கௌரவித்தது.
வட அமெரிக்காவின் புனித அன்னமாச்சார்யா திட்டத்திலிருந்து (எஸ்.பி.என்.ஏ)] சிறீகலா பூர்ணா விருது வழங்கப்பட்டது.[5]
ஐதராபாத்தின் பொட்டி ஸ்ரீராமுலு தெலுங்கு பல்கலைக்கழகம் பிரதிபா புரஸ்கார் என்பதை வழங்கியது.
இந்திய குடியரசுத் தலைவர் கலாமின் கைகளிலிருந்து 2004 அக்டோபர் 26 அன்று புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் சங்கீத நாடக அகாதமி விருதினை பெற்றார்.[6]

குறிப்புகள்

தொகு
  1. Kothari, p. 11
  2. Profile: K Uma Rama Rao Narthaki website.
  3. "SNA: List of Akademi Awardees". சங்கீத நாடக அகாதமி Official website. Archived from the original on 17 February 2012.
  4. "IGNOU Study Centers". Archived from the original on 2010-08-08. பார்க்கப்பட்ட நாள் 2020-02-08.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-12-28. பார்க்கப்பட்ட நாள் 2020-02-08.
  6. Sangeet Natak Acedemy பரணிடப்பட்டது 2005-01-26 at the வந்தவழி இயந்திரம் Hindu News

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Uma Rama Rao
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமா_ராமராவ்&oldid=4169357" இலிருந்து மீள்விக்கப்பட்டது