உத்யோக பருவம்

உத்யோக பருவம் (சமக்கிருதம்: उद्योग पर्व) மஹாபாரதத்தின், 18 பருவங்களுள் ஐந்தாவது பருவமாகும். இதில் கிருஷ்ணனிடம் துரியோதனனும் அர்ஜூனனும் உதவி கோருவது. கௌரவர்கள் சார்பாக சஞ்சயன் மற்றும் பாண்டவர் பொருட்டு ஸ்ரீகிருஷ்ணர் சமாதானத் தூது செல்வது, படை திரட்டுவது ஆகியன அடங்கும்.

பிரூக்ளின் அருங்காட்சியகம் - பாண்டவர்களுடன் கிருஷ்ணன் ஆலோசனை
விதுரனின் வேண்டுதலுக்கு இணங்க சனத்குமாரர், திருதராட்டிரனுக்கு பிரம்ம வித்தை உபதேசித்தல்

ஆதி பருவத்தில் வரும் பருவசங்கிரகப் பகுதியில் சொல்லியிருப்பது போல, 186 பகுதிகளும் 6,698 ஸ்லோகங்கள் அடங்கியது இந்தப் பருவமாகும்.[1]

சிறப்பு

தொகு

ஒப்பற்ற விதுர நீதி இந்தப் பருவத்தில்தான் வருகிறது. இந்த நீதி குருக்ஷேத்திரப் போருக்கு முன்பு விதுரரால், திருதராஷ்டிரனுக்குச் சொல்லப்பட்டது.

விதுரனின் வேண்டுதலின் பேரில் சனத்குமாரர் திருதராட்டினுக்கு, இறவாப் பெரு நிலையை அடைய பிரம்ம வித்தை அருளப்பட்டது.

References

தொகு
தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்யோக_பருவம்&oldid=3850760" இலிருந்து மீள்விக்கப்பட்டது