உடுப்பி மாவட்டம்

கர்நாடகத்தில் உள்ள மாவட்டம்


உடுப்பி மாவட்டம் (Udupi) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 31 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் உடுப்பி நகரத்தில் உள்ளது. உடுப்பி நகரம், மாநிலத் தலைநகரான பெங்களூருக்கு வடகிழக்கே 401.2 கிலோ மீட்டர் தொலைவில் அரபுக் கடற்கரையில் உள்ளது. இம்மாவட்டத்தில் உடுப்பி கிருஷ்ணர் கோயில், மூகாம்பிகை கோயில் அமைந்துள்ளது.

உடுப்பி
—  மாவட்டம்  —
உடுப்பி
அமைவிடம்: உடுப்பி, கருநாடகம்
ஆள்கூறு 13°21′N 74°45′E / 13.35°N 74.75°E / 13.35; 74.75
நாடு  இந்தியா
மாநிலம் கருநாடகம்
நிறுவப்பட்ட நாள் 1997
மிகப்பெரிய நகரம் உடுப்பி
ஆளுநர் தவார் சந்த் கெலாட்
முதலமைச்சர் கே. சித்தராமையா
மக்களவைத் தொகுதி உடுப்பி
மக்கள் தொகை 1,177,361 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் https://udupi.nic.in/en/

தெற்கு கன்னட மாவட்டத்தின் சில தாலுகாக்களைக் கொண்டு உடுப்பி மாவட்டம் 1997 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, உடுப்பி மாவட்டத்தின் மக்கள் தொகை 1,177,361 ஆகும். அதில் ஆண்கள் 562,131 மற்றும் 615,230 பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1094 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 86.24 % ஆகும். இம்மாவட்ட மக்களில் இந்து சமயத்தினர் 85.72 % , இசுலாமியர் 8.22 %, கிறித்தவர்கள் 5.59 % மற்றும் பிறர் 0.47% ஆக உள்ளனர்.[1]

மொழிகள்

தொகு

இம் மாவட்டத்தின் முக்கிய மொழிகளாக, துளு, கன்னடம், கொங்கணி ஆகியவை விளங்குகின்றன. உடுப்பி, தென் கன்னடம் ஆகிய மாவட்டங்களில் துளு மக்கள் பெரும்பான்மையாக வாழ்வதால் இவற்றை ஒருசேர "துளு நாடு" எனவும் அழைப்பதுண்டு. இம் மாவட்டத்திலுள்ள பார்க்கூர் என்னும் இடத்தில் பழைய துளு மொழிக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மாவட்ட நிர்வாகம்

தொகு

உடுப்பி மாவட்டம் 7 வருவாய் வட்டங்களைக்கொண்டது.[2] Taluka Hoblis Urban Local Bodies Taluka Panchayts Grama Panchayats Villages

  1. உடுப்பி வட்டம்
  2. காபு வட்டம்
  3. பிரம்மவரம் வட்டம்
  4. குண்டப்பூர் வட்டம்
  5. பைந்தூர் வட்டம்
  6. கர்கலா வட்டம்
  7. ஹெப்பிரி வட்டம்

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடுப்பி_மாவட்டம்&oldid=4136784" இலிருந்து மீள்விக்கப்பட்டது