இரண்டாம் மகாலகதேவன்

மால்வாவின் பரமார மன்னன்

மகாலகதேவன் (Mahalakadeva) (இறப்பு பொ.ச.1305) அல்லது மக்லக் தேவன் என்றும் அறியப்படும் இவன், மத்திய இந்தியாவிலிருந்த பரமார வம்சத்தின் அரசனாவான். வம்சத்தின் கடைசியாக அறியப்பட்ட ஆட்சியாளனான இவன் தில்லியின் அலாவுதீன் கில்சியின் படைகளால் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான்.

இரண்டாம் மகாலகதேவன்
மகாராசாதிராசா
மால்வாவின் மன்னன்
ஆட்சிக்காலம்13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி – 24 நவம்பர் 1305
முன்னையவர்இரண்டாம் போஜன்
பின்னையவர்பதவி ஒழிக்கப்பட்டது
பிரதிநிதிகோகதேவன்
இறப்பு24 நவம்பர் 1305
மாண்டு, மால்வா, இந்தியா
குழந்தைகளின்
பெயர்கள்
ஒரு மகன் போரில் கொல்லப்பட்டான்[1]
வம்சம்பரமாரப் பேரரசு
தந்தைஒருவேளை இரண்டாம் செயவர்மன்
மதம்இந்து சமயம்

அரசியல் நிலை

தொகு

மகாலகதேவன், இரண்டாம் போஜனின் வாரிசாவான். ஹரானந்த் அல்லது வெறுமனே கோகன் என்றும் அழைக்கப்படும் கோகதேவன், இவனது சக்திவாய்ந்த மந்திரியாவான். கோகன், இரண்டாம் போஜனின் முன்னோடியான இரண்டாம் அர்ச்சுனனின் பிரதம அமைச்சராகவும் இருந்தான். மேலும் இவன் அர்ச்சுனனுக்கு எதிராக திரும்பினான். 16ஆம் நூற்றாண்டின் வரலாற்றாசிரியர் பெரிஷ்தா கோகனை "மால்வாவின் அரசன்" என்று விவரிக்கிறார். வரலாற்றாசிரியர் பிரதிபால் பாட்டியாவின் கூற்றுப்படி, கோகன் மால்வாவின் உண்மையான நிர்வாகியாக இர்ந்திருக்கலாம். போஜனின் ஒரு பெயரிடப்பட்ட ஆட்சியாளராக இருந்திருக்கலாம். [2]

அலாவுதீன் கில்ஜிக்கு எதிரான தோல்வி

தொகு
 
Delhi and Mandu in present-day India

பொ.ச.1305ஆம் ஆண்டில் , தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சி பரமாரா பிரதேசத்தின் மால்வாவை கைப்பற்ற தனது படையை அனுப்பினான்.[3] அமீர் குஸ்ராவின் தாரிக்-இ அலையில் கூறியுள்ளபடி, "மகாலகதேவனும், அவனது அமைச்சர் கோகனும்" 30-40 ஆயிரம் குதிரைப்படைகளையும், க��க்கிலடங்காத அளவு காலாட்படையையும் வழிநடத்தினர் எனத் தெரிகிறது. தில்லியின் "இஸ்லாமிய இராணுவம்" இந்த பரமாரப் படையை தோற்கடித்தது. மேலும் "இந்து பூமி இரத்தத்தால் ஈரமானது" என்று குஸ்ராவ் கூறுகிறார். கோகன் போரில் கொல்லப்பட்டான். அவனது தலை தில்லியில் உள்ள சுல்தானுக்கு அனுப்பப்பட்டது. [4]

மகாலகதேவனை மாண்டுவிலிருந்து வெளியேற்ற மால்வாவின் புதிதாக நியமிக்கப்பட்ட கில்சியின் ஆளுநரான அய்ன் அல்-முல்க் முல்தானி அனுப்பப்பட்டான். ஒரு உளவாளியின் உதவியுடன், முல்தானியின் படைகள் கோட்டைக்குள் ரகசியமாக நுழைவதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தனர். 1305ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி தப்பிச் செல்ல மு��ன்ற போது மகாலகதேவன் கொல்லப்பட்டான்.[4] [5] சைண எழுத்தாளர் காக்கா சூரி, தனது நாபி-நந்தன-ஜினோத்தார-பிரபந்தத்தில் (1336), மகாலகதேவனின் முடிவை பின்வருமாறு விவரிக்கிறார்: "அவரால் (அலாவுதீன்) முற்றுகையிடப்பட்டார். தனது சொந்த கோட்டையில், மாலவத்தின் ஆட்சியாளர் அங்கு பல நாட்கள் கடந்து, சிறைபிடிக்கப்பட்டவர் போல் வாழ்ந்து, வீரம் இழந்து இறந்தார்." [6]

தில்லிப் படைகள் மால்வாவை எப்போது கைப்பற்றினார்கள் என்பது தெரியவில்லை. 1310 தேதியிட்ட உதய்பூர் கல்வெட்டு, குறைந்தபட்சம் மால்வாவின் வடகிழக்கு பகுதியில் இது வரை பரமார வம்சம் உயிர் பிழைத்திருப்பதாகக் குறிப்பிடுகிறது. ஒரு புதிய பள்ளிவாசலில் காணப்பட்ட 1338 தேதியிட்ட கல்வெட்டு இந்தப்பகுதி தில்லி சுல்தான் முகமது பின் துக்ளக்கின் கட்டுப்பாட்டில் இருந்ததைக் குறிக்கிறது.[7]

சான்றுகள்

தொகு
  1. A Comprehensive History of India: The Delhi Sultanat (A.D. 1206-1526), ed. by Mohammad Habib and Khaliq Ahmad Nizami (in ஆங்கிலம்). People's Publishing House. 1970.
  2. Pratipal Bhatia 1970, ப. 160.
  3. Peter Jackson 2003, ப. 198.
  4. 4.0 4.1 Henry Miers Elliot 1871, ப. 76.
  5. V. S. Krishnan 1994, ப. 33.
  6. Dasharatha Sharma 1956, ப. 96.
  7. Peter Jackson 2003, ப. 199.

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_மகாலகதேவன்&oldid=3378435" இலிருந்து மீள்விக்கப்பட்டது