இந்திய அரசியல் கட்சிகள்
இந்தியாவில் நாடாளுமன்றத்திற்கான மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல்கள், இந்திய மாநிலங்களிலுள்ள சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவைத் தேர்தல்கள், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் போன்றவைகளை நேர்மையான முறையில் நடத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தில் இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகள் தங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றன. 2018 சூன் 20ஆம் தேதி நிலவரப்படி 2,064 கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.[1]
கட்சிகளின் வகைப்பாடு
தொகுஇந்தியத் தேர்தல் ஆணையம் இக்கட்சிகளை கீழ்க்காணும் வகைகளில் பிரித்துள்ளன. அவை;
- தேசியக் கட்சிகள்
- மாநிலக் கட்சிகள்
- பதிவு செய்யப்பட்ட கட்சிகள்
தேசியக் கட்சிகள்
தொகுதேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட, மொத்த மக்களவை இடங்களில் 2 சதவீத இடங்களில் (11 இடங்கள்) குறைந்தபட்சம் 3 வெவ்வேறு மாநிலங்களில் வெற்றி பெற வேண்டும். அல்லது மக்களவை அல்லது சட்டப்பேரவை தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் 6 விழுக்காடு வாக்குகள் பெறுவதோடு, 4 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்த இரு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யாவிட்டால், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிப்பட்ட மாநில கட்சியாக இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் தேசிய கட்சி என்ற அங்கீகாரம் வழங்கப்படும்.
இந்தியாவில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தேசியக் கட்சிகள் என்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பட்டியல் இது.[2]
மாநிலக் கட்சிகள்
தொகுமாநில கட்சியாக தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற:
- சட்டப் பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன் 2 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றிப்பெற வேண்டும்.
- மக்களவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன், ஒரு மக்களவை தொகுதியில் வெற்றிப்பெற வேண்டும்.
- சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
- மக்களவை தேர்தலில் ஒவ்வொரு 25 தொகுதிக்கும் ஒரு தொகுதியில் வெற்றிப்பெற வேண்டும்.
- மாநிலத்தில் பதிவாகும் ஓட்டுக்களில் குறைந்தபட்சம் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். இதில் ஏதேனும் ஒரு நிபந்தனையை பூர்த்தி செய்தால் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் வழங்கப்படும்.[3]
இந்தியாவில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மாநிலக் கட்சிகள் என்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பட்டியல் இது.[2][4]
வ.எண். | கட்சிப் பெயர் | சுருக்கப் பெயர் | ஆண்டு | தலைவர் | மாநிலம் | சின்னம் |
---|---|---|---|---|---|---|
1 | ஆம் ஆத்மி கட்சி | ஆ.ஆ.க | 2012 | |||
2 | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | அஇஅதிமுக | 1972 | |||
3 | அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு | அபாபி (AIFB) | 1939 |
|
||
4 | அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் | அமஇமு (AIMIM) | 1927 | |||
5 | அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் | N.R காங்கிரஸ் | 2011 | |||
6 | அகிலஇந்தியபசுபதியார்முன்னேற்றக்கழகம் | AIPMk | 2004 | |||
7 | அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் | AJSU | 1986 |
|
||
8 | அசாம் கண பரிசத் | கண பரிசத் | 1985 |
|
||
9 | பிஜு ஜனதா தளம் | BJD | 1997 | |||
10 | போடோலாந்து மக்கள் முன்னணி | BPF | 1985 |
|
||
11 | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை | CPI(ML)L | 1974 | |||
12 | திராவிட முன்னேற்றக் கழகம் | திமுக | 1949 | |||
13 | விடுதலை சிறுத்தைகள் கட்சி | PMK | 1989 | டாக்டர் ராமதாஸ்
|
தமிழ்நாடு
புதுச்சேரி |
மாம்பழம் |
14 | மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி | HSPDP | 1968 |
|
||
15 | இந்திய தேசிய லோக் தளம் | INLD | 1999 | |||
16 | இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் | IUML | 1948 |
|
||
17 | திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி | IPFT | 2009 |
|
||
18 | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | JKNC | 1932 | |||
19 | ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி | JKNPP | 1982 |
|
||
20 | சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி | JKPDP | 1998 | |||
21 | ஜனதா காங்கிரசு சத்தீஸ்கர் | JCC | 2016 | |||
22 | ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) | JD(S) | 1999 | |||
23 | ஐக்கிய ஜனதா தளம் | JD(U) | 1999 | |||
24 | ஜனநாயக ஜனதா கட்சி | JJP | 2018 | |||
25 | ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா | JMM | 1972 | |||
26 | கேரளா காங்கிரசு (M) | KC(M) | 1979 | |||
27 | லோக் ஜனசக்தி கட்சி | LJP | 2000 | |||
28 | மகாராட்டிரா நவநிர்மாண் சேனா | MNS | 2006 | |||
29 | மகாராட்டிரவாதி கோமந்த கட்சி | MGP | 1963 |
|
||
30 | மிசோ தேசிய முன்னணி | MNF | 1959 |
|
||
31 | மிசோரம் மக்கள் மாநாடு | MPC | 1972 |
|
||
32 | நாகாலாந்து மக்கள் முன்னணி | NPF | 2002 | |||
33 | தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி | NDPP | 2018 | உலக உருண்டை | ||
33 | மக்கள் ஜனநாயக கூட்டணி (மணிப்பூர்) | PDA | 2012 |
|
கிரீடம் | |
35 | மக்கள் சனநாயக முன்னணி (மேகாலயா) | 2017 |
|
மெழுகுவர்த்திகள் | ||
36 | அருணாச்சலின் மக்கள் கட்சி | PPA | 1987 |
|
||
37 | இராச்டிரிய ஜனதா தளம் | RJD | 1997 | |||
38 | ராஷ்டிரிய லோக் தளம் | RLD | 1998 |
|
||
39 | ராஷ்டிரிய லோக் சம்தா கட்சி | RLSP | 2013 | |||
40 | இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி | RLP | 2018 |
|
||
41 | புரட்சிகர சோசலிசக் கட்சி | RSP | 1940 |
|
||
42 | சமாஜ்வாதி கட்சி | SP | 1992 | |||
43 | சிரோமணி அகாலி தளம் | SAD | 1920 |
|
||
44 | சிவ சேனா | SS | 1966 | |||
45 | சிக்கிம் சனநாயக முன்னணி | SDF | 1993 | |||
46 | சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா | SKM | 2013 | மேசை விளக்கு | ||
47 | தெலுங்கானா இராட்டிர சமிதி | TRS | 2001 | |||
48 | தெலுங்கு தேசம் கட்சி | TDP | 1982 | |||
49 | ஐக்கிய சனநாயகக் கட���சி (மேகாலயா) | UDP | 1972 |
|
||
50 | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி | YSRCP | 2011 | |||
51 | சோரம் தேசியவாத கட்சி | ZNP | 1997 |
|
அங்கீகரிக்கப்படாத பதிவு செய்த கட்சிகள்
தொகுஇந்தியத் தேர்தல் ஆணையத்தில் தேசியக் கட்சிகளாகவும், மாநிலக் கட்சிகளாகவும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தவிர, வேறு சில கட்சிகள் தங்களை அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்து கொண்டிருக்கின்றன கட்சிகள்.
வ.எண். | கட்சிப் பெயர் | சுருக்கப் பெயர் | ஆண்டு | தலைவர் | கொடி | மாநிலம் |
---|---|---|---|---|---|---|
1 | இந்திய புரட்சிகர பொதுவுடமைக் கட்சி | RCPI | 1934 | சௌம்யேந்திரநாத் தாகூர் | ||
2 | அகில் பாரதிய கோர்கா லீக் | ABGL | 1943 | பாரதி தமாங் | ||
3 | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் | மதிமுக | 1992 | வைகோ | ||
4 | ஒருங்கிணைந்த கோன்சு கட்சி | UGP | 1963 | ஜாக் டி செக்வீரா | ||
5 | மணிப்பூர் மக்கள் கட்சி | MPP | 1968 | சோவகிரன் என் | ||
6 | விடுதலைச் சிறுத்தைகள் கட்சி | விசிக | 1972 | தொல். திருமாவளவன் | ||
7 | சோசலிச குடியரசுக் கட்சி (கேரளா) | SRP | 1977 | ஓ வி ஸ்ரீதத் | ||
8 | உத்தரகண்ட் கிரந்தி தளம் | UKD | 1979 | காஷி சிங் ஏரி | ||
9 | கூர்க்கா தேசிய விடுதலை முன்னணி | GNLF | 1980 | சுபாசு கெய்சிங் | ||
10 | அம்ரா பங்கலி | AMB | 1983 | பிரபாத் ரஞ்சன் சர்க்கார் | ||
11 | பாரதிய சிறுபான்மையினர் சூரக்ஷா மகாசங் | BMSM | 1983 | சுந்தர் சேக்கர் | ||
12 | கேரளா காங்கிரஸ் (B) | KC(B) | 1989 | ஆர்.பாலகிருஷ்ண பிள்ளை | ||
13 | கோண்ட்வான கணதந்திர கட்சி | GGP | 1991 | ஹிரா சிங் மார்க்கம் | ||
14 | கேரளா காங்கிரஸ் (ஜேக்கப்) | KC(J) | 1991 | அனூப் ஜேக்கப் | ||
15 | புதிய தமிழகம் கட்சி | புதக | 1996 | க. கிருஷ்ணசாமி | ||
16 | நாம் தமிழர் கட்சி | நாதக | 1958 | சீமான் | ||
17 | மக்கள் நீீதி மையம் | ம நீ ம (MNM) | 2018 | கமல்ஹாசன் |
| |
18 | தமிழ் மாநில காங்கிரசு | தமாக | 1996 | ஜி. கே. வாசன் | ||
19 | கொங்குநாடு மக்கள் கட்சி | கொமக | 2000 | ஏ. எம். இராஜா | ||
20 | இத்தேகாத்-இ-மில்லத் கவுன்சில் | IEMC | 2001 | தாகீர் ராசா கான் | ||
21 | மக்கள் ஜனநாயக முன்னணி | 2001 | அஜாய் பிசுவாசு | |||
22[6] | தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை | KIP | 2001 | உ. தனியரசு | ||
23 | திருவள்ளுவர் மக்கள் கட்சி | திமக | 2019 | ப.கமலா | தமிழ்நாடு |
மேற்கோள்கள்
தொகு- ↑ க.சக்திவேல் (15 சூலை 2018). "நாடு முழுவதும் 2,000-க்கும் அதிகமான கட்சிகள்; 9 ஆண்டுகளில் இரு மடங்கான கட்சிகள் எண்ணிக்கை: விதிகளை மீறினால் பதிவை ரத்து செய்யும் அதிகாரம் கிடைக்குமா?". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 15 சூலை 2018.
- ↑ 2.0 2.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-10-24. பார்க்கப்பட்ட நாள் 2013-07-30.
- ↑ "Amendment of the Election Symbols (Reservation and Allotment) Order, 1968. Allotment of common symbol to candidates of registered un-recognized political parties". Press Information Bureau. 17 October 2011. பார்க்கப்பட்ட நாள் 8 May 2015.
- ↑ http://eci.nic.in/eci_main/ElectoralLaws/OrdersNotifications/AmendmentNotificationEng09042013.pdf
- ↑ "Contact Us". பார்க்கப்பட்ட நாள் 27 November 2019.
- ↑ Flohr, H.; Breull, W. (1975-09). "Effect of etafenone on total and regional myocardial blood flow". Arzneimittel-Forschung 25 (9): 1400–1403. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-4172. பப்மெட்:23. https://pubmed.ncbi.nlm.nih.gov/23.