ஆறு (திரைப்படம்)

ஹரி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஆறு (Aaru) 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஹரியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா, திரிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1][2][3]

ஆறு
இயக்கம்ஹரி
தயாரிப்புசரண்
கதைஹரி (திரைக்கதை)
ஹரி (கதை)
சுஜாதா (வசனம்)
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்புசூர்யா
திரிஷா
வடிவேலு
ராஜ் கபூர்
ஆஷிஷ் வித்யார்த்தி
ஒளிப்பதிவுப்ரியன்
விநியோகம்ஜெமினி புரொடக்ஷன்ஸ்
வெளியீடு2005
ஓட்டம்168 நிமிடங்கள்.
நாடு இந்தியா
மொழிதமிழ்

மசாலாப்படம்

நடிகர்கள்

தொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

விஷ்வனாதனுக்குக் கூலியாளாக இருக்கும் ஆறு (சூர்யா) தனது எஜமானரான விஷ்வனாதனுக்காக (அசிஷ் விஷ்யாத்ரி) பல கொடிய செயல்களைத் துணிந்து செய்கின்றார். ஆனால் விஷ்வனாத்தின் பரம எதிரியான ரெட்டியினால் பல பிரச்சனைகள் வரவே அவருக்கு எதிராக ஆறுவை மோதச் சொல்கின்றார். ஆனால் விஷ்வனாத்தின் சூழ்ச்சியினால் ஆறுவின் நெருங்கிய நண்பர்கள் கொல்லப்படவே பின்னைய காலங்களில் முதலாளியின் சூழ்ச்சிகளை அறிந்து கொள்கின்றார் ஆறு. பின்னர் தனது முதலாளியைப் பழி வாங்குகின்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Suriya power!". சிஃபி. 21 December 2005. Archived from the original on 8 January 2013. பார்க்கப்பட்ட நாள் 22 February 2023.
  2. "Audio release – Aaru". idlebrain. 3 December 2005.
  3. "Nenjam Enum (Full Song) – Aaru". 8 April 2013. Archived from the original on 2021-12-14. பார்க்கப்பட்ட நாள் 28 October 2015 – via யூடியூப்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறு_(திரைப்படம்)&oldid=4132960" இலிருந்து மீள்விக்கப்பட்டது