ஆன்னி பார்பாரா அண்டர்கில்

ஆன்னி பார்பாரா அண்டர்கில் (Anne Barbara Underhill) FRSC (ஜூன் 12, 1920 -ஜூலை 3, 2003) ஒரு கனடிய வானியற்பியலாளர் ஆவார். இவர் தொடக்கநிலை விண்மீன்களின் ஆய்வுக்காகப் பெயர்பெற்றவர் ஆவார். இப்புலத்தில் இவர் ஓர் உலக வல்லுனர்களில் ஒருவர் ஆவார்.[1] இவர் தன் வாழ்நாளில் வானியல், வானியற்பியல் பங்களிப்புகளுக்காக பல விருதுகளைப் பெற்றார்.[2]

ஆன்னி பார்பாரா அண்டர்கில்
Anne Barbara Underhill

FRSC
பிறப்பு(1920-06-12)12 சூன் 1920
வாங்கூவர், பிரித்தானியக் கொலம்பியா, கனடா
இறப்பு3 சூலை 2003(2003-07-03) (அகவை 83)
வாங்கூவர், பிரித்தானியக் கொலம்பியா, கனடா
தேசியம்கனடியர்
பணியிடங்கள்டொமினியன் வான்காணகம்
உட்ரெச்ட் பல்கலைக்கழகம்
நாசா கோடார்டு விண்வெளி பறப்பு மையம்
கல்வி கற்ற இடங்கள்
  • பிரித்தானியக் கொலம்பியா பல்கலைக்கழகம்
  • சிகாகோ பல்கலைக்கழகம்
ஆய்வேடு (1948)
ஆய்வு நெறியாளர்சுப்பிரமணியன் சந்திரசேகர்
அறியப்படுவதுதொடக்கநிலை வகை விண்மீன் ஆராய்ச்சி
விருதுகள்தகைமைப் பட்டம், யார்க் பல்கலைக்கழகம் (1969)[1]
FRSC (1985)
D.S. பீல்சு விருது (1985)
முதுமுனைவர், பிரித்தானியக் கொலம்பியா பல்கலைக்கழகம் (1992)[1]

இளமை

தொகு

இவர் கனடா, பிரித்தானியக் கொலம்பியாவைச் சேர்ந்த வாங்கூவரில் வளர்ந்தார்.[1] She was the only girl of five children born to European immigrants Irene Anna (née Creery) and Frederic Clare Underhill.[1] இவர் பிரித்தானியக் கொலம்பியாவின் ஆளுநர் பதக்கத்தை உயர்நிலைப் பள்ளியில் அடைந்த தன்னிகரற்ற உயர்தகைமைக்காகப் பெற்றார்.[1] இவர் தன் இரண்டு அண்ணன்களுடனும் மூன்று தம்பிகளுடனும் நெருக்கமாக வளர்ந்தார். இவரது 18 ஆம் அகவையிலேயே தாயார் இறந்ததும் அவர்களுக்கு முழு ஆதரவும் நல்கினார்.[1] இவரது அண்ணன் இரண்டாம் உலகப் போரில் 1944 இல் கொல்லப்பட்டார்.[1]

கல்வி

தொகு

இவர் 1942 இல் வேதியியலில் இளங்கலிப் பட்டத்தை பிரித்தானியக் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பெற்றார். இவர் அங்கே கல்வியைத் தொடர்ந்து 1944 இல் இயற்பியலிலும் கணிதவியலிலும் முதுவர் பட்டத்தைப் பெற்றார்.[1][3] இவர் முதுவர் பட்டம் பெற்றதும் கனடியப் பல்கலைக்கழக மகளிர் கூட்டமைப்பில் இருந்து கணிசமான அளவு உதவிநல்கை பெற்றர். இதனால் இவர் டொரன்டோ பல்கலைக்கழகத்தில் சேர முடிந்தது. என்றாலும் அப்போதைய வானியற்பியல் நிகழ்ச்சி மிகவும் தரமின்றி இருந்தமையால் ஓராண்டுக்குள்ளாகவே தங்கிவிட்டார்.[3] பிறகு இவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பெயர்பெற்ர வானியற்பியலளராகிய சுப்பிரமணிய்ன் சந்திர சேகரின் கீழ் முனைவர் பட்ட்த்தை 1948 இல் பெற்றார்.[1][4] இவரது ஆய்வுத் தலைப்பு பல்லடுக்கு உடுக்கண வளிமண்டலங்கள் ஆகும். இவரது கணிதவியல் படிமம் இந்நிகழ்வு சார்ந்த முதல் படிமம் ஆகும்.[1]

வாழ்க்கைப்பணி

தொகு

இவர் 1948 முதல் 1949 வரை தேசிய அறிவியல், பொறியியல், மருத்துவக் கல்விக்கழகத்தின் முதுமுனவர் ஆய்வுநல்கையை கோப்பனேகன் வான்காணகத்தில் ஆய்வு மேற்கொள்ளப் பெற்றார். இவர் 1949 இல் விக்டோரியாவில் உள்ள டொமினியன் வனியற்பியல் நோக்கீட்டகத்தில் ஆராய்ச்சி அறிவியலாளர் பதவியை ஏற்று 1962 வரை அங்கு பணிபுரிந்தார்ரிதேவேளையில் இவர் ஆர்வார்டு, பிரின்சுடன் பல்கலைக்கழகங்க்ளிலும் வருகைதரு பேராசிரிர்ராகவும் பணிபுரிந்தார். இவர் பிரின்சுடனில் அங்கிருந்த கணிப்பு ஏந்துகளை உடுக்கண வளிமண்டலங்களின் படிம உருவாக்க மென்பொருளாக்கத்துக்குப் பயன்படுத்தியுள்ளார். இவர் டொமினிய்ன் வான்காணகத்தில் தம் ஆண்பால் முனைவர் பட்ட ஆய்வாளரிடம் இருந்து பாலினப் பாகுபாட்டுக்கு ஆளாகியுள்ளார்.ஆங்கு இவரது பொறுப்புகளைக் குறைத்து தகுதிகுறைந்த ஆண் ஆய்வாளர்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.[3]

எதிர்பாராவகையில் 1962 இல் இவருக்கு உட்ரெச்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து வானியற்பியலில் முழு பேராசிரியர் பதவி வழங்கபட்டுள்ளது.[1] இவர் கனடாவை விட்டகல விரும்பாமையால் தன் சம ஆய்வாளர்களின் போக்க்றிந்தும் அப்போது அப்பதவியை ஏற்பது அரிதாக விளங்கியுள்ளது.[3] இவர் உட்ரெச்ட் பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு மாணவருக்குப் பாடம் எடுத்ததோடு, முதனிலை வகை விண்மீன்கள் (The Early Type Stars) எனும் நூலையும் வெளியிட்டுள்ளார். இவர் 1970 இல் நாசாவின் கோடார்டு விண்வெளிப் பறப்பு மையத்தில் பணியில் சேர்ந்து அங்கு 15 ஆண்டுகள் தான் ஓய்வு பெறும் வரை பணிபுரிந்துள்ளார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 "Anne Barbara Underhill (1920 - 2003) | American Astronomical Society". aas.org. Archived from the original on 2017-12-25. பார்க்கப்பட்ட நாள் 2016-09-28.
  2. hamon-bienvenue.ca. "Anne Barbara Underhill | Astronomers | AstroLab". astro-canada.ca. பார்க்கப்பட்ட நாள் 2016-09-28.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Finlayson, Judith (1999). Trailblazers: women talk about changing Canada. Toronto, Ontario, Canada: Doubleday Canada. pp. 177–182. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-385-25658-2.
  4. Underhill, Anne B. (1948). Some Aspects of B-Type Spectra (PhD). University of Chicago. Bibcode:1948PhDT.........1U.

புற இணைப்புகள்

தொகு

மேலும் வாசிக்க

தொகு