ஆடை (ஒலிப்பு) (costume) என்பது ஒரு தனிநபர் அல்லது குழுவின் வர்க்க, பாலினம், தொழில், இன, தேசிய, செயல்பாடு அல்லது சகாப்தம் என்பவற்றை  பிரதிபலிக்கும் ஒரு தனித்துவமான பாணியாகும்.

அனைத்து நாடுகளினதும்அணிகலன்கள்-பிராங்க்ஸ் ஏ.டி.பரதன் 800 (1882) ஒரு குறிப்பிட்ட சகாப்தத்தின் குறிப்பிட்ட தனிநபர்களுக்கான பொருத்தமான ஆடைகளின் ஒரு எடுத்துக்காட்டு.பிற்பட்ட காலங்களில், உண்மையான ஆடைகள் நாடக நோக்கங்களுக்காக பிரதி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டது.

பாரம்பரிய காலத்திலும் ஆடைகள் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஏற்ப  வெவ்வேறு விதமாக சவாரி உடை, நீச்சல் உடை, நடன உடை மற்றும் மாலை உடை என பொருத்தமான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொருத்தமான மற்றும் ஏற்புடைய ஆடைகள் பேஷன் மற்றும் உள்ளூர் கலாச்சார விதிமுறைகளுக்கு ஏற்ப பல்வேறு விதமாக வடிவமைக்கப்படுகின்றன. இதன் பொதுப்பயன்பாடனது படிப்படியாக "ஆடை" ,"உடுக்கை" அல்லது "அணி" எனும் வார்த்தைப் பிரயோகங்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.[1][2][3]

மேலும் உடை  யின் பயன்பாடானது வழக்கதத்திலற்ற ஆடை அல்லது நாகரிகமற்ற ஆடை மற்றும் அடையாளத்தில் மாற்றத்தை தரும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஆடைகளான நாடக, ஹலோவீண்,மற்றும் நற்பேறு என்பனவாறு வரையறை செய்யப்பட்டுள்ளது.

தைக்கப்பட்ட ஆடைகளின் வருகைக்குமுன், கைகளால் தயாரிக்கப்பட்ட ஆடைகளே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. 2௦ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில், வணிக விற்பனையின் போது பெரும்பாலும் "மில்லிநேரி" (millinery) மற்றும் "கொசெட்ரி"  (corsetry) உட்பட நாகரிகமான அல்லது இறுக்கமான பெண்கள் உடைகளுக்கு அதிகம் தேவை காணப்பட்டுள்ளது.

சொற்பிறப்பு

தொகு

ஆடை எனும் நாகரிகம் அல்லது விருப்பம் எனப் பொருள்படும் இத்தாலிய வார்த்தையானது, பிரஞ்சு வழியாக மரபுரிமை பெற்று வந்ததாகும்.

தேசிய உடை

தொகு

தேசிய உடை அல்லது பிராந்திய உடையானது உள்ளூர் (அல்லது நாடுகடத்தப்பட்ட) அடையாளம் மற்றும் ஒரு கலாச்சாரத்தின் தனிப்பட்ட பண்புகளை வலியுறுத்துவதாய் அமைகின்றது. இவ் உடைகள் மூலம் பெரும்பாலும் அவர்களின் தேசிய பெருமை அடையாளப்படுத்தபடுகிறது. எடுத்துக்காட்டாக "ஸ்கொட்டிஷ் கில்ட்" (scottish kilt) ஸ்காட்லாண்டில் அணியப்படும் சிறிய பாவாடை அல்லது "ஜப்பானீஸ் கிமோனோ" (japanese kimono) ஜப்பானின் தளர்த்தியான ஆடை வகை அடங்கும்.

பூட்டானில் ஆண்கள், பெண்கள் உட்பட முடியாட்சியில் உள்ளவர்களுக்கும் ஒரு பாரம்பரிய தேசிய ஆடை இருந்து வந்துள்ளது. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடப்பிலுள்ள ஒரு தனித்துவமான உடையாகவும் வளர்ந்து வந்துள்ளது. இது முழங்கால் நீளம் வரை அணியும் அலங்கார அங்கியும் மற்றும் "கெரா" (Kera) எனப்படும் பட்டியால் இடுப்பில் இறுக்கமாக அணிவதுமான ஆண்களின் ஆடையை "கஹோ" (Gho) என கூறப்படும். உடையின் முன் பகுதி ஒரு பை போன்று உருவாக்கப்பட்டுள்ளது, இது பழங்காலங்களில் உணவு மற்றும் குறுகிய கத்தி வைப்பதற்காக பயன்படுத்தப்பட்டது, ஆனால் இப்போது அது கையடக்கத் தொலைபேசி, பணப்பை மற்றும் "டோமா"' (Doma) எனப்படும் பாக்கு வைக்க பயன்படுத்தப்படுகிறது. பெண்கள் அணியும் ஆடை "கிரா" (kira), "டேகோ" (tego) மற்றும் "வோஞ்சு" (Wonju) என அழைக்கப்படும் மூன்று துண்டுகளை கொண்டு காணப்படுகிறது. கணுக்கால் வரை நீண்டு காணப்படும் உடை "கிரா" (kira) எனப்படும். இதன் மேலே அணியப்படும் "டேகோ" (tego) எனப்படும் ஜாக்கெட் ஆனது "வோஞ்சு" (Wonju) எனும் உள் ஜாக்கெட்டுடன் அணியப்படுகிறது. எனினும் மடத்திற்கு செல்லும் போது "கப்னே" (Kabney)  எனப்படும் ஒரு நீண்ட தாவணியை ஆண்கள் தோள்பட்டை முழுவதும் அவர்களின் தரத்திற்கு பொருத்தமான வண்ணங்களில் அணிந்து செல்வார்கள். பெண்கள் கூட "ரசுஸ்" (Rachus)  எனப்படும் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பட்டினால் செய்யப்பட்ட ஒரு நீண்ட தாவணியை தர வேறுபாடின்றி தங்கள் தோள் மீது அணிந்து செல்வார்கள். 

திரையரங்க உடை

தொகு
 
கியோட்டோ Eigamura பிலிம் செட்டுக்கு சாமுராய் உடையில் நடிகர்கள்
 
இந்தியாவின் ஒரு தியேட்டர் கலையிலிருந்து   யாக்ஷகனாவில்  பயன்படுத்தப்பட்ட ஒரு ஆடை
 
2006 பிரிஸ்டல் மறுமலர்ச்சியை ஆதரித்தவர்களில் இருந்து உடையணிந்த கலைஞர்கள்

உடைகள் பொதுவாக அது அணிந்திருக்கும் விதத்தினை பொறுத்து அதை அணிந்திருப்பவர்களின் குணவியல்புகளை அல்லது சமூக நிகழ்வில் அவரது கதாப்பாத்திரத்தினை குறித்துக்காட்டுவதுடன் மேடை மற்றும் திரைப்படங்களில் அவர்களின் நாடக செயல்திறனை எடுத்துக் காட்டுகிறது. ஒரு நடிகருக்கு இந்த ஆடை அமைப்பு எவ்வாறு உதவுகிறதெனில் அவரின் குணவியல்பு, கட்டமைப்பு, அவர்வெளிக்கொணர முயலும் வரலாற்று கால கட்டம், காட்சி நடைபெறுகின்ற இடம், நேரம்,வானிலை, காலநிலை என்பவற்றை சித்தரிக்க உதவுகின்றது.சில பகட்டான நாடக ஆடைகளே கதா பாத்திரங்களை உணர்த்தி விடுகின்றன. உதாரணமாக “ஹார்லிகுயின்” (Harlequin) மற்றும் “ பணடலூன்” (panataloon) “எக்ஷாக்கெரட்” (exaggerate)போன்ற ஆடைகளை குறிப்பிடலாம்.  

சமய விழாக்கள் 

தொகு
 
ஒரு பாரம்பரிய, ஐரோப்பிய பாணியில் சாண்டா வழக்கு

மதப் பண்டிகை காலகட்டங்களில் அணியும் ஆடையானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. உதாரணமாக “மார்டி க்ராஸ்” (Mardi Gras), “ஹல்லோவீன்” (Halloween) போன்ற ஆடைகளை குறிப்பிடலாம். “மார்டி க்ராஸ்” (Mardi Gras) உடைகள் அனேகமாக வேடிக்கை செய்பவர்களை போலும் ஏனைய கற்பனைக் கதாபாத்திரங்களையும் குறிப்பிடுகின்றன. “ஹல்லோவீன்” (Halloween) ஆடைகளோ பாரம்பரியமான இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளை குறிப்பிடுகின்றனவாக அமைகின்றன. உதாரணமாக பேய், இரத்தக் காட்டேரி, பொப் கலாச்சார குறியீடு, தேவதைகள் என்பவற்றை கூறலாம். அதே போல் கிறிஸ்மஸ் ஆடைகள் நத்தார் தாத்தாவினை அடையாளப்படுத்துகின்றன. நத்தார் ��ாத்தா உடைகள் மற்றும் தாடி போன்ற அவுஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பிரபலமாக காணப்படுகின்றன. நெதர்லாந்தில் “ஷ்வார்ட் பிட்” (zwarte piet) வழக்கமான ஆடையாக காணப்படுகின்றது.அத்தோடு ஈஸ்டர் உடைகள் மற்றும் மிருக உடைகள் என்பவற்றை குறிப்பிட முடியும்.  

யூத மதத்தினரால் கொண்டாடப்படும் “புரிம்” (purim) தின உடைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. இத்தினத்தில் யூதர்கள் தங்கள் விதியை மாற்றியமைப்பதாக நம்பப்படுகிறது. எதிரிகள், தீங்கு விளைவிக்கும் குற்றவாளிகள், தீய சக்திகள் போன்றவற்றை அழிக்க அரசர் அனுமதி வழங்கும் தினமான இந்நாளில் எதிரிகளுக்கு எதிரானது என எஸ்தர் புத்தகத்தில் குறிப்பிடப்படுகிறது. எனவே இத்தினத்திலும் வித்தியாசமான ஆடைகள் அணியப்படுகின்றன. பெளத்த மதத்தினரால் கொண்டாடப்படும் பண்டிகைகள் திபெத், பூட்டான், மொங்கோலியா மற்றும் லாசாவில் வித்தியாச ஆடைகளோடு கொண்டாடப்படுகின்றன. இந்தியாவின் சிக்கிம் சாம் நடனத்தினை குறிப்பிடலாம். இந்த நடனத்தின் போது அழகிய ஆடைகளும் முகமூடிகளும் அணியப்படுகின்றன. 

அணிவகுப்பு மற்றும் ஊர்வலங்கள்

தொகு

அணிவகுப்பு மற்றும் ஊர்வலத்தின் போது அணியப்படும் ஆடைகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் கற்பனைத்திறன் கொண்டதாகவும் காணப்படுகின்றது. உதாரணமாக 1879 ல் “ஹான்ஸ் மகரத்” (Hans Makart) ஆல் வடிவமைக்கப்பட்ட திருமண ஊர்வல ஆடைகளைக் குறிப்பிட முடியும்.அணிவகுப்பு உடைகள் தொடர்ச்சியாக 20ம் நூற்றாண்டின் இடைப்பகுதிவரை வியன்னாவில் பேணப்பட்டு வந்ததை குறிப்பிட முடியும். ஐக்கிய மாநிலங்களில் அங்கிள் சாம் ஆடைகள் சுதந்திர தினத்திற்கு அணியப்பட்டு வந்ததோடு சீனாவின் லயன் டான்ஸ் ஆடைகள் புதுவருட கொண்டாட்டத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. அதேபோன்று ட்ராகன் டான்ஸ் ஆடைகளும் மக்கள் வரிசைப்படி நின்று அணிந்து ட்ராகன் போன்ற அமைப்பை வெளிக் கொணர்வதாக அமைந்திருக்கிறது.  

விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் கட்சிகள்

தொகு

பொது விளையாட்டுக்களில் உதாரணமாக பன் ரன்ஸ் போன்ற விளையாட்டுக்களில் பயன்படுத்தப்படும் ஆடைகள் அத்தோடு தனியார் வினோத உடை நிகழ்வுகள் மஸ்கியூரேட் பால்ஸ் என்பவற்றின் போது அணியப்படும் ஆடைகளையும் குறிப்பிடலாம்.   

 சின்னங்கள் 

தொகு
 
மலையாட்டு உடைகள்

அணிகலன்கள் பொதுவாக விளையாட்டு நிகழ்வுகளின் போது சின்னமாக உடுத்தி தங்கள் அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதிலும் ரசிகர்கள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்துவதிலும் அதிக பங்களிப்பு செய்து வருகின்றது. வணிகங்கள் தங்கள் வணிக தெருவில் அவர்களின் ராசி சின்னங்களை வைப்பதன் மூலம் அல்லது விளையாட்டு நிகழ்வுகள், திருவிழாக்கள், தேசிய கொண்டாட்டங்கள், கண்காட்சிகள், மற்றும் அணிவகுப்புகளுக்கு அவர்களின் ராசி சின்னத்தை அனுப்புவதன் மூலமும் தங்கள் வணிக நடவடிக்கைகளை மக்கள் கவனத்திற்கு ஈர்க்கும் வகையில் அவர்களின் நற்பேறு உடைகளை பயன்படுத்துகின்றனர். நிறுவனங்கள் தங்கள் வேலை பற்றி மக்களிடையே விழிப்புணர்வை கொண்டு வருவதற்காக சின்னங்களை பயன்படுத்தி வருகின்றன. குழந்தைகளின் புத்தக ஆசிரியர்கள் தங்கள் புத்தகளின் கையொப்பங்களுடன் பேர் அடங்கிய முக்கிய கதாபாத்திரங்களிலிருந்து இருந்து சின்னங்களை உருவாக்குகின்றனர். விலங்கு உடைகள் பார்வைக்கு நற்பேறு உடைகளுடன் மிகவும் ஒத்ததாகவும், "பெர்சுயட்ஸ்"  (fursuits) மற்றும் ஒரு விலங்கின் ஆளுமை பொருந்தும், அல்லது "பெர்சொனா" (fursona) என குறிக்கப்படும் இவ் உடைகள் “உரோம விசிறிகள்” (Furry Fandom) உறுப்பினர்கள் மத்தியில் பிரபலமாகவும் காணப்படுகின்றது.

குழந்தைகள்

தொகு

மேலும் அணிகலன்கள் குழந்தைகளுக்கு அவர்களின் பாத்திரநடிப்பிற்கும் மற்றும் ஆய்விற்கும் ஒரு அழகிய சாலை (avenue) போன்று பணியாற்றுகின்றது. உதாரணமாக, குழந்தைகள் வரலாறு அல்லது கற்பனையில் இருந்து கடற் கொள்ளையர்கள், இளவரசிகள் அல்லது கவ்பாய்ஸ் போன்ற பாத்திரங்களை ஏற்று அதே போன்று வேடம் தரித்துக்கொள்ளலாம். அவர்கள் ஒரு பொதுவான தொழில்துறை உத்தியோகத்தவர்கள் அதாவது தாதிகள் அல்லது போலீஸ் அதிகாரிகள் போன்றும் மற்றும் மிருகக்காட்சிசாலை அல்லது பண்ணை விலங்குகள் போன்றும் சீருடைகள் அணிந்து கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக, இளம் சிறுவர்கள் ஆண் சார்ந்த ஒரே மாதிரியான கருத்துக்களை வலுப்படுத்தும் ஆடைகளையே முனைய விரும்புவர், மற்றும் இளம் பெண்கள் பெண்ணினம் சார்ந்த ஒரே மாதிரியான கருத்துக்களை வலுப்படுத்தும் ஆடைகளையே முனைய விரும்புவர். 

காஸ்பிளே

தொகு

காஸ்பிளே என்பது ஜப்பானில் தோற்றம் பெற்ற ஒரு சொல் ஆகும்.இது ஆங்கிலத்தில் " நாடக உடை " என பொருள்படும். எப்போதும் ஒரு குறிப்பிட்ட பெயரினால் அடையாளப்படுத்தப்படும் இச் செயல்திறன் சார்ந்த கலையில் பங்கேற்பவர்கள் ஆடைகள் மற்றும் ஆபரணங்களை ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் அல்லது பொதுவான கருத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் அணிந்து கொள்வார்கள். இந்த உடை அணிபவர்கள் அடிக்கடி துணைப் பண்பாடுகளை தொடர்பு படுத்தி தங்கள் நாடகங்களை உருவாக்குவதால், இவர்களை பெரும்பாலும் நாடகக் குழுக்கள் அல்லது கூட்டம் அல்லது மாநாட்டில் காணக் கூடியதாய் இருக்கும்.

இந்த உடைகளில் குறிப்பிட்ட அளவானவை வீட்டில் தைக்கப்பட்டதும், தனித்துவமானதும், மற்றும் இவ் உடை அணிந்தவர்கள் அதன் கதாபாத்திரம், கருத்து, மற்றும் நோக்கம் என்பவற்றை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் முன்வைக்க அல்லது பாசாங்கு செய்ய முயற்சிப்பார்கள். பெரும்பாலும் இவ்வாறான உடைகளை வைத்தே உடை அணிந்தவர்கள் எவ்வாறான கதாபாத்திரம் அல்லது கருத்தை பிரதிநிதித்துவப்படுத்த முயல்கிறார் என்பதை கலை ரீதியில் இலகுவாக தீர்மானிக்கக் கூடியதாய் இருக்கும். 

வடிவமைப்பு 

தொகு

ஆடை வடிவமைப்பு என்பது கற்பனைத்திறனுக்கு உட்பட்டது. அதை அணிபவரின் குணாம்சங்களை வெளிப்படுத்தக்கூடியது. ஆடை வடிவமைப்பு பாங்கானது ஒருவரின் தேசம், தரம் மற்றும் வாழும் கால கட்டத்தை பிரதிபலிக்கின்றது. நாடக மற்றும் சினிமாத்துறைகளில் இவ்வாடை வடிவமைப்பின் பங்கு முக்கிய இடம் வகிக்கின்றது. இவ்வாடை வடிவமைப்பானது அந்தஸ்தோடு பாதுகாப்பினையும் வழங்குகிறது. பாத்திரத்திற்கான காட்சி ஆர்வத்தினையும் தூண்டுகிறது. சினிமா மற்றும் இசைத்துறையோடு சம்பந்தப்பட்ட ஆடை வடிவமைப்புக்கள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. புதிதாகவோ அல்லது ஏற்கனவே வடிவமைக்கப்பட்டதுடன் இணைத்தோ ஆடைகளை வடிவமைக்க முடியும்.

நிறுவனங்கள் 

தொகு

ஆடைகள் வடிவமைப்பு சர்வதேச சங்க உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் மோஷன் பிக்சர், தொலைக்காட்சி, மற்றும் வணிக ஆடை வடிவமைப்பாளர்கள், உதவி ஆடை வடிவமைப்பாளர்கள் மற்றும் உடை விரிவுரையாளர்கள் என 750 க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இதில் அடங்குவர்.

வெளியீடுகள் 

தொகு

ஆடை வடிவமைப்பாளர்கள் காலாண்டு இதழ் ஒன்றை ஆடை வடிவமைப்பு தொழில் துறைக்காக அர்ப்பணித்துள்ளனர்.

குறிப்பிடத்தக்க வடிவமைப்பாளர்கள் மற்றும் விருதுகள் 

தொகு

குறிப்பிடத்தக்க ஆடை வடிவமைப்பாளர்களில் சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான அகாடமி விருது, சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான டோனி விருது, முதன்மை ஆடை வடிவமைப்பிற்கான டிராமா டெஸ்க் விருது எனும் விருதுகள் பெற்றவர்கள் அடங்குவர். 1897-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பிறந்த எடித் ஹெட் மற்றும் ஒர்ரி-கெல்லி, ஆகிய இருவரும் ஹாலிவுட்டின் மிகவும் குறிப்பிடத்தக்க ஆடை வடிவமைப்பாளர்கள் ஆவர்.

DIY மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட உடை

தொகு

20 ஆம் நூற்றாண்டில், சமகால துணி கடைகள் வாங்கக்கூடியதும், மூலப்பொருட்களில் இருந்து ஆடை செய்ய பயன்படுத்தக்கூடியதுமான வணிக வடிவங்களை வழங்கி வந்துள்ளன. சில நிறுவனங்களும் இது போன்ற சிறந்த வடிவங்களுடனான பட்டியல்களை உற்பத்தி செய்யத் தொடங்கின.

மேலும் சமீபத்தில், குறிப்பாக இணையத்தின் வருகையுடன், DIY இயக்கமானது DIY ஆடைகள் மற்றும் முறை பகிர்வில் ஒரு புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. எளிதாக கிடைக்கக் கூடிய பல நூறு வடிவமைப்புகளை கொண்ட ஒரு உதாரணம் “பொப்சுகர்” (POPSUGAR) ஆகும். பல DIY உடைகளின் இயல்புகள் "யூடுயுப்" (YouTube), "பிண்டேறேஸ்ட்"  (Pinterest), "மஷப்ல்" (Mashable)  என்பவற்றில் இடம்பெறுகின்றன.

தொழில்

தொகு

பொதுவாக தொழில்முறை-தர உடைகள் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் அல்லது அமைப்பில் கைவினைஞர்கள் மூலம் வடிவமைக்கப்பட்டு மற்றும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது போன்ற பொதுவான உடைகள் சிறப்பு கடைகளில் கூட காணலாம்.

சில உயர் தரமிக்க உடைகள் கூட தான் அணிந்தவள் மூலமே வடிவமைக்கப்பட்டும் இருக்கலாம்.

ஆடை தொழிற்துறை விற்பனையாளர்களில் அடங்கும் அமெரிக்க நிறுவனமான "ஸ்பிரிட் ஹாலோவீன்" ( Spirit Halloween), நுகர்வோர் சார்ந்த கடைகளில் முன் தயாரிக்கப்பட்ட ஆடைகளை கொண்டு ஹாலோவீன் பருவ காலத்தில் வழங்கி வருகின்றது.

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Cosgrave, Bronwyn (2000). The complete history of costume & fashion : from ancient Egypt to the present day. New York: Checkmark Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8160-4574-7.
  2. "A Woman's Letter from London". The Sydney Morning Herald. 31 December 1900. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015 – via Trove.
  3. Bishop, Catherine (2015). Minding her own Business – Colonial businesswomen in Sydney. Sydney: NewSouth Publishing.

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடை&oldid=3806150" இலிருந்து மீள்விக்கப்பட்டது