அலெக்சாந்தர் பப்போவ்

(அலெக்சாண்டர் பப்போவ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அலெக்சாந்தர் இசுத்தெப்பானொவிச் பப்போவ் (Alexander Stepanovich Popov, உருசியம்: Алекса́ндр Степа́нович Попо́в; மார்ச் 16 [யூ.நா. மார்ச் 4] 1859 – சனவரி 13 [யூ.நா. திசம்பர் 31, 1905] 1906) உருசிய இயற்பியலறிஞர் ஆவார். மின்காந்த வானொலி அலைகளை முதன் முதலில் காட்சிப் படுத்தியவர்களில் இவரும் ஒருவர்.[1][2][3][4] எனினும் இவர் தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமம் கோரவில்லை.

அலெக்சாந்தர் பப்போவ்
Alexander Popov
பிறப்பு(1859-03-16)16 மார்ச்சு 1859
துரியான்சுக்கி ருத்னிக்கி, பெர்ம், உருசியப் பேரரசு (இன்றைய கிராசுனதுரீன்சுக்கி, சிவெர்த்லோவ்சுக் மாகாணம், உருசியா)
இறப்பு13 சனவரி 1906(1906-01-13) (அகவை 46)
சென் பீட்டர்சுபெர்கு, உருசியப் பேரரசு
அறியப்படுவதுவானொலி ஒலிபரப்பு
விருதுகள்செயின்ட் அன்னா விருது (2-ஆம், 3-ஆம்),
செயின்ட் இசுடனிலாசு விருது,
3-ஆம் அலெக்சாந்தர் விருது
இம்பீரியல் உருசிய தொழிநுட்பக் கழக விருது
கையொப்பம்

பப்போவ் உருசியக் கடற்படைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியபோது அவரை உயர் அதிர்வெண் கொண்ட மின் நிகழ்வுகளை ஆராய வழிவகுத்தது. 1895 மே 7 இல், தான் அமைத்த கம்பியில்லா மின்னல் கண்டறிதல் குறித்த ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார். இக்கருவி மின்னல் தாக்குதல்களில் இருந்து வானொலி சத்தத்தைக் கண்டறிய ஓர் உணரியைப் பயன்படுத்துவதன் மூலம் வேலை செய்தது. இந்த நாள் இந்த மே 7 ஆம் நாள் சோவியத் ஒன்றியத்தில் வானொலி நாளாகக் கொண்டாடப்பட்டு, தொடர்ந்து உருசியாவில் இந்நாள் நினைவுகூரப்படுகிறது. 1896 மார்ச் 24 இல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில், செயின்ட் பீட்டர்சுபர்கில் உள்ள பல்வேறு வளாகக் கட்டிடங்களுக்கு இடையில் 250 மீட்டர் வானொலி சமிக்ஞைகளை அனுப்பினார். அவரது இக்கண்டுபிடிப்பு மற்றொரு இயற்பியலாளரான ஆலிவர் லாட்சின் ஆய்வை அடிப்படையாகக் கொண்டது, அத்துடன் மார்க்கோனியின் படைப்புகளுடன் சமகாலத்தவர்.

குறிப்புகள்

தொகு
  1. Smith-Rose, Reginald Leslie (2013). "Alexandr Popov". Encyclopædia Britannica Online. Encyclopædia Britannica, Inc.. 
  2. McKenna, Joe (2007). "Aleksandr Popov's Contributions to Wireless Communication". IEEE Engineering Hall of Fame. Institute of Electrical and Electronic Engineers. Archived from the original on 10 November 2013. பார்க்கப்பட்ட நாள் 6 November 2013.
  3. (author name redacted) (January 1960). "Did Alexandr Popov invent radio?". NSA Technical Journal (US: National Security Agency) 5 (1): 35–41. http://www.nsa.gov/public_info/_files/tech_journals/aleksandr_popov.pdf. பார்த்த நாள்: 6 November 2013.  declassified 8 January 2008
  4. "Early Radio Transmission Recognized as Milestone". ஐஇஇஇ. {{cite web}}: Unknown parameter |accessmonthday= ignored (help); Unknown parameter |accessyear= ignored (help)

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்��ாந்தர்_பப்போவ்&oldid=3353435" இலிருந்து மீள்விக்கப்பட்டது