அமிர்தலால் நாகர்
அமிர்தலால் நாகர் (17 ஆகஸ்ட் 1916 - 23 பிப்ரவரி 1990) [2] இவர் இருபதாம் நூற்றாண்டின் முக்கிய இந்தி எழுத்தாளர்களில் ஒருவராவார். [3]இவரது படைப்பான அம்ரித் அவுர் விஷ் என்பது சாகித்திய அகாதமி விருது (1967) மற்றும் சோவியத் லேண்ட் நேரு விருது (1970) ஆகியவற்றை பெற்றது. 1981 ஆம் ஆண்டில் அமிர்தலால் நாகருக்கு இந்திய அரசு பத்ம பூசண் விருது வழங்கியது .
அமிர்தலால் நாகர் | |
---|---|
பிறப்பு | [1] ஆக்ரா, ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 17 ஆகத்து 1916
இறப்பு | 23 பெப்ரவரி 1990 இலக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா | (அகவை 73)
பணி | எழுத்தாளார் |
வாழ்க்கைத் துணை | பிரதிபா |
பிள்ளைகள் | குமுத், சரத் (குழந்தையாக சரத்), அச்சலா, ஆர்த்தி |
இவர் ஒரு எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் 7 ஆண்டுகளாக இந்திய திரையுலகில் தீவிர எழுத்தாளராக மாறினார். அகில இந்திய வானொலியில் 1953 டிசம்பர் முதல் 1956 மே வரை நாடக தயாரிப்பாளராக இருந்துள்ளார். இந்த கட்டத்தில் ஒரு வழக்கமான பணி எப்போதும் தனது இலக்கிய வாழ்க்கைக்கு ஒரு தடையாக இருக்கும் என்பதை அவர் உணர்ந்தார். எனவே அவர் பகுதி நேர எழுத்துக்கு தன்னை அர்ப்பணித்தார்.
பிரேம்சந்தின் உண்மையான இலக்கிய வாரிசாக பெரும்பாலும் மேற்கோள் காட்டப்பட்ட அமிர்தலால் நாகர் ஒரு இலக்கியவாதியாக தனது சொந்த சுயாதீனமான மற்றும் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி, இந்திய இலக்கியத்தின் மிக முக்கியமான மற்றும் பன்முக படைப்பு எழுத்தாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். பிரபல விமர்சகர் முனைவர் இராம் பிலாஸ் சர்மாவின் வார்த்தைகளில், "சந்தேகத்திற்கு இடமின்றி, அமிர்தலால் நாகர் ஒரு முக்கியமான புதின ஆசிரியராக நினைவுகூரப்படுவார். என்னைப் பொறுத்தவரை, அவர் புனைகதையின் மிகப் பெரிய சிற்பி. நிலையான [மனக்] இந்தி, அதே போல் தரமற்ற [கெய்ர்-மானக்] இந்தி இரண்டையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார் ” கூறுகிறார்.(சர்மா, அமிர்தலால் நகர் ரச்னாவலி, தொகுதி 1, ப. 47).
சுயசரிதை
தொகுநாகர் இந்தியாவின் ஆக்ராவிலுள்ள ஒரு முக்கிய குஜராத்தி குடும்பத்தில் கோகுல்புராவின் சௌரகே வாலி காலியில் 1916 ஆகஸ்ட் 17, அன்று பிறந்தார். அவர் 1990 பிப்ரவரி 23, அன்று இந்தியாவின் இலக்னோவின் சௌக்கில் இறந்தார். அவரது பெற்றோர் இராஜாராம் மற்றும் வித்யாவதி நாகர் ஆவர்.
1928 டிசம்பரில் இருவாரங்களுக்கொருமிறை வெளிவரும் ஆனந்த் என்ற இதழில் ஒரு கவிதையை முதன்முதலில் வெளியிட்டார். சைமன் கமிஷனுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தால் இந்த கவிதை ஈர்க்கப்பட்டது, இதில் காவலர்கள் தடியால் அடித்ததபோது அமிர்தலால் காயமடைந்தார்.
அவர் 1932 ஜனவரி 31 அன்று பிரதிபா என்பவரை (அசல் பெயர் சாவித்ரி தேவி அல்லது பிட்டோ) மணந்தார். அவர்களுக்கு நான்கு குழந்தைகள் (மறைந்த குமுத் நாகர், மறைந்த சரத் நாகர், முனைவர் அச்சலா நாகர் மற்றும் திருமதி. ஆரத்தி பாண்டியா) ஆகியோர்.
வேலைவாய்ப்பு
தொகுஅகில இந்திய யுனைடெட் காப்பீட்டு நிறுவனத்தின் லக்னோ அலுவலகத்தில் அனுப்பும் எ��ுத்தராக நகர் 18 நாட்கள் பணியாற்றினார். அவர் நவல் கிஷோர் பதிப்பகத்தின் வெளியீட்டுப் பிரிவிற்கும், 1939 இல் மாதுரியின் தலையங்க அலுவலகத்திற்கும் தன்னார்வ சேவைகளை வழங்கினார். டிசம்பர் 1953 முதல் மே 1956 வரை லக்னோவின் அகில இந்திய வானொலியில் (ஆகாஷ்வானி) நாடக தயாரிப்பாளராக பணியாற்றினார். ஆனால் இந்த பதவியை விட்டு வெளியேறினால்தான் தனது இலக்கிய முயற்சிகளில் தனது நேரத்தையும் கவனத்தையும் செலுத்த முடியும் என்பதால் அப்பணியை விட்டு வெளியேறினார்.
திரைப்படங்கள்
தொகு1940 முதல் 1947 வரை, பம்பாய் (இப்போது மும்பை), கோலாப்பூர், மற்றும் சென்னை (மெட்ராஸ்) ஆகிய இடங்களில் உள்ள திரையுலகிற்காக திரை நாடகங்களையும் வசனங்களையும் நாகர் எழுதியுள்ளார். ஒரு மொழியின் திரைப்படங்களை இன்னொரு மொழியில் மொழிபெயர்க்கும் கலையை உள்ளடக்கிய திரைப்பட டப்பிங்கில் நிபுணத்துவம் பெற்ற ஆரம்பகால முன்னோடிகளில் இவரும் ஒருவர். அவர் புக்கராவிலிருந்து நசீருதீன் என்றப் படம் , உருசிய மொழியிலிருந்து சோயா மற்றும் தமிழிலிருந்து எம். எஸ். சுப்புலட்சுமியின் மீரா போன்றத் திரைப்படங்களை இந்திக்கு மாற்றினார்.
குறிப்புகள்
தொகு- ↑ "Amritlal Nagar". www.goodreads.com. பார்க்கப்பட்ட நாள் 2 March 2018.
- ↑ "Nāgara, Amṛtalāla, 1916-1990". Virtual International Authority File. பார்க்கப்பட்ட நாள் 5 August 2013.
- ↑ Profile பரணிடப்பட்டது 15 திசம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம் www.famousauthorshub.com.