அப்பம்
அப்பம் அல்லது "ஆப்பம்" என்று அழைக்கப்படும் இப்பண்டம் இந்���ியா மற்றும் இலங்கையில் பிரபலமான ஒரு தோசை வகையை சார்ந்த தென்னிந்தியா உணவாகும். இது அரிசி மாவில், தேங்காய் பால் கலந்து செய்யப்படுகின்றது. ஆப்பம் மொத்தம் நான்கு வகையில் தயாரிக்கப்படுகிறது. அவை வெள்ளையாப்பம் (சாதா ஆப்பம்), பாலாப்பம், முட்டையாப்பம், அப்பம் (தென்னிந்தியாவில் கிறுத்துவர் வழிபாட்டில் சிறியளவில் செய்யபடுவது) என நான்கு வகைகளில் தயாரிக்கபடுகிறது.
Aappam | |
மாற்றுப் பெயர்கள் | ஆப்ப (சிங்களம்) |
---|---|
வகை | தோசை வகை |
தொடங்கிய இடம் | இலங்கை, தென்னிந்தியா |
முக்கிய சேர்பொருட்கள் | அரிசி மாவு, தேங்காய்ப் பால் |
ஆப்பம் சுடுவதற்கான பாத்திரம் ஆப்பச்சட்டி அல்லது ஆப்பக்கல் எனப்படுகிறது. ஆப்பம் அது சுடப்படும் சட்டி போன்ற வடிவத்தில் வருகிறது. உட்குழிவாக அமையும் ஆப்பத்தின் நடுவில் முட்டையை உடைத்துப் போட்டுச் சுடும்போது முட்டை ஆப்பமும் சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டுச் சுடும்போது பால் ஆப்பமும் கிடைக்கின்றன.[1] மேலும் ஆப்பத்திற்கு தேங்காய் பால் சரியான இணை பதார்த்தமாக இருந்தாலும் வரமிளகாய் தேங்காய் சட்னி ஒரு காரமான இணை பதார்த்தமாக சேர்த்து கொள்ளப்படுகிறது.
அப்ப வகைகள்
தொகு- வெள்ளை அப்பம்
- பால் அப்பம்
- முட்டை அப்பம்
- கருப்பட்டி அப்பம்
அப்பமும் கதைகளும்
தொகு- குரங்கு அப்பம் பகிர்ந்த கதை
- இயேசு அப்பம் பகிர்ந்த கதை