2023 மொராக்கோ நிலநடுக்கம்
2023 மொராக்கோ நிலநடுக்கம் (2023 Morocco earthquake) 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதியன்று இரவு அட்லாண்டிக்கு மற்றும் மத்தியதரைக் கடல் எல்லையை ஒட்டிய வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இரவு 11.11 மணிக்கு மக்கள் தூக்கத்தில் இருந்த போது நிலநடுக்கம் ஏற்பட்டது.[1] நிலநடுக்கம் சுமார் 20 நொடிகள் நீடித்ததாக கூறப்படுகிறது. மொராக்கோ நாட்டின் பல பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டது. சக்திவாய்ந்த இந்நில நடுக்கத்தில் 296 எண்ணிக்கைக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதியன்று காலையில் தகவல்கள் வெளியாகின.[2] 153 பேர் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.[3]
நிலநடுக்க அளவு | Mw 6.8 |
---|---|
ஆழம் | 18.5 km (11.5 mi) |
நிலநடுக்க மையம் | 31°06′36″N 8°26′24″W / 31.110°N 8.440°W |
வகை | சாய்ந்த-உந்துதல் |
பாதிக்கப்பட்ட பகுதிகள் | மொரோக்கோ |
அதிகபட்ச செறிவு | VIII (Severe) |
உயிரிழப்புகள் | 820+ இறப்பு, 672+ காயம் |
மராகேசூக்கு தென்மேற்கே 71 கிமீ (44 மைல்) தொலைவில் உள்ள அட்லசு மலைத்தொடரின் உயரமான பகுதியான கிராண்டு அட்லசு பகுதியில் 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் 6.9 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.[4][5] பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து நகரமே கட்டிடக் குவியலாக காட்சியளிப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "மொராக்கோ நிலநடுக்கம்: நொடியில் சரிந்த கட்டடங்கள் - தூக்கத்தில் பறிபோன உயிர்கள் - நள்ளிரவில் நடந்தது என்ன?". BBC News தமிழ். 2023-09-09. பார்க்கப்பட்ட நாள் 2023-09-09.
- ↑ தினத்தந்தி (2023-09-09). "மொராக்கோ நிலநடுக்கம்: ��யிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-09-09.
- ↑ "மொராக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 296 பேர் பலி". தினமணி. https://www.dinamani.com/world/2023/sep/09/powerful-earthquake-strikes-morocco-4069800.html. பார்த்த நாள்: 9 September 2023.
- ↑ "Morocco earthquake: 296 killed as buildings damaged". BBC News (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2023-09-08. பார்க்கப்பட்ட நாள் 2023-09-09.
- ↑ Eljechtimi, Ahmed (2023-09-09). "Powerful earthquake kills 'at least' 296 in Morocco, govt says". Reuters (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-09.
வெளி இணைப்புகள்
தொகு- ReliefWeb's main page for this event.